Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வீட்டுக்கு வந்த கோபிக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ராதிகாவால் கோபிக்கு காத்திருந்த ஷாக்.. இன்றைய பாக்யலக்ஷ்மி பாண்டியன் ஸ்டோர் எபிசோட்

Baakiyalakshmi and Pandian Stores Serial Episode Update 10.05.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ். இரண்டு சீரியல்களில் மெகா சங்கம் என்ற பெயரில் ஒன்றாக இணைந்து ஒரு மணி நேரம் எபிசோடாக ஒளிபரப்பாகி வருகின்றன. இன்றைய எபிசோடில் அனைவரையும் சாப்பிட அழைக்கின்றனர். பாக்கியலட்சுமி குடும்பத்தில் 8 பேருக்கும் 8 பேர் என மொத்தம் 16 பேர் என்பதால் ஒன்றாக அமர்ந்து சாப்பிட முடியாது என்ற காரணத்தினால் முதலில் ஆண்கள் சாப்பிடட்டும் என்ன தனம் ஐடியா கொடுக்க பாக்கியாவும் அதுவும் சரிதான் என கூறுகிறார். பிறகு எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது கோபி லைட்டாக சாப்பிடுவதைப் பார்த்த மூர்த்தி என்ன மச்சான் நீங்க இப்படி சாப்பிடுங்க நல்லா சாப்பிடுங்க என நான்கைந்து இட்லியை வாரி வைக்கிறார். அதேபோல் ஜீவா செழியனுக்கும் இட்லியை வாரி வைத்து சாப்பிடச் சொல்கிறார்.

அதன் பின்னர் மீனா ஐஸ்வர்யா மற்றும் இனிய ஆகியோர் பேசிக்கொண்டிருக்கும்போது மீனாவும் ஐஸ்வர்யாவும் மாறி மாறி ஒருவரை ஒருவர் கலாய்த்து கொள்கின்றனர். மேலும் கண்ணன் ஐஸ்வர்யா திருமணத்திற்கு ஜெனி, இனியாவும் உதவி செய்ததைப் பற்றி பேசுகின்றனர். கல்யாணத்திற்குப் பிறகு நடந்த விசயங்களை பேசி சிரிக்கின்றனர். ஐஸ்வர்யா சைடு கேப்பில் மீனாவை கோர்த்துவிட்டு கலாய்க்க செய்கிறார்.

அப்படியே இந்தப்பக்கம் கண்ணன் செழியன், ஜீவா ஆகியோர் பேசிக் கொண்டிருக்கின்றனர். கண்ணன் ஐஸ்வர்யாவை கூட்டிக்கொண்டு பரோட்டா சாப்பிட சென்று போலீசைப் பார்த்து பயந்து ஓடிய கதையை சொல்லி அனைவரும் சிரிக்கின்றனர். அதன்பிறகு செழியன் சாப்பிடுகிறீர்களா என கேட்க அதெல்லாம் வேண்டாம் என கதிர் கூறுகிறார். இந்த நேரத்தில் மூர்த்தியும் வந்துவிட அவரிடமும் சரக்கு பற்றி கேட்க அவரும் வேண்டாம் என கூறுகிறார்.

அதன்பிறகு கோபியும் ரூமுக்கு வந்து வைக்க நீ இங்க வந்து தூங்க போறியா என கேட்க இனியா சிரிக்கிறார். உன்னுடைய ரூம்ல யாருக்கும் தர என கேட்க மீனா, ஐஸ்வர்யா அக்காவும் இருக்காங்க நான் அங்க தான் தூங்க போறேன் உங்களோட வேற ரெண்டு பேர் வராங்க. மூர்த்தி மாமாவும் கண்ணன் மாமாவும் தான் உங்க கூட தூங்க போறாங்க என சொல்லிக்கொண்டே இருக்க அந்த நேரத்தில் கரெக்டாக வந்து விடுகின்றனர்‌.

மூர்த்தி மற்றும் கண்ணனுக்கு இடையே சிக்கிய கோபி.. ராதிகா போன் செய்ய காத்திருந்த ஷாக் – பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமம் எபிசோட் அப்டேட்.!!
பிறகு இந்த பெட்டில் 3 பேர் தூங்க முடியாது என கோபி சொல்ல அப்படின்னா நீங்க மொட்டை மாடியில் போய் படுத்துக்கோங்க என கூறுகிறார் கண்ணன். பிறகு மூர்த்தி அப்போ நாங்க வேணா மொட்டை மாடியில் படுத்துக் கொள்கிறேன் என தொல்ல இல்ல வேண்டாம் அட்ஜஸ்ட் பண்ணி படுத்துக்கலாம் என சொல்கிறார். ஆளுக்கு ஒரு பக்கம் படுத்துக்கொள்ள நடுவில் சிக்கிக் கொள்கிறார். கண்ணன் பாட்டு வேற வைத்து கடுப்பேத்துகிறார்.

பிறகு கொஞ்ச நேரத்தில் இருவரும் தூங்கி விட்டார் கோபி கடையில் யாரோ உளுந்து மூட்டையின் மீது பால் பாக்கெட்டுகளை வைத்தது போல நினைத்து சத்தம் போட்டு கத்துகிறார். கண்ணன் ஐஸ்வர்யா என நினைத்து கோபியும் மீது காலைத் தூக்கிப் போட்டு கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கிறார். பிறகு கோபி கண்ணன் காலை தள்ளி விட்டு திட்டி விடுகிறார்.

இந்தப் பக்கம் செழியனின் ரூமில் படுக்க ஜீவா மற்றும் கதிர் வர செழியன் உனக்கு எப்படி படுக்கறது என சொல்ல பிறகு இருவரும் எழிலுடன் மொட்டை மாடியில் படுத்திக் கொள்கிறோம் என சொல்லி கிளம்பி விடுகின்றனர்.

இந்த பக்கம் ஈஸ்வரி முல்லைக்கும் ஐஸ்வர்யாவுக்கும் ஒரு ஒரு குழந்தை பிறந்துவிட்டால் 4 குழந்தைகள் ஆகிடும் என சொல்ல முல்லை வருத்தப்படுகிறார். பிறகு சரி உள்ளே போனதும் பாக்கியா அவங்களுக்கு நீ ட்ரீட்மெண்ட் எடுக்க வேண்டி தெரியாது நான் சொல்லல என கூறுகிறார். அத்தை சொன்ன மாதிரி கூடிய சீக்கிரம் உனக்கும் ஐஸ்வர்யாவுக்கும் குழந்தை பிறக்கும் என பாக்கியா கூறுகிறார்.

இந்தப் பக்கம் மூர்த்தி மற்றும் கண்ணனுக்கு இடையே கோபி சிக்கிக் கொண்டு இருக்க அப்போது ராதிகா மெசேஜ் செய்ய கோபியும் தூங்கல என ரிப்ளை செல்கிறார். உடனே ராதிகா போன் அடிக்க பிறகு மூர்த்தி இந்த நேரத்துல போன் பண்றா எனக் கேட்க கோபி போனை எடுக்காமல் விட்டு விடுகிறார். பிறகு கோபி 11 மணிக்கு என்ன ஆபீஸ் கால் வேண்டியிருக்கு. அப்படி போன் பண்ற உங்களோட வியாபாரத்தை அடியோடு நிறுத்திவிட சொல்கிறார். கோபியை படுக்கச் சொல்லி அவருக்கு அறிவுரை வழங்குகிறார். கண்ணன் போதும் அவருக்கு காதுல ரத்தம் வந்திருக்க போகுது என கலாய்க்கிறார். இவர்களுக்கு இடையே சிக்கிய கோபி தலையில் அடித்துக்கொள்ள இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi and Pandian Stores Serial Episode Update 10.05.22
Baakiyalakshmi and Pandian Stores Serial Episode Update 10.05.22