தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இனியா பப்புக்கு சென்று பிரச்சனையில் சிக்கிய நிலையில் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அதாவது பாக்கியா வீட்டுக்கு வந்த கோபி இனியாவோட இந்த நிலைமைக்கு காரணம் பாக்கியாவோட வளர்ப்பு தான் என்று பழி போடுகிறார்.
மேலும் இனிமே இனியா என்கூடவே இருப்பாய் என்று சொல்லி இனி அதை தன்னுடன் அழைத்துச் செல்ல முயற்சி செய்ய ஈஸ்வரி தடுத்து நிறுத்த யார் சொன்னாலும் என் பொண்ணு என் கூட தான் இருப்பா என்று கோபி அடம் பிடிக்கிறார்.
இறுதியாக இனியா கோபியின் கையில் உதறி இல்ல டாடி நான் அம்மாவோடவே இருக்கேன் என்று பதிலடி கொடுக்க ஈஸ்வரி வெளிய போடா என்று துரத்தி விடுகிறார். இதனால் பல்பு வாங்கி கோபி வீட்டை விட்டு வெளியேறுகிறார்.