Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஈஸ்வரி கொடுத்த ஷாக், டுவிஸ்ட் கொடுத்த பாக்யா, வைரலாகும் ப்ரோமோ

baakiyalakshmi-episode-upcoming-promo-may-3rd-week update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது போர் கதையாக சென்று கொண்டிருக்கிறது.

கோபியை வீட்டை விட்டு துரத்த எல்லோரும் ஒன்று கூடிய நிலையில் ஈஸ்வரியும் உன் புள்ளைங்க உன்னை ஏதாவது பண்றதுக்கு முன்னாடி நீயா போய்டு என்று சொல்லி அதிர்ச்சி கொடுத்த நிலையில் அழுது புலம்பி டிராமா போட்டு ஈஸ்வரியை தன்னுடன் கூப்பிட ஈஸ்வரியின் மகனுக்காக வரேன் என்று ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் கோபியுடன் ஈஸ்வரியின் வீட்டை விட்டு வெளியேறுவதாக தெரிந்து எல்லோரும் அதிர்ச்சியடைய ரெஸ்டாரன்ட் இல் இருந்து பாக்யா வீட்டுக்கு வர அவர் எதிரே ஈஸ்வரி வெளியே வருகிறார்.

இதை பார்த்த பாக்கியா வழிவிட்டு நிற்க ஈஸ்வரி என் புள்ள இல்லாம என்னால இருக்க முடியாது என்று சொல்கிறார். பாக்கியா நான் எதுவுமே சொல்லல அத்தை என்று பதில் கொடுக்க அப்போ இவ எப்பதான் போவான்னு நீ காத்துகிட்டு இருந்தியா என்று கேள்வி கேட்டு கோபியுடன் கிளம்பி செல்கிறார்.

இதைப் பார்த்து ரசிகர்கள் இனிமேல் தான் ஈஸ்வரிக்கு ஆப்பு காத்திருக்கு பாக்யாவோட அருமை இனிமே புரியும் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

baakiyalakshmi-episode-upcoming-promo-may-3rd-week update