தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார். இதற்காக பாக்கியாவை விவாகரத்து செய்ய முடிவெடுத்து வக்கீல் நோட்டீஸோடு வீட்டிற்கு வந்த கோபி இன்னும் கையெழுத்து வாங்காமல் இருக்கிறார்.
இப்படியான நிலையில் கோபி கையில் விவாகரத்து பேப்பரை வைத்து யோசித்துக் கொண்டிருக்க அப்போது பாக்கியா உள்ளே வந்து என்ன பேப்பர் இது எனக் கேட்க கோபி கையெழுத்து ஒன்று போட வேண்டும் என கூறுகிறார். பாக்கியாவும் எங்கே என கேட்டு கையெழுத்து போட்டு விடுகிறார்.
இதனையடுத்து கையெழுத்து போடுவதற்கு முன்னாடி எதுக்குனு ஒரு வார்த்தை கேட்க மாட்டியா என கேட்க நீங்க எது பண்ணாலும் என் நல்லதுக்கு தான் இருக்கும் என சொல்லிவிட்டு வெளியே வந்துவிடுகிறார் பாக்கியா. பாக்கியா சொன்ன வார்த்தையைக் கேட்டு உடைந்துபோய் அமர்கிறார் கோபி.
இதுகுறித்த Promo வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த வாரம் எபிசோடுகளில் இந்த காட்சிகள் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
