ராதிகா சொன்ன வார்த்தையால் கோபி கோபப்பட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீண்டும் ஈஸ்வரி கோபி விஷயத்தை பற்றி பேச பாக்யா முடிவில் உறுதியாக இருக்க நீ கேச வாபஸ் வாங்குகிற வரைக்கும் நான் இப்படித்தான் பேசிகிட்டு இருப்பேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். உடனே செல்வி பொத்தி பொத்தி பாத்தாலும் நீ மருமக தூக்கி போட்டு மிதிச்சாலும் பையன் அதனால அந்த அம்மா அப்படி பேசிட்டு போகுது நீ ஜெயிலுக்கு போனப்போ அந்த அம்மா வெளியவே கூட்டிட்டு வந்து இருக்க கூடாது என்று சொல்லிவிட்டு எல்லா ஆனாலும் நீ கேச வாபஸ் வாங்காத அக்கா என்று சொல்லுகிறார் செல்வி. யார் சொன்னாலும் நான் கேஸ் வாப்பஸ் வாங்க மாட்டேன் என்று பாக்யா முடிவில் உறுதியாக இருக்கிறார்.
மறுபக்கம் இனியா டைம் ஆயிடுச்சு டாடி அம்மா தேடிக்கிட்டு இருப்பாங்க வீட்ல விட்டுருங்க என்று சொல்ல கோபி இனியவை கூட்டி வர பாக்கியா வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார். கோபி இனியாவே இறக்கிவிட்டு பாக்யாவை கூப்பிட்டு நம்ம பொண்ண பத்திரமா பாத்துக்கோ இனிய கஷ்டத்துல இருக்கா என்று சொல்ல பாக்யாவும் தலையாட்டி விட்டு உள்ளே கூட்டிச் செல்கிறார். வீட்டுக்கு வந்த கோபி மயுவிடம் தூங்கலையா என்று கேட்க இல்ல டாடி உங்களுக்காக தான் வெயிட் பண்றேன் உங்ககிட்ட பேசணும் என்று சொல்ல டைம் ஆயிடுச்சு நீ போய் படுத்துக்கோ நாளைக்கு பேசிக்கலாம் என்று சொன்னவுடன் கோபியும் கிளம்ப ராதிகா நிற்க வைத்து கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். என் வாழ்க்கையை எதுக்கு சீரழிச்சீங்க எப்ப பாத்தாலும் உங்க பசங்க புராணம், பாக்யா உங்க அம்மா இத பத்தி தான் பேசிகிட்டு இருக்கீங்களா என்றெல்லாம் கேட்கிறார். உன்கிட்ட சண்டை போடுற அளவுக்கு எனக்கு தெம்பு இல்லை என்று சொல்கிறார் கோபி.
ராதிகா பேசிக் கொண்டே போக ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை இழந்த கோபி நீ என் வாழ்க்கையில் வந்ததுக்கப்புறம் தான் என்னோட சந்தோஷமே போச்சு என் பொண்ணு சொன்னதுல எந்த தப்பும் கிடையாது. என் குடும்பத்தில் இருக்கிற எல்லாரையும் எதிர்த்து உன் பக்கம் நின்னது தான் நான் பண்ண பெரிய தப்பு. என் பொண்ணு சூசைட் அட்டென்ட் பண்ணதுல இருந்து எங்க அம்மா ஜெயிலுக்கு போன வரைக்கும் எல்லாமே உன்னால தான் நீ தான் காரணம் என்று கோபி ராதிகாவை சொல்ல ராதிகா அதிர்ச்சி அடைந்து நிற்கிறார்.
அப்போ புடிக்காத வாழ்க்கை எதுக்கு இங்க வாழ்ந்து கிட்டு இருக்கீங்க வெளியே போங்க என்று சொல்ல இப்ப சொல்ற இல்ல இதுக்காக தான் எப்ப பார்த்தாலும் வெளியே போ வீட்ல இருக்காதா என்றெல்லாம் பேசறது தான் கடுப்பா இருக்கு என்று சொல்லி இதெல்லாம் வீடா இந்த வீட்ல எவனாவது இருப்பானா அதுக்கு ரோட்ல செத்து கிடக்கலாம் என்று சொல்லிவிட்டு கோபி கோபமாக கதவை சாத்திக் கொண்டு வெளியே சென்று விடுகிறார்.
ரூமில் இனியா உட்கார்ந்து கொண்டிருக்க உனக்கு எதுவுமே சாப்பாடு வேண்டாம் என்று கேட்கிறார் இல்லம்மா ஐஸ்கிரீம் சேட் ஐட்டம்ஸ் எல்லாம் சாப்பிட்டேன் அதனால வேண்டாம் என்று சொல்லுகிறார் அப்பா பொண்ணு ட்ரிப் எப்படி போச்சு என்று கேட்க நல்லா தான் போச்சு என்று சொல்லுகிறார் பிறகு நான் தூங்குறமா என்று சொல்ல பாக்யா என்மேல் கோபம் போலயா என்று கேட்க உன் மேல எந்த கோவல்ல என்று சொல்ல உடனே ராதிகா வீட்டுக்கு போய் எதற்கு சண்டை போட்டேன் என்று கேட்கிறார் காலேஜிலிருந்து வந்தேன் கோவமா உன்கிட்ட சண்டை போட்ட ஆனா உங்க டாடி தான் காரணம்னு நீ சொன்ன நீ சொன்னது எனக்கு சரின்னு பட்டுச்சு அதுக்காக தான் டாடி கிட்ட கேக்க போன ஆனா அங்க டாடி இல்ல நான் ராதிகா உன்கிட்ட மரியாதையாக தான் பேசினா அந்த அம்மாதான் ஓவரா பேசினாங்க அதனால தான் நான் பதிலுக்கு பேசினேன் என்று சொல்கிறார். என்கிட்ட வீட்ல சண்டை போட என்ன பத்தி வெளியே பேசினா அவங்ககிட்ட சண்ட போடுற என்று பாக்கியா சொல்கிறார்.
பாக்யாவும், இனியாவும் என்ன பேசிக் கொள்கின்றனர்? இனியாவின் பதில் என்ன என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.