Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அமிர்தா கேட்ட கேள்வி, எழில் சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial today episode update

ஈஸ்வரி ரெஸ்டாரண்டில் விளக்கேற்றி பூஜையை ஆரம்பித்து வைக்க வேலை பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரியை பாக்யா ரெஸ்டாரன்ட்க்கு கூட்டி வந்து உட்காருங்க அத்தை நான் போய் ரெடி பண்ணிட்டு வரேன் என்று கிச்சனுக்குள் வர செல்வி எல்லாத்தையும் ரெடி பண்ணி வைத்து விடுகிறார். சரி நான் போய் அத்தையை கூட்டிட்டு வரவா என்று சொல்ல நீ போய் கூட்டிட்டு வா அக்கா ரெடி ஆயிடுச்சு என்று செல்வி சொல்லுகிறார். உடனே அங்கு வேலை செய்பவர் ஒன்னுக்கு ரெண்டு வாட்டி நல்லா யோசிச்சு பாத்துக்கோங்க அக்கா. அவங்க தான் விளக்கு ஏத்தணுமா என்று கேள்வி கேட்க பாக்யா டென்ஷன் ஆகிறார். நானே அவங்கள கஷ்டப்பட்டு தான் சமாதானபடுத்தி கூட்டிட்டு வந்திருக்க யாருன்னா எதனா பேசினீங்க இங்க வேலை செய்றவங்க கூட பார்க்க மாட்டேன் வேலையை விட்டு நிறுத்திடுவேன் என்று சொல்லுகிறார்.

பிறகு ஈஸ்வரியை கூப்பிட்ட பாக்யா நீ வேணா விளக்கேத்து பாக்கியம் நான் உன் பக்கத்துல இருக்கேன் என்று சொல்ல உங்களை விளக்கேத்த தான் கூட்டிட்டு வந்தேன் வாங்க விளக்கேத்துங்க என்று உள்ளே கூட்டி சென்று விளக்கேற்றி பூஜையை ஆரம்பிக்கிறார் ஈஸ்வரி. பிறகு நான் வெளியே உட்கார்ந்திருக்கேன் என்று சொல்ல ராமமூர்த்தியின் போட்டோவிடம் வந்து எல்லா நேரத்துலயும் பாக்கியாக்கு சப்போட்டா இருந்திருக்கீங்க அதே மாதிரி இப்பயும் கடவுளாய் இருந்து அவளுக்கு எந்த ஒரு தப்பும் நடக்காம பார்த்துக்கோங்க என்று சொல்லிவிட்டு உட்காருகிறார். மறுபக்கம் அமிர்தாவின் அம்மா மளிகை சாமான் எதுவுமே இல்ல லிஸ்ட் எழுதி கொடு வாங்கிட்டு வரட்டும் என்று சொல்ல, அமிர்தா அவரே நைட்டெல்லாம் தூங்காம இருந்தாரே விடு வாங்கிக்கலாம் என்று சொல்லி சமாளிக்கிறார். அதெல்லாம் இருக்கட்டும் உனக்கு முதல்ல பிளாக் காபி போட்டு தரேன் என்று சொல்ல வேண்டாம் என சொல்லுகிறார். உடனே எழில் காய்கறி மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து நானே இன்னைக்கு நிலா பாப்பாக்கு சாம்பார் வச்சி தோசை ஊத்தி கொடுக்கிறேன் என்று சொல்லி கிச்சனுக்கு வர அமிர்தாவும் வந்து எதுக்கு காசு இல்லாத டைம்ல இப்படி இவ்ளோ காய் வாங்கிட்டு வரீங்க ஏற்கனவே உன்ன கஷ்டப்படுத்துறதே எனக்கு கஷ்டமா இருக்கு இதுல நிலா பாப்பாவும் கஷ்டப்படணுமா நான் அதுக்கு விட மாட்டேன் என்று சொல்லிவிட்டு சாம்பார் வைத்துவிட்டு தோசை விடுகிறார். நான் வேணா வேலைக்கு போறேன் என்று அமிர்தா சொல்ல நிலா பாப்பாவ யார் பார்த்திருப்பாங்க என்று கேட்கிறார். அம்மா கிட்ட விட்டுட்டு போறேன் என்று சொல்ல நம்ப ரெண்டு பேரும் நிலா பாப்பாவ பாக்காம இருக்க முடியுமா கொஞ்ச நாளைக்கு பொறுமையா இரு எல்லாமே பார்த்துக்கலாம் என்று சொல்லி அமிதாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு நிலாவிற்கு தோசை ஊற்றி ஊட்டி விடுகிறார்.

மறுபக்கம் ரெஸ்டாரண்டில் பிரியாணி தயாராகி வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது பார்சல் கட்டி எல்லா பிரியாணியும் பக்கத்தில் போட்டு ரெஸ்டாரண்டில் அடுக்கி வைக்கின்றனர். பரபரப்பாக வேலை போய்க்கொண்டிருக்க அதனை ஈஸ்வரி பார்த்து சந்தோஷப்படுகிறார்.

பாக்யா கிச்சனுக்கு வந்து எல்லாமே ரெடியா இருக்கு இல்ல யாருமே நம்மளோட கிச்சனுக்கு வந்து வெளியே வெயிட் பண்ண கூடாது எல்லாரும் வந்து ரெண்டு நிமிஷத்துல வாங்கிட்டு போற மாதிரி இருக்கணும் என்று செப்பிடம் சொன்ன அப்படியே பண்ணிடலாம் மேடம் என்று சொல்லிவிடுகிறார். பாக்கியா சென்ற பிறகு அப்படி எல்லாம் நடக்க விட்டுருவனா என்ன பண்ணப் போறேன் பாருங்க என்று மாஸ்டர் பிளான் போடுகிறார்.

அந்த நேரம் பார்த்து பழனிச்சாமி ரெஸ்டாரண்டுக்கு வருகிறார். என்ன மேடம் பரபரப்பா வேலை போயிட்டு இருக்கா என்று சொல்லலாமா சார் நீங்க உட்காருங்க நான் வந்துடுறேன்னு சொல்ல, சரி போங்க என் அம்மாகிட்ட பேசிகிட்டு இருக்கேன் என்று ஈஸ்வரயிடம் வந்து நலம் விசாரிக்கிறார். பிறகு சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க பாக்யா பழனிச்சாமி இடம் ஏதாவது சாப்பிடுறீங்களா என்று கேட்க வேணாங்க மேடம் இப்பதான் சாப்பிட்டு வந்தேன் நீங்க போய் வேலையை பாருங்க என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து முதுகு வலி வந்தது போல ஈஸ்வரி செய்ய என்னா சேர்த்து ரொம்ப நேரமா ஒரே இடத்துல உட்கார்ந்து இருக்க முடியல பாக்யா நீ ஒரு ஆட்டோ புடிச்சு கொடு நான் வீட்டுக்கு போறேன் என்று சொல்ல கொஞ்ச நேரம் இருவத்த நீங்க எப்படி ஒண்டியா போக முடியும் நானும் வந்துடறேன் என்று சொல்ல இல்ல பாக்யா அப்ப மட்டும் புடிச்சு கொடு நானே போய் ஒன்னும் பிரச்சனை இல்லை என்று சொன்னவுடன் பழனிச்சாமி ஆட்டோ எதுக்கு புடிக்கணும் நான்தான் இருக்கல நான் கூட்டிட்டு போய் விடுகிறேன் என்று சொல்ல ஈஸ்வரி உங்களுக்கு எதுக்கு சிரமம் வேண்டாம் என்று மறுக்க அப்போ என் மேல நம்பிக்கை இல்லையா நான் உங்களை பத்திரமா கூட்டிட்டு போக மாட்டேனா என்று கேட்க பாக்யா உங்களுக்கு கபேல வேற வேல இருக்கும் என்ன பண்ணுவது என்று கேட்க அதெல்லாம் ஆள் இருக்காங்க மேடம் நான் கூட்டிட்டு போறேன் நீங்க போய் உங்க வேலைய பாருங்க என்று சொல்ல பாக்கியா பழனிச்சாமிக்கு நன்றி சொல்லுகிறார்.பாக்யாவை கிச்சனில் கூப்பிடுகின்றனர் சரி என இவர்களை அனுப்பி வைத்து விட்டு பாக்கியா கிச்சனுக்கு செல்கிறார்.

ஈஸ்வரியை கூட்டி வந்த பழனிச்சாமி ஈஸ்வரி இடம் என்ன கேட்கிறார்?அதற்கு ஈஸ்வரி என்பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial today episode update