Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்து தப்பித்து.. மூர்த்தியிடம் வசமாக மாட்டிக் கொண்ட கோபி

Baakiyalakshmi and Pandian Stores Serial Episode Update 19.05.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ். இரண்டு சீரியலும் மகா சங்கமம் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் கோபியின் அப்பாவின் பிறந்தநாள் விழாவிற்காக ஒவ்வொருத்தராக வருகைதர பிறகு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். அதன்பிறகு கோபி ராதிகாவின் வருகையால் நைசாக நழுவி கொள்ள மூர்த்தி அவரை கூப்பிட்டு நிற்க வைக்கிறார். பிறகு ராதிகாவும் மயூரா உடன் வந்து இறங்க இன்னைக்கு கோபிக்கு நான் என அவருடைய அப்பா கணக்கு போடுகிறார்.

பாக்யா ராதிகாவிடம் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் கோபி செழியனை அழைத்துக்கொண்டு நைசாக மேலே சென்று எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு யார் என்ன கேட்டாலும் மீட்டிங்கில் இருக்கேன் என சொல்லி சமாளித்து விட்டு என்னுடைய ரூம் பக்கம் யாரையும் அனுப்ப வேண்டாம் என கூறி விடுகிறார். செழியன் என்னப்பா இன்னைக்கு கூட மீட்டிங்ல சொல்லிட்டீங்க என சொல்ல முக்கியமான மீட்டிங் டா என சொல்லி சமாளிக்கிறார். பிறகு கோபி ரூமுக்குள் செல்ல அந்த நேரத்தில் ஐஸ்வர்யா வந்து பேக்கை தேடுகிறார்.

பிறகு கண்ணன் வந்து கொஞ்ச நேரம் உள்ளே உட்கார்ந்து விட்டு செல்கிறார். கோபி பதற்றத்தோடு உள்ளே தவித்துக் கொண்டிருக்க இந்த பக்கம் ராதிகாவுடன் எல்லோரும் பேசி சிரித்து கொண்டிருக்கின்றனர். உடனே ராமமூர்த்தி கோபி அழைத்து வருமாறு சொல்ல இனியா மேலே வந்து கூப்பிடுகிறார். போன் பேசிக் கொண்டே மீட்டிங்கில் இருப்பது போல சமாளித்து அனுப்பி வைத்து விடுகிறார். பிறகு பாக்கியா வர அவரிடமும் மீட்டிங்கில் இருப்பதுபோல பேசி சமாளித்து திட்டி அனுப்பி வைக்கிறார்.

பிறகு நேரம் ஆவதால் ராதிகா வீட்டிற்கு கிளம்புவதாக சொல்ல இல்ல கோபி பார்த்துவிட்டுத்தான் செல்ல வேண்டும் என ராமமூர்த்தி கூறுகிறார். சரி இனி ராதிகாவும் கொஞ்ச நேரம் காத்திருக்க ஆனால் கோபி கீழே இறங்கி வரவேயில்லை. இதனால் ராதிகா நேரமாகுது கிளம்பிவிடுகிறார். ராதிகா கிளம்பிய சத்தத்தை கேட்டு கோபி பால்கனி வழியாக பார்த்துவிட்டு ஒரு குத்தாட்டம் போட்டு கொண்டாடுகிறார். ஐ லவ் யூ டி செல்லம் என டிரஸ் மாற்றிக்கொண்டு விசிலடித்துக் கொண்டே சந்தோஷமாக கீழே செல்கிறார்.

ஒரே கச கசன்னு இருந்துச்சு அதனால தான் ட்ரஸ் மாற்றிட்டேன் என கோபி கூறுகிறார். பிறகு யாரோ வந்து இருந்தாங்க எங்கே அவங்கள பாக்க தான் சீக்கிரமா கீழே இறங்கி வந்தேன் என கேட்க அவங்க கிளம்பிட்டாங்க என கூறுகிறார் பாக்கியா. ராதிகாவின் மட்டும் ஏன்தான் பார்க்க வர மாட்டறீங்க தெரியல எத்தனையோ சந்தர்ப்பம் கிடைத்தும் அவங்களை நீங்க பார்க்கவே இல்லை என்று கூறுகிறார்.

பிறகு பாக்கியா எழிலிடம் பால் பாக்கெட் வாங்கி வருமாறு சொல்ல கோபி நான் வாங்கி வருகிறேன் என கடைக்குச் செல்கிறார். வெளியே சென்று ராதிகாவுக்கு போன் செய்து நீ சொன்னதால் டீச்சர் வீட்டுக்கு வந்து சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என வந்தேன் என கூறுகிறார். இந்த ஏரியாவில்தான் இருப்பதாக சொல்ல ராதிகா திரும்பி கோபியை பார்க்க வருகிறார். பிறகு ரோட்டில் நின்று கோபி ராதிகாவுடன் கொஞ்சிப் பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் மூர்த்தி போனில் பேசிக் கொண்டு அந்த வழியாக வர கோபியை பார்த்து அதிர்ச்சியடைகிறார்.

இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மெகா சங்கமம் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi and Pandian Stores Serial Episode Update 19.05.22
Baakiyalakshmi and Pandian Stores Serial Episode Update 19.05.22