தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் அமிர்தா கண்கலங்கி உட்கார்ந்து இருக்க ராதிகா அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். நிலா பாப்பா அம்மா அழாத என கண்துடைத்து விட அமிர்தா நான் அழலடா என்று சொல்லி குழந்தையை கட்டிப்பிடித்து கலங்குகிறார்.
அடுத்ததாக உள்ளே வரும் இனியா செல்வி அக்கா இப்பதான் நடந்ததெல்லாம் சொன்னாங்க ஜெனி அக்காவை போய் பாத்துட்டு வந்த அவங்க வருவாங்கன்னு தெரியல இப்போ இப்படி ஒரு பிரச்சனை எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நீங்க எங்களை விட்டு போயிடாதீங்க என்று அமிர்தாவை கட்டிப்பிடித்து அழுகிறார்.
மறுபக்கம் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி நடக்கும் பிரச்சனைகளை நினைத்து கண்ணீர் விட்டு உட்கார்ந்திருக்க உள்ளே வரும் பாக்யா அவர்களை சாப்பிட கூப்பிட வேண்டாம் என்று சொல்லி விடுகின்றனர். நீங்க மாத்திரை போடணும் உடம்பு கெட்டுப் போயிடும் என்று சொல்லி கஞ்சி எடுத்து வந்து இருவரையும் சாப்பிட வைத்து பிறகு மாத்திரை போட வைக்கிறார்.
என் பிள்ளைகளோட வாழ்க்கை இப்படி ஆகும்னு நான் கொஞ்சம் கூட நினைச்சு பாக்கல என்னால முடியல என்று பாக்யா கண்ணீர் விட்டு கதற ஈஸ்வரி நீ மட்டும் என்ன பண்ணுவ பாக்கியா? நான் எப்படி என் புள்ளையை விட்டு கொடுக்காமல் இருக்கேனோ அந்த மாதிரி தான் நீயும் அவங்க சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சிருப்ப என்று இருவரும் மாறி மாறி அழுது ஆறுதல் சொல்லிக் கொள்கின்றனர்.
அதன் பிறகு எழில் ரூமுக்கு வர ராதிகாவும் இனியாவும் வெளியே வருகின்றனர். அமிர்தா எனக்கு கணேஷ் உயிரோட இருக்காருனு சத்தியமா தெரியாது நான் உங்க வாழ்க்கையே கெடுக்கணும் உங்களுடைய சந்தோஷத்தை கெடுக்கணும்னு ஒரு நாளும் நினைத்ததில்லை என எழிலிடம் மன்னிப்பு கேட்க இதெல்லாம் உனக்கு தெரியாதுன்னு எனக்கு தெரியும் அவங்க அப்பா அம்மாவே கூட கணேஷ் உயிரோடு இல்லனு தானே நினைச்சுட்டு இருந்தாங்க. அப்படி இருக்கும் போது நான் எப்படி உன்னை தப்பா நினைப்பேன்? இருந்தாலும் எனக்கு நடக்கிறது எல்லாம் பார்க்கும்போது பயமா இருக்கு எனக்கு நீயும் நிலா பாப்பாவும் எப்பவும் என் கூடவே இருக்கணும். உங்க ரெண்டு பேர் மேல நான் உயிரே வச்சிருக்கேன் என்று சொல்லி எழில் கண் கலங்குகிறார்.
அதனை தொடர்ந்து கணேஷ் அமிர்தா என்ன பாத்தா பயந்து போய் அவன் பின்னாடி போய் நிக்கிறா அவ என் கூடத்தான் இருக்கணும் நிலா பாப்பா எனக்கும் அவளுக்கும் பிறந்த குழந்தை. அவங்க ரெண்டு பேரும் இங்க வரணும் அதுக்காக நான் என்ன வேணா செய்வேன் என்று கோபப்பட்டு பொருட்களை தூக்கி வீச கணேசின் அம்மாவும் அப்பாவும் பதறுகின்றனர்.
பிறகு ராதிகா கோபிக்கு காபி கொடுத்துவிட்டு இவ்வளவு பிரச்சனைல நீங்க இன்னைக்கு தான் சரியா நடந்துகிட்டு இருக்கீங்க. அப்போது அங்கு வரும் பாக்கியா நான் என்னைக்குமே அவர் ஒரு நல்ல அப்பா கிடையாது என்று சொன்னது இல்ல இந்த வீட்ல இருக்க யாரும் அப்படி நினைச்சு கூட இருக்க மாட்டாங்க என்று சொல்லி கோபி எழிலுக்காக பேசிய விஷயங்களுக்காக நன்றி சொல்கிறார். கவலைப்படாத பாக்கியா எழில் அமிர்தா எப்பவும் சந்தோஷமா இருப்பாங்க. எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம் என்று ஆறுதல் சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
