தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் மெகாதொடர் பாக்கியலட்சுமி. வெகுளித்தனமான இல்லத்தரசியான பாக்கியாவுக்கு துரோகம் செய்ய பார்க்கிறார் கோபி. இதையெல்லாம் எதிர்த்து பாக்கியா எப்படி சாதிக்கிறார் என்பதுதான் இந்த சீரியலின் கதைக்களம்.
இந்த சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் நாளை மாலை பாக்கியலட்சுமி சீரியல் குழுவினர் மதுரையில் உள்ள Shri Vs Chellam Century Hall-ல் பெண் ரசிகைகளை சந்திக்க உள்ளனர். அவர்களோடு சேர்ந்து மேடையில் பர்பாமென்ஸ் செய்ய உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியல் குழுவினருடன் அறந்தாங்கி நிஷாவும் பங்கேற்க உள்ளார். மேலும் எழிலாக நடித்து வரும் விஷால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பெண்களுக்கு அனுமதி இலவசம். நீங்கள் மதுரையா இருந்தால் பாக்கியலட்சுமி சீரியல் குழுவினரை சந்திக்க தயாராகுங்கள்.