Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்கியாவை கட்டியணைத்து வாழ்த்துக் கூறிய ராதிகா.. குழம்பிப்போன கோபி .. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

Baakiyalakshmi Serial Episode Update 03.05.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா சமையல் சாப்பிட்டு முடித்த பின்னர் எண்ணிப் பார்த்தபோது 98 ஐட்டம் தான் இருக்கிறது என கூறினர். பிறகு ஜெனி உள்ளே இருந்து இன்னொரு ஐட்டத்தை எடுத்து வந்து வைக்க 99 தான் ஆனது எனக்கூறினர் பிறகு ஒரு நிமிஷம் என பாக்கியா உள்ளே சென்று தேடிப்பார்த்து ஊறுகாயை எடுத்து வந்து வைத்தார். பிறகு ஒரு மணி நேரத்தில் 100 ரூபாய்க்கும் சமைப்பது எப்படி என பாக்கியாவை பத்திரிக்கையாளர்கள் பேட்டி எடுத்தனர்.

இதுக்கு எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம் நீங்க மட்டும் தான் காரணம் என பாக்கியா கூறினார். மூணு வாரத்துக்கு முன்னாடி ஒரு ஆசிரமத்தில் குழந்தைகள் ஈஸ்வரி மசாலா சமைத்த உணவை சாப்பிட்டு வாந்தி மயக்கம் என செய்தியை வெளியிட்டீர்கள் ஞாபகம் இருக்கிறதா. ஆனால் அந்த சாப்பாட்டை எந்த பிரச்சனையும் இல்லை வேறு ஒருவர் கொடுத்த பேட்டியில் தான் பிரச்சனை என உண்மையைக் கண்டுபிடித்து எங்கள் மீது எந்த தவறும் இல்லை என போலீஸ், கோர்ட் என்னை விடுதலை செய்துவிட்டது. ஆனால் அதை நீங்கள் யாரும் செய்தியாக போடவில்லை. நீங்கள் போட்ட செய்தியால் என்னுடைய பிசினஸ் மொத்தமாக படுத்துவிட்டது. யாரும் ஆர்டர் கொடுக்கவில்லை சாப்பாடு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். உங்களுக்கு அது ஒரு நாள் செய்தி எங்களுக்கு அது வாழ்க்கை என வருத்தப்பட்டு கண்கலங்கி பேசினார். பிறகு பத்திரிக்கையாளர்கள் பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்டனர்.

இதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த பாக்கியாவை எல்லோரும் பாராட்டினர். ஸ்கூலில் இருந்து வந்த இனியா தனக்கு பெருமையாக இருந்ததாகவும் முதல்வர் மேடம் உன்னை பாராட்டியதாக கூறினார். இந்தப் பக்கம் ராதிகாவிடம் கோபி உனக்கு எவ்வளவு பிரண்ட்ஸ் இருக்காங்க அப்படி இருக்கும்போது ஏன் இந்த டீச்சர் மேல மட்டும் அதிக பாசம் என கேட்கிறார்.

அவங்க ரொம்ப வெகுளி, ரொம்ப நல்லவங்க. என்கூட ஆபிஸ்ல நிறைய பேருக்கு வேலை பண்றாங்க நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க ஆனா அவங்களிடம் எல்லாம் எனக்கு கல்யாணம் என்று சொல்ல முடியுமான்னு தெரியல. டீச்சரிடம் சொன்னதும் அவங்க ரொம்ப சந்தோசப்பட்டு என்ன நீங்க நல்லா இருக்கணும்னு வாழ்த்துனாங்க என கூறுகிறார். நம்முடைய கல்யாணத்துல கூட என் பக்கத்துல டீச்சரும் அவங்க குடும்பமும் இருந்தால் போதும் அவங்க வாழ்த்தினாலே நாம ரொம்ப நல்லா இருப்போம் என கூறுகிறார்.

இதைக் கேட்டு கோபி அதிர்ச்சி அடைகிறார். பாக்கிய மேல இவன் இவ்வளவு நம்பிக்கை வைத்து விட்டு இருக்கா நான் தான் பாக்கி அவ புருஷனுக்கு தெரிஞ்சா இவ என்ன பண்ணுவான்னு தெரியல என குழப்பிக் கொள்கிறார் கோபி.

இந்த பக்கம் எழில் அமிர்தாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றபோது நாளைக்கு ஜானுவோட பிறந்தநாள் நீங்க வறீங்க தானே? என கேட்க தெரியல வரணுமா என அமிர்தா கேட்கிறார். உங்களையும் இன்வைட் பண்ணி இருக்காங்க தானே வாங்க போயிட்டு வரலாம். நிலா பாப்பாவையும் கூட்டிட்டு போகலாம். அங்க அவ எதுக்கு யாராச்சும் ஏதாச்சும் சொல்லுவாங்க என அமிர்தா கூற யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. நிலா பாப்பா வீட்டிலேயே தானே இருக்கா அவளையும் கூட்டிட்டு போகலாம் என கூறுகிறார். அது ஏன் நிலா பாப்பா என கேட்க நீங்கனா நீங்க மட்டும் இல்ல நிலாவும் சேர்த்து தானே. எப்பயும் நான் அப்படித்தான் யோசிப்பேன் என்று சொல்ல அமிர்தா மகிழ்ச்சி அடைகிறார். ‌

பிறகு பாக்கியாவும் செல்வியும் சமைக்கும் இடத்திற்கு செல்ல அவரிடம் வேலை செய்தவர்கள் மீண்டும் வேலைக்கு வருகிறோம் என வந்து கேட்க பாக்கியாவும் வாங்க கூறி அனுப்பி வைத்தார். பிறகு ஒருவர் போன் செய்து பாக்கியா விடும் மன்னிப்பு கேட்டுவிட்டு எங்களுக்கு மீண்டும் சாப்பாடு டெலிவரி பண்ண முடியுமா எனக் கேட்டார். பாக்கியா சரியென என வாக்குக் கொடுத்தார்.

இதனையடுத்து ராதிகா பாக்கியவை பார்க்க வந்து அவரை கட்டியணைத்து வாழ்த்துக் கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Serial Episode Update 03.05.22
Baakiyalakshmi Serial Episode Update 03.05.22