தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதீஷ்.
தற்போது சீரியலில் கோபிக்கு மாரடைப்பு வந்து விடுவதால் பாக்யா அவரை ஹாஸ்பிட்டலில் சேர்த்து காப்பாற்றுகிறார். சமீபத்தில் சதீஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அனைவரும் எதிர்பார்த்தபடி பாக்கியலட்சுமி சீரியல் வரவுள்ளது என்ற சொல்லியிருக்கிறார்.
எனவே பலரும் இத்துடன் பாக்கியலட்சுமி முடிவடைகிறது என்ற வதந்தியை பரப்பி வருகின்றனர். ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சதீஷ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் நான் பாக்கியலட்சுமி முடியுதுன்னுலாம் சொல்லல நீங்க எல்லாரும் கேட்ட மாதிரி கோபி பாக்கியா கிட்ட மன்னிப்பு கேட்டு சந்தோஷமா இருக்கணும்னு சொன்னது தான் நான் சொன்னேன் சீரியல் முடியும்னு நான் எப்ப சொன்னேன்? என்ன வச்சு செய்வாங்க.. பாக்கியலட்சுமி அவ்வளவு லேஸ்ல முடியாது என்று சொல்லுகிறார். பாக்கியலட்சுமி இன்னும் போகும்டா சாமி என்று சொல்லி உள்ளார்.
இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram