தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. பாக்கியாவை விஷயம் என்னவென்று சொல்லாமலேயே கோர்ட்டுக்கு விவாகரத்து வாங்குவதற்காக அழைத்துச் சென்றுள்ளார் கோபி.
கோர்ட்டில் பாக்யாவுக்கு உண்மை தெரிய வருமா? இதனால் என்ன நடக்கும் என எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இது ஒருபுறமிருக்க இந்த சீரியலில் செழியன் வேடத்தில் நடித்து வரும் ஆரியன் சீரியலில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் இனி செழியனுக்கு பதிலாக ராஜபார்வை சீரியலில் நடித்து பிரபலமான விகாஷ் சம்பத் நடிக்க இருப்பதாக என தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
ஒருவேளை விகாஷ் சம்பத் செழியனாக நடிக்க தொடங்கினால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
