Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மனைவியுடன் கோபியை கோர்ட்டுக்கு வர சொன்ன லாயர்.. அதிர்ச்சியான கோபி.. பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

Baakiyalakshmi Serial Episode Update 02.03.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. கோபியின் அப்பாவும் அம்மாவும் தூங்கிக்கொண்டிருக்க அப்போது அவருடைய அப்பா ஈஸ்வரியை எழுப்பி பாத்ரூம் போக வேண்டும் என கூறுகிறார். ஈஸ்வரி எழுந்து உதவி செய்கிறார். இதனால் மனவேதனை அடைகிறார் கோபியின் அப்பா. அவர் கண் கலங்குவதை பார்த்து விட்டு ஈஸ்வரி எனக்கு இப்படி ஆகி இருந்தா நீங்க என்ன எப்படி பார்த்து இருப்பீங்கனு எனக்கு தெரியும். அதனால இது எல்லாம் நினைச்சு வருத்தப்படாதீங்க என கூறுகிறார்.

இந்த பக்கம் ஜெனி நன்றாக தூங்கிக்கொண்டு இருக்க செழியன் ஏதோ யோசனையில் இருக்கிறார். தூக்கத்திலிருந்து எழுந்த ஜெனி நீ இன்னும் தூங்கலையா என கேட்க தூக்கம் வரலை என செழியன் கூறுகிறார். வொர்கிங் பிரம் ஹோம் முடிய போகுது, சீக்கிரம் ஆபீசுக்கு போக வேண்டும் போய்ட்டு வரவே 40 கிலோமீட்டர் இருக்கு. நாம தனியா போய் விடலாம் என சொல்கிறார். இதனால் ஜெனி கடுப்பாகி குட்நைட் என சொல்லி விடுகிறார்.

மறுநாள் காலையில் கோபியும் ராதிகாவும் சென்று வக்கீலை சந்திக்கின்றனர். நாளைக்கு ஃபர்ஸ்ட் ஹியரிங் இருக்கு கோர்ட்டுக்கு வந்து விடுங்கள் என சொல்ல கோபி சரி என சொல்கிறார். வக்கீல் ரெண்டு பேரும் ஒரே மாதிரி பதில் சொல்லணும் என்ன சொல்கிறார். கோபி ராதிகாவும் காரணம் அவை எதுக்கு அவ கிட்ட என்ன கேக்கப் போறாங்க என கேட்க ராதிகா நான் வரமாட்டேன் உங்க ஒயிஃப் தான் வருவாங்க என சொல்வதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.

அவங்க கூட்டுக்கு வரணுமா அவங்க எதுக்கு என்ன கோபி கேட்கிறார். நீங்க ரெண்டு பேரும் தான் வரணும் உங்களுக்கு விவாகரத்து பற்றி தெரியாதா என லாயர் கேட்கிறார். பிறகு ரெண்டு பேரும் வாங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க. ‌ மத்தத என்ன பண்ணனும்னு நான் அங்க சொல்றேன் என கூறுகிறார். விஷயம் கேட்டு பதற்றமான கோபி விறுவிறுவென காருக்கு வந்து தண்ணீர் எடுத்துக் கொடுக்கிறார். பின்னாடியே வந்த ராதிகா கோபி செய்வது எல்லாம் பார்த்து குழப்பம் அடைகிறார்.

என்னாச்சு ரெண்டு பேரும் கோர்ட்டுக்கு வரணும்னு சொன்னதும் உங்க முகமே மாறிடுச்சு என் தாத்தா கேட்க அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என சமாளிக்கிறார். இல்ல உங்க முகம் மாறிடுச்சு என ராதிகா திரும்பவும் கூறுகிறார். ரெண்டு பேரும் கோர்ட்டுக்கு வரணும்னு சொன்னாரே அதுதான் பிரச்சனை என கூறுகிறார். இயரிங் டேட்டை மாற்றி வைக்க முடியாதா? அவங்க கோர்ட்டுக்கு வரலைன்னா என்ன ஆகும் கண்டிப்பா வரணுமா கோபி கேட்க என்ன பேசுறீங்க ராஜேஷூம் தான் வந்தாரு என ராதிகா சொல்கிறார்.

அவங்க கோர்ட்டுக்கு வரதுல உங்களுக்கு என்ன பிரச்சனை என கேட்க எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல அவ வரணுமே, கையெழுத்துப்போடவே சொத்துல முக்காவாசி கேட்டு பிரச்சனை பண்ணினா இப்ப என்ன கேட்கப் போறாளோ என கோபி டிராமா போடுகிறார். எது கேட்டாலும் கொடுத்துருக்க முதல்ல இத முடிக்கப் பாருங்கள் என ராதிகா சொல்கிறார். எங்களுக்கு நீங்க மட்டும் வந்தா போதும் என கூறுகிறார்.

பிறகு வீட்டுக்கு வந்த கோபி பாக்கியா விடம் நாளைக்கு என் கூட வெளியே வரணும் என சொல்கிறார். எங்கே நீ கேட்க கோர்ட்டுக்கு போகணும் ஆபீஸ்ல உன்ன சேர்த்திருந்தேன்ல அது விஷயமாக என பாக்யா கேட்க ஆமாம் அது விஷயமாகத்தான் என கோபி சொல்கிறார். ஷார்ப்பா பத்தரை மணிக்கு அங்க இருக்கணும். நாம 9 மணிக்கு கிளம்பி விடலாம் என கூறுகிறார். பாக்கியா மறுபேச்சு பேசாமல் சரி என சொல்லி விடுகிறார். கோபி பாக்கியா மற்றும் ராதிகா சொன்ன வார்த்தைகளை நினைத்து குழம்புகிறார்.

பிறகு கோபி பாக்கியாவிடம் இரவு நேரத்தில் நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன் என சொல்ல எங்க போறீங்க என பாக்கியா கேட்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

 Baakiyalakshmi Serial Episode Update 02.03.22

Baakiyalakshmi Serial Episode Update 02.03.22