Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரபல டிவி சேனலில் புதிய சீரியலில் நடிக்க போகும் பாக்கியலட்சுமி பிரபலங்கள்

baakiyalakshmi-serial-actors-in-zee-tamil-serial update

பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்களை அலேக்காக தட்டி தூக்கி உள்ளது பிரபல தொலைக்காட்சி சேனல்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவிக்கு அடுத்தபடியாக இருந்து வந்த விஜய் டிவியை பின்னுக்கு தள்ள தொடங்கி வேக வேகமாக முன்னேற்ற பாதையில் பயணித்து வருகிறது ஜீ தமிழ் தொலைக்காட்சி.

நாளுக்கு நாள் ஜீ தமிழ் சீரியல்களின் ரேட்டிங் அதிகரித்து வரும் நிலையில் சேனல்களும் புதுப்புது சீரியல்களை களமிறக்கி வருகிறது. சமீபத்தில் ஒளிபரப்பாக தொடங்கிய சீதாராமன் சீரியல் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த சீரியலை தொடர்ந்து அடுத்ததாக அண்ணா என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக தெரியவந்துள்ளது. மிர்ச்சி செந்தில் ஹீரோவாக நடித்த நந்தினி சீரியல் புகழ் நித்யா ராம் நாயகியாக நடிக்க உள்ளார்.

இந்த சீரியலில் முயற்சி செந்தில் நான்கு தங்கைகளுக்கு அண்ணாவாக நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. நான்கு தங்கைகளில் முதல் தங்கையாக நடிக்க பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் அமிர்தாவாக நடித்து வரும் ரித்திகா தமிழ்ச்செல்வி கமிட்டாகி உள்ளாராம்.

அது மட்டுமல்லாமல் மிர்ச்சி செந்தில் அப்பாவாக பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் STP ரோசரி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் இந்த சீரியல் ஒளிபரப்பாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

baakiyalakshmi-serial-actors-in-zee-tamil-serial update
baakiyalakshmi-serial-actors-in-zee-tamil-serial update