தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் சதீஷ்.
சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் சதீஷ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ஒருவர் உங்களுக்கு செழியன் பிடிக்குமா எழில் பிடிக்குமா என்று கேட்க இரண்டுமே என் பிள்ளைகள் இரண்டு பேரையும் பிடிக்கும் என சொல்கிறார்.
அதைத்தொடர்ந்து இனியா பிடிக்குமா மயூ பிடிக்குமா என்று கேட்க இரண்டுமே என்னுடைய ரெண்டு கண்கள் என பதில் சொல்ல அடுத்து உங்க அம்மாவ பிடிக்குமா மாமியார் பிடிக்குமா என்று கேட்க இரண்டு பேரையுமே பிடிக்கும் என்று பதில் சொல்கிறார்.
அதன் பிறகு இறுதியாக பாக்கியா பிடிக்குமா ராதிகா பிடிக்குமா என்று கேட்க கோபி கேள்வி புரிந்து கொள்ளாமல் இரண்டு பேரையுமே பிடிக்கும் என்று சொல்லி ஐயோ இல்ல இல்ல எனக்கு ராதிகாவை மட்டும் தான் பிடிக்கும் என்று சொன்ன இதை பார்த்த ரசிகர்கள் மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு காப்பாத்தணும் கர்த்தர் என கமெண்ட் அடித்து கலாய்த்து வருகின்றனர்.
View this post on Instagram