தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களான பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கிய லட்சுமி ஆகிய சீரியல்கள் மெகா சங்கமம் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி வருகின்றது.
அந்த வகையில் இன்றைய எபிசோடில் கீழே வந்த கோபி போட்டோக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்து இந்த போட்டோக்கள் ராதிகாவின் கண்ணில் படாமல் எப்படி மறைப்பது என திட்டம் போடுகிறார். உடனே என்ன இது டெக்கரேஷன் ரொம்ப கம்மியா இருக்கு அப்பாவோட பிறந்த நாளா ரொம்ப கோலாகலமாக கொண்டாடும் எனக்கு தெரிந்த டெக்கரேஷனருக்கு போன் போட்டு வரச் சொல்கிறேன் என சொல்லி அவர்களை வரவைத்து போட்டோக்கள் முழுவதையும் மறைத்து டெக்கரேட் செய்யச் சொல்கிறார்.
பிறகு பாக்கியா தனம் மூர்த்தி ஜீவா ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது செல்பி கோபி பற்றி சொல்ல உடனே பாக்கியா அவரை தடுக்கிறார். பிறகு பாக்கியா உள்ளே சென்றதும் கோபி சாருக்கு யாருடனோ தொடர்பு இருக்கு அதனாலதான் எழில் அவருடன் பேசுவதில்லை. அவர் படத்துக்கு எங்க எல்லாரையும் கூட்டிட்டு போனாரு ஆனா அவங்க அப்பாவ வரக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. இதுதான் விசயமா இருக்கும்னு நினைக்கிறேன். நீங்க வேணும்னா கோபி சார் கிட்ட விசாரிச்சுப் பாருங்க எல்லா உண்மையும் சொல்லிடுவாரு. அக்கா வாழ்க்கை நல்லா இருக்கணும்னா இத நம்புங்க என கூறுகிறார்.
மேலே ரூமுக்குள் இருக்கும் கோபி எப்படியாவது ராதிகா வரும்போது இங்கே இருக்க கூடாது ஏனெனில் கிளம்பிவிட வேண்டும் என யோசிக்கிறார். இருக்கவே இருக்கு ஆபீஸ் ஆபீஸ்க்கு கிளம்பி விடலாம் என பேக்கை தூக்கி கொண்டு கிளம்புகிறார். இவை டைனிங் ரூமில் ஈஸ்வரி கண்ணன் ஐஸ்வர்யா இனியா உள்ளிட்டோர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நேரத்தில் கோபி கையில் பையுடன் வந்து நிற்க ஈஸ்வரி அவரைக் கூப்பிட்டு எங்க கெளம்பிட்ட என கேட்கிறார். உடனே கோபி ஒரு முக்கியமான மீட்டிங் அட்டென்ட் பண்ணலனா பல லட்சங்கள் நஷ்டம் ஆகி விடும். இவ்வளவு பேர் இருக்கீங்க நான் இல்லன்னா என்னம்மா எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்து விடுகிறேன் என சொல்ல கோபமான ஈஸ்வரி அப்படி என்ன எந்த நேரமும் வேலை. உங்கப்பா எவ்வளவு சந்தோஷமா இருக்கார், அவர் சந்தோஷமா இருக்கணும்னு தான் எல்லோரையும் வரச் சொல்லியிருக்கேன். இவங்களுக்கு எல்லாம் வேலை இல்லையா.? நீ போ ஆபிசுக்கு போனா அதோட ஜென்மத்துக்கும் என் முகத்துல முழிக்காத, உன் கிட்ட பேசவே மாட்டேன். இந்த பிறந்தநாள் விழா முடிந்ததும் நானும் உங்கப்பாவும் கிளம்பி ஊருக்கு போய் கிட்டே இருப்போம் என கூறுகிறார். இதனால் கோபி அதிர்ச்சி அடைகிறார்.
பிறகு எல்லோரும் பிறந்தநாளுக்கு தயாராகி ஒன்று கூடி உள்ளனர். பாக்யாவின் அம்மா ஜெனியின் அம்மா என ஒவ்வொருத்தராக பிறந்த நாள் விழாவுக்கு வர தொடங்குகின்றனர். ராதிகாவும் பாக்கியா வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
அதன் பின்னர் வெளியான புரோமோ வீடியோவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ராதிகா வந்து இறங்க அவரைப் பார்த்ததும் கோபி அதிர்ச்சி அடைகிறார்.
