தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கணேஷ் தேடி வீட்டுக்கு வரும் அப்பா அம்மா அவனை ஊருக்கு கூப்பிட அவர் வரும் மறக்க பிறகு அப்படி என்றால் நாங்களும் உன்னோடவே இருக்கிறோம் என தங்குகின்றனர்.
அதைத்தொடர்ந்து மறுபக்கம் ராதிகா கோபியை உட்கார வைத்து நேற்று நம்ம இங்க வந்து அவ்வளவு பேச்சி பேசறாங்க ஆனா நீங்க ராதிகா நல்லா தான் பார்த்துக்கொள்கிறா என்று ஒரு வார்த்தை கூட சொல்லல நான் உங்களையும் பார்த்துக்கணும் மயூவையும் பாத்துக்கணும் வீட்டு வேலையும் பார்த்துக் கொள்ளும் வெளியில ஆபீஸ்க்கு போயிட்டு வரணும் எல்லாத்தையும் நான் பொறுப்பா தானே செஞ்சிட்டு இருந்தேன் என்று கோபப்படுகிறார்.
இங்கே ஈஸ்வரி வெளியே கிளம்ப ராமமூர்த்தி எங்க போற என்று கேட்க நேத்தே சொன்னேனே என்று கோபியை கூப்பிட கிளம்ப பாக்யா நிச்சயமா அவர் உள்ள வந்தா நான் வெளியே போயிடுவேன் என்று சொல்ல சும்மா வம்பு பிடிக்காத பாக்கியா நீ ஒன்னும் அவனை பார்த்துக்க வேண்டாம் என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.
எல்லோருடைய பேச்சையும் மீறி ஈஸ்வரி ராதிகா வீட்டிற்கு கிளம்பி வர இங்கே ராதிகா கோபியை பிடித்து சத்தம் போட்டுக் கொண்டிருக்க கோபி வீட்டுக்கு தேவையான செலவு எல்லாம் நான் தானே பண்றேன் என்று சொல்ல அப்படின்னா இனிமே கரண்ட் பில், லோன் என எல்லாத்தையும் நீங்களே பாத்துக்கங்க என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.
ஈஸ்வரி உடம்பு முடியாத நேரத்தில் கூட அவனை நிம்மதியா இருக்க விட மாட்டியா என கோபப்பட்டு கோபியை தன்னுடன் வீட்டிற்கு கூப்பிட கோபி வர மறுக்க ஈஸ்வரி சொல்றத புரிஞ்சுக்கடா என்று விடாமல் கோபியை கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்.
இங்கே கோபி வரமாட்டான் அந்த ராதிகாவும் விடமாட்டார் என்ற நம்பிக்கையில் எல்லோரும் உட்கார்ந்து இருக்க ஈஸ்வரி கோபியுடன் வர எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.