தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பு பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் அமிர்தா தலையில் பூவோடு வீட்டில் கள்பன என்ன சொல்வார்கள் என தெரியவில்லை என சொல்ல என்ன சொல்லப் போறாங்க வைக்கக்கூடாது என்று சொல்லுவாங்களா என எழில் கேட்க இல்லை நானா தான் வைப்பதில்லை என கூறுகிறார். நம்முடைய அப்பா அம்மா எதுவும் சொல்ல மாட்டாங்க வாங்க என அமிர்தாவை உள்ளே அழைத்து செல்கிறார்.
தலையில் பூ இருப்பதை அவருடைய அம்மா பார்த்துவிட பிறகு அமுதா நான் வேண்டாம் என்று தான் சொன்னேன் இவர்தான் கட்டாயப்படுத்தி வைத்துக்க சொன்னார் என கூறுகிறார். பிறகு அமிர்தாவின் அம்மா வெச்சிக்க நீ சின்ன பொண்ணு தானே நாங்க வைக்க கூடாதுன்னு என்னைக்கும் சொன்னது இல்லையே என கூறுகிறார். ஊர்ல வச்சுகிட்டா யாராவது எதையாவது சொல்லுவாங்க இங்கே யாரு என்ன சொல்ல போறாங்க என கூறுகிறார் . அதன் பிறகு அமிர்தா உள்ளே சென்றுவிட எழிலிடம் அமிர்தாவின் அப்பா அம்மா எல்லாம் நல்லதா நடக்கும் எங்களுக்கு பயமா இருக்கு என சொல்ல எந்தப் பிரச்சனை வந்தாலும் என்னைக்கும் உங்களோட கண்டிப்பாக இருப்பேன், எல்லோருடனும் இருப்பேன்.
என்னுடைய குடும்பத்தில் என் அம்மா எனக்கு ஆதரவாய் இருப்பாங்கன்னு நம்பிக்கை இருக்கு. இனி நீங்க கண்டிப்பா நம்பலாம் என கூறுகிறார். இதைக்கேட்டு அமிர்தா சந்தோஷப்படுகிறார். அதன் பின்னர் வீட்டுக்கு வந்தேன் எழில் மகிழ்ச்சியாக ஆட்டம் போட்டு கொண்டாடுகிறார்.
பின்னர் மறுநாள் காலையில் பாக்கியா சமயம் இப்போட்டிக்காக தயாராகி கடவுளை வேண்டிக்கொண்டு மாமனார் மாமியார் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள். கோபியின் காலடியில் கர்சிப் இருந்ததால் அதை எடுக்க பாக்கியா கீழே குனிய கோபி நல்லா இரு என ஆசிர்வாதம் செய்கிறார். ஆனால் வாழ்க்கையா காலை தொடர்ந்து கர்ச்சீப்பை எடுத்துக் கொடுத்ததும் பல்பு வாங்குகிறார்.
பிறகு சமையல் போட்டிக்கு கிளம்பி அங்கு பாக்கியா சமைக்கத் தொடங்குகிறார். இந்த பக்கம் ராதிகா ஆர்வத்தோடு பாத்தியா ஜெயிக்க வேண்டும் என போனில் சமைப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறார். ராதிகா தொடர்ந்து பாக்கியா பற்றி பேச கோபி கடுப்பாகிறார்.
பத்திரிக்கையாளர்கள் கொடுத்த டென்ஷனுக்கு மத்தியில் பாக்கியா ஒருவழியாக சமைக்கிறார். டைம் முடிந்துவிட்டது என்பதை முழுதாக சமைத்தோம் இல்லையா எனத் தெரியாமல் பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.