தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுவரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர், பாக்கியலட்சுமி உள்ளிட்டவை. இந்த இரண்டு சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
மேலும் தற்போது தொலைக்காட்சி சேனல்களில் 2 சீரியல் குடும்பங்கள் ஒன்றாக இணைந்து மகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பாவது வழக்கமாகி வருகிறது. விஜய் டிவியிலும் பல்வேறு சீரியல்கள் மெகா சங்கமம் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி உள்ளன.
மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல்கள் மெகா சங்கத்தின் மூலம் இணைய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இந்த எபிசோடுகள் இப்போது ஒளிபரப்பாகும் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.