Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எழிலிடம் கோபப்பட்ட ஈஸ்வரி. கோபியிடம் பேசிய எழில். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial episode update 03-01-23

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்கியா சமையல் செய்யும் இடத்தில் அந்த ஏரியா சக்கரட்டரி உட்பட சில பெண்கள் வந்து என்ன புதுசா சாப்பாடு விக்கிறீங்க இதெல்லாம் பண்ண கூடாது என சண்டையிடுகின்றனர்.

அதன் பிறகு ஈஸ்வரி கோபமாக ரூமுக்குள் இருந்து வெளியே வர எழில் வீட்டுக்குள் நுழைய வர்ஷினி எல்லா விஷயத்தையும் சொன்னதாக சொல்லி எழில் மீது கோபப்பட பாக்கியா என்ன தான் ஆச்சு என கேட்க எல்லாம் நீ குடுக்குற செல்லம் தான் என பாக்கியாவை திட்டி உள்ளே செல்கிறார்.

பிறகு எழில் பாக்யாவிடம் நடந்த விஷயத்தை கூறுகிறார். பிறகு நான் எல்லாத்தையும் மீண்டு மேல ஏறி வருவேன் நீ என்கூட இருந்தா மட்டும் போதும் என சொல்கிறார். மறுபக்கம் ராதிகா வீட்டுக்கு வரும் ராமமூர்த்தி எழில் படம் போன விஷயத்தை சொல்ல கோபி கோபப்படுகிறார்.

அடுத்து எழில் ஒரு இடத்தில் நின்று டீ குடித்துக் கொண்டிருக்க அங்கு வரும் கோபி எழிலை பார்த்து நடந்த விஷயங்களை பேசி எதுக்கு தேவையில்லாம சண்டையிட்டு இப்படி லைப் கெடுத்துகிற என சொல்ல எழில் பிடிச்ச ஒரு விஷயத்துக்காக பிடிவாதமாய் இருக்கிறது தப்பு கிடையாது, ஒருத்தருக்கு நம்பிக்கை கொடுத்திட்டு அதைக் கெடுக்கிறது ரொம்ப தப்பு என்னுடைய கோபத்துக்கு பின்னாடி ஒரு நியாயம் இருக்கு என சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 03-01-23
baakiyalakshmi serial episode update 03-01-23