தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் நீங்க கேக்குற கேள்வி எல்லாத்துக்கும் என்னால பதிலடி கொடுக்க முடியும் ஆனால் நான் அதை பண்ண மாட்டேன். அதற்கு காரணம் நீங்க பண்ற எதையுமே நான் ஒரு விஷயமா மதிக்கிறது இல்லை, இனியும் மதிக்க மாட்டேன் என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.
அதன் பிறகு குழந்தைகளை வைத்து நான் கேம் விளையாடுறேனு சொன்னீங்களே கொஞ்சம் இன்னைக்கு நடந்ததை யோசிச்சு பாருங்க, மயூ ரொம்ப நல்ல பொண்ணு. அவ வருத்தப்படற மாதிரி நடந்துக்காதீங்க நான் சொன்னத கொஞ்சம் யோசிச்சு பாருங்க என அட்வைஸ் செய்துவிட்டு அங்கிருந்து நகர்கிறார்.
அதன் பிறகு ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸில் பழனிச்சாமி தேன் குழலி நானே செய்தேன் என சொல்லி கொடுக்க பாக்கியம் மற்றும் லோகிதா என இருவரும் சாப்பிட்டு சூப்பராக இருக்கிறது என பாராட்டி கொண்டிருக்கும்போது பழனி பாக்கெட்டில் இருந்து ஒரு சீட்டு கீழே விழ லோகிதா அதை எடுத்துப் பார்க்கிறார். அந்த சீட்டு ஸ்வீட் கடையில் தேன் குழலி வாங்கியதற்கான பில் என்பது தெரிய வர லோகிதா பழனிச்சாமியை கலாய்க்க பாக்கியா உங்களுக்கு நான் சொல்லி தரேன் என சொல்கிறார்.
அதன் பிறகு பாக்கியாவும் லோகிதாவும் பழனிச்சாமி அம்மாவை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். பழனிச்சாமியின் அம்மா உப்பு சப்பு இல்லாத சாப்பாட்ட சாப்பிட மாட்டேன் என அடம் பிடித்துக் கொண்டிருக்க பாக்கியா உங்களுக்காக நான் சமைத்து தரேன் என சொல்லி சமைத்துக் கொடுக்க அது டேஸ்ட் ஆக இருக்கிறது என ரசித்து சாப்பிடுகிறார்.
அதன் தொடர்ச்சியாக பாக்யா வீட்டுக்கு வந்ததும் மயூ குடிக்க தண்ணீர் வந்து கேட்க ஜெனி தண்ணீர் பிடித்துக் கொடுத்ததும் பாக்கியா நீ சாப்பிட்டியா இல்லையா என கேட்கிறார். பிரட் அண்ட் ஜாம் செய்து வச்சிட்டு போய் இருக்காங்க என்று சொல்ல, அது உனக்கு பத்துமா அதனை அப்புறம் சாப்பிடு என சொல்லி பாக்கியா சாப்பிட ஸ்நாக்ஸ் எடுத்து கொடுக்கிறார்.
அப்போது மயூரா உங்ககிட்ட ஒன்னு சொல்லணும் என சொல்லி நீங்க ரொம்ப நல்ல ஆன்ட்டி என சொல்கிறார். பாக்யாவும் நீ ரொம்ப நல்ல பொண்ணு என மயூவை கொஞ்சுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.