Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கதறி அழுத ஈஸ்வரி,பாக்யா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial today episode

பாக்யா குழப்பத்தில் இருக்க,கோபி சந்தோஷமாக இருக்கிறார்.

தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யாவின் ரெஸ்டாரன்ட்க்கு சீல் வைத்து விடுகின்றனர். இதனால் பாக்கியா என்னோட பசங்களுக்கு நான் எப்படி செய்ரனோ அப்படித்தானே இதுல செஞ்ச இது எப்படி தப்பாச்சு இந்த பிரியாணி நல்லாதான் இருக்கு என்று ஒரு டப்பாவை எடுத்து மோந்து பார்க்கிறார்.

நான் எதுவும் தப்பா பண்ணல நான் எல்லாமே கஷ்டப்பட்டு தான் பண்ண ஆனா இப்படி சீல் வச்சுட்டாங்களே என்று மீண்டும் மீண்டும் வருத்தப்பட்டு பேசிக்கொண்டே இருக்க பழனிச்சாமி கடையிலும் லைஃப்லையும் பிரச்சனை வரத்தான் செய்யும் மேடம் நம்ப தான் கடந்து வரணும் என்று சொல்ல வேற எந்த பிரச்சனையா இருந்தாலும் நான் கடந்து வந்திருப்பேன் ஆனால் நான் செய்ற சாப்பாட்டை குறை சொல்லிட்டு போயிட்டாங்க தரம் இல்லைன்னு சொல்லிட்டாங்க அது என் மனசு எவ்வளவு கஷ்டப்படுத்தி இருக்கு என்று சொல்ல நீங்க அம்மாவ கூட்டிட்டு வீட்டுக்கு போக எழில் என்று சொல்லுகிறார். இவ்வளவும் பாத்துட்டேன் இந்த சாப்பாடு என்ன பண்றது என்று கேட்க அதை நாங்க பார்த்துக்கிறோம் நீங்க வீட்டுக்கு போங்கம்மா என்று அமிர்தா சொல்லுகிறார் நான் இவ்வளவுத்தையும் பார்த்துட்டேன் இது என்ன பண்றதுனும் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு எல்லா உணவுகளையும் வண்டியில் ஏற்றுகின்றன.

மறுபக்கம் கோபி இதையெல்லாம் போனில் பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார். ராதிகாவின் அம்மா வேலைக்கு கூட போகாம அப்புறம் என்ன பார்த்துட்டு சிரிச்சிட்டு இருக்காரு என்று கேட்க ஏதாவது படம் பார்ப்பாரு என்று சொல்லுகிறார் மூன்று நாட்கள் சீல் வைத்தது விஷயம் தெரிந்த கோபி இடியட் தப்பு பண்ணிட்டானுங்க மூணு வருஷமாவது மூடி இருக்கணும் என்று அப்செட் ஆகி கத்த அங்கு வந்த ராதிகா என்ன ஆச்சு எதுக்கு இப்படி கத்துக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க உனக்கு விஷயமே தெரியாதா அந்த பாக்யாவோட ரெஸ்டாரண்டுக்கு சீல் வச்சுட்டாங்க கெட்டுப்போன கரிய வச்சு சமைச்சு கொடுத்தா பின்ன என்ன பண்ணுவாங்க மூணு நாள் இல்ல மூணு வருஷமாவது சீல் வைக்கணும் என்று பேச அவங்க அப்படி பண்ண மாட்டாங்க ரொம்ப நாளா அவங்க கைல நான் சாப்பிட்டு இருக்கேன் அது மட்டும் இல்லாம என்னோட ஆபீஸ் சமைச்சு கொடுத்திருக்காங்க அவங்க சமையலில் குறை வர வாய்ப்பே இல்லை என்று சொல்ல அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல அவர் சுமாரா தான் சமைப்பா என்று கோபி சொல்லுகிறார். ராதிகா கோபியை சந்தேக பார்வையுடன் பார்க்க நீ என்னை எதுக்கு அப்படி பாக்குற நான் ஒன்னும் பண்ணல என்று சொல்லுகிறார் அதை தான் கேட்கிறேன் உங்களுக்கோ நடந்து இருக்கும் சம்பந்தம் இருக்கா என்று கேட்க நான் ஜென்டில்மேன் நான் எதுவும் பண்ணல என்று நைசாக சொல்லிவிட்டு எழுந்து சென்று விடுகிறார்.

ஈஸ்வரி ஜெனி மற்றும் இனியா மூவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து பாக்யாவை எழிலும் செழியணும் கூட்டி வருகின்றனர். இனியா கேள்வி மேல் கேள்வி கேட்க பாக்கியா எதுவும் சொல்லாமல் அமைதியாக நிற்கிறார். எழில் அவரை உட்கார வைத்துவிட்டு இனியாவிடம் அம்மாவெல்லாம் அரெஸ்ட் பண்ண மாட்டாங்க என்று சொல்லுகிறார். கடைக்கு சீல் வச்சது உண்மையா என ஜெனி கேட்க அது உண்மைதான் ஆனால் மூன்று நாளைக்கு மட்டும் தான் என்று செழியன் சொல்லுகிறார்.

எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த பாக்யாவை செல்வி நீ எழுந்து உள்ள போக யாராவது வந்து ஏதாவது கேட்டுகிட்டே இருப்பாங்க நீ போய் ரெஸ்ட் எடு ரூமுக்கு போ போ என்று இரண்டு வாட்டி சொல்ல பாக்யாவும் எழுந்து ரூமுக்கு செல்ல, ஈஸ்வரி பாக்யாவின் கையைப் பிடித்து மன்னிப்பு கேட்கிறார் எல்லாத்துக்கும் நான்தான் காரணம் என்று அழுகிறார். நீங்க எப்படி அத்த காரணமாக முடியும் அதெல்லாம் ஒன்னும் இல்ல என்று சொல்ல நான் தொட்ட காரியம் தொடங்காதெனும் எல்லாரும் சொல்லும் போதே நான் நினைச்சி இருக்கணும் பெரிய இவ மாதிரி போய் தொடங்கி வச்சுட்ட என்ன மன்னிச்சிடு பாக்கியா என்று அழுகிறார். ஏற்கனவே ரெஸ்டாரன்ட் விஷயத்துல எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல இப்ப நீங்களும் இப்படி பேசணும் நான் என்ன பண்றது அத்தை என்று கேட்கிறார் பாக்யா.

ஈஸ்வரியை எழில் மற்றும் செழியன் இருவரும் சமாதானப்படுத்த பாக்யா மேலே சென்று விடுகிறார்.பாக்யா என்ன செய்ய போகிறார்?எழில் சொன்ன வார்த்தை என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial today episode
baakiyalakshimi serial today episode