Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாமனாரின் நடவடிக்கையால் பாக்கியாவிற்கு ஏற்பட்ட சந்தேகம்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

Baakiyalakshmi Serial Episode Update 02.02.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. கோபி சாப்பிட வந்து அமர்கிறார். பாக்கியம் இடம் நீ சாப்பிட்டியா எனக் கேட்க இன்னும் இல்லை என கூறுகிறார். பசங்க சாப்பிட்டங்களா அம்மா சாப்பிட்டங்களா எனக் கேட்க அத்தை இன்னும் சாப்பிடல என சொன்னதும் அவர் ரூமிற்குள் சென்று அவருடைய அம்மாவை அழைத்து வருகிறார்.

அவர் எனக்கு சாப்பாடு வேண்டாம் என சொல்லி விட்டு சாப்பிடுங்க அம்மா அப்பா முழுசா குணம் ஆகி விடுவார். அவர் குணம் ஆகும் போது சாப்பிடாமல் நீங்க உடம்பை கெடுத்துக்க போறீங்களா? நீங்க ரெண்டு பேரும் தான் இந்த குடும்பத்தோட முதுகெலும்பு நீங்க சந்தோஷமா இருந்தா தான் நாங்க சந்தோஷமா இருக்க முடியும் என கூறுகிறார். பிறகு ஒரு வழியாக ஈஸ்வரியை சமாதானம் செய்து வைத்து சாப்பிட வைக்கிறார் கோபி.

அதன்பிறகு கோபியின் நண்பர் சதீஷ் வீட்டிற்கு வந்து அவருடைய அப்பாவைப் பார்த்து விட்டு மொட்டை மாடியில் கோபியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். கோபி என்னால்தான் அப்பாவுக்கு இப்படி ஆகி விட்டது அது நினைத்தால் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அப்பதான் இந்த வீட்டோடு முதுகெலும்பு அவரை இப்படி படுத்த படுக்கையா பார்க்க முடியல என கூறுகிறார். இதுதான் நல்ல சந்தர்ப்பம் ராதிகாவை விட்டு விட்டு உன் குடும்பத்தை பார்க்கிற வேலையை பாரு என கூறுகிறார்.

ராதிகா பாவம் டா அவள கல்யாணம் பண்ணிக்கிறேன்னு உறுதி எல்லாம் செய்து கொடுத்திருக்கிறேன் என சொல்ல அப்போ உன்னோடு குடும்பம் பாவம் இல்லையா என கேட்கிறார். உன்னையே நம்பி இருக்க உன்னுடைய குடும்பத்தை ஏமாற்றிவிடாதே அந்த பாவம் உன்னை சும்மா விடாது என கூறுகிறார்.

அதன்பிறகு ரூமில் செல்வி பேரப்பிள்ளைகள் என அனைவரும் ஒன்றாக அமர்ந்து அவரது தாத்தாவை சிரிக்க வைக்கின்றனர். அவள் சிரிப்பது கேட்டு எல்லோரும் சந்தோஷம் படுகின்றனர். தாத்தா சிரிக்கிறார் என பேரப்பிள்ளைகள் சொல்வதை கேட்டு ஈஸ்வரி உள்ளே வருகிறார். எல்லோரும் உள்ளே வந்து பார்த்து அவர் சிரிப்பதை பார்த்து மகிழ்கின்றனர். ‌ கோபி பார்த்த அவர் உடனே டென்சன் ஆகிறார் இதனால் கோபி அங்கிருந்து வெளியே வந்து விடுகிறார்.

மறுநாள் காலையில் அப்பாவுக்காக புதிதாக கட்டில் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார் கோபி. ஆடர் செய்த கட்டில் வந்ததும் அதனை எழிலை வைத்து உள்ளே கொண்டுவந்து வைத்து பிட் செய்கிறார். கோபி கிட்ட நேத்து தான் பேசிகிட்டு இருந்தேன் இன்னைக்கு காலையில வந்துடுச்சு. அப்பா மேல கோபிக்கு அவ்வளவு பாசம் என ஈஸ்வரி உடனே கோபியின் அப்பாவின் முகம் மாறுகிறது. கோபி உடனே அங்கிருந்து வெளியே சென்று விடுகிறார். இதையெல்லாம் கவனித்த பாக்யாவுக்கு சந்தேகம் வருகிறது. இத்துடன் பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Serial Episode Update 02.02.22
Baakiyalakshmi Serial Episode Update 02.02.22