Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்கியாவிடம் சிக்கிய கோபி.. ராதிகா கொடுத்த ஷாக்.. இன்றைய பாக்கியலஷ்மி எபிசோட்

Baakiyalakshmi Serial Episode Update 04.05.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா ஆபீஸில் இருக்க அப்போது ஆபீசுக்கு வந்து ராதிகா அவரை கட்டியணைத்து வாழ்த்துக் கூறி நீங்கள் சொல்வதையும் அதன்பிறகு பேசியதையும் கேட்டேன். திரும்பவும் உங்க பிசினஸ் ரொம்ப நல்லா வரும் சம்பள பாக்கி யாவும் ரெண்டு மூணு பேர் திரும்பவும் சாப்பாடு ஆர்டர் கொடுத்து இருக்காங்க என கூறுகிறார்.

பிறகு ராதிகா ஒரு நாள் நீங்க கண்டிப்பா வீட்டுக்கு வரணும். நீங்க மட்டும் இல்ல வீட்ல இருக்க எல்லோரும் உங்க ஹஸ்பண்டையும் கூட்டிட்டு வாங்க அவரை நான் இது வரைக்கும் பார்த்ததேயில்லை என கூறுகிறார். எங்க வீட்டுக்காரர் வர மாட்டாரு, மத்தவங்க எல்லோரையும் கூட்டிகிட்டு வர்றேன் என சொல்கிறார். ஏன் வரமாட்டார் என கேட்க அவர் என்கூட எங்கேயும் வரமாட்டார் என பாக்கியா சொல்ல செல்வி சாருக்கு அக்காவுக்கு அவ்வளவாக பிடிக்காது என உண்மையை உடைத்து விடுகிறார்.

பிறகு வீட்டுக்கு வந்த ராதிகா கோபியுடன் டீச்சரை பார்த்தேன் என சொல்ல அவர் அதிர்ச்சி அடைகிறார். இந்திய எப்போ என விவரத்தைக் கேட்டார். மேலும் டீச்சரை வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கேன். அவங்களும் வரதா சொல்லியிருக்காங்க என சொல்ல எப்போ இப்பவே சொல்லிடுங்க கோபி கேட்க ராதிகா எதுக்கு எஸ்கேப் ஆக கேட்கறீங்களா என கேட்கிறார். நான் எதுக்கு இயற்கை பாக்கணும் நான் என்ன தப்பு பண்ணேன் என கோபி கேட்க அவங்க மட்டுமல்ல அவங்க ஹஸ்பண்ட்டையும் கூட்டிட்டு வர சொன்னேன் ஆனா அவரு வரமாட்டாராம். டீச்சருடன் எங்கேயும் வெளியே வர மாட்டாராம் சாடிஸ்ட் என நினைக்கிறேன் என சொல்ல நீ அப்படி சொல்லுற என கோபி கேட்க நீங்க எதுக்கு பதட்டமாகறீங்க என ராதிகா கேட்கிறார்.

அவங்க ஃபேமிலி விஷயம் நமக்கு எதுக்கு என கோபி அப்படியே பேச்சை மாற்றுகிறார். அதன் பிறகு வீட்டில் கோபி போன் நோண்டிக் கொண்டே இருக்க அப்போது ரூமுக்குள் வந்த பாக்கியா என்னால முடியாது ன்னு சொன்னீங்களே ஒரு மணி நேரத்துல 100 டிஷ் சமைச்சுட்டேன், பாத்திங்களா என சொல்ல கோபி இப்ப என்ன உன்ன பாராட்டிகிட்டே இருக்கணுமா என கேட்கிறார். அதன் பிறகு என்ன பத்தி தப்பு தப்பா சொல்லி வைக்கிற, நான் உன்கூட இங்கேயும் வந்தது இல்லையா? ஃப்ரெண்ட்ஸ் கிட்ட இப்படியெல்லாம் சொன்னா.. எப்படி உன் கூட வருவேன் என்று கூறுகிறார்.

உடனே பாக்கியா ராதிகா கிட்ட சொன்னது உங்களுக்கு எப்படி தெரியும் எனக் கேட்டேன் அப்போ நீ சொல்லி இருக்க ஒத்துக்கோ என கோபி சத்தம் போட்டு விட்டு படுத்து விடுகிறார். இவ கூட சேர்ந்து நானும் உளறு வாய் ஆயிட்டேன் என புலம்புகிறார். அதன் பிறகு கொஞ்ச நேரத்தில் ராதிகா கோபிக்கு போன் செய்ய கோபி போனை எடுக்காமல் கட் செய்து விடுகிறார். பாக்கியா யாருமே இந்த நேரத்துல போன் பண்றது என கேட்க ஏதோ ராங் நம்பர் என கூறி விடுகிறார்.

பிறகு பாக்யாவுக்கு தெரியாமல் வெளியே சென்று போன் பேச ராதிகா ஒரு வாரமா என்னிடம் நைட்டில் பேசுவதே இல்லை என கோபத்துடன் போனை வைத்து விடுகிறார். ரூம்ல இவ படுத்தறா போன்ல படுத்துறா முடியலடா கோபி எனப் புலம்புகிறார்.

அதன் பிறகு எழிலிடம் இந்த விஷயத்தை சொல்ல அவர் அப்பாவை நம்பாத அவர் என் பிரெண்ட் வச்சுக்கிட்டு இருப்பார் என சொல்ல போடா உன்கிட்ட போய் சொன்னேன் பாரு என திட்டிவிடுகிறார். அதன் பிறகு வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் அமர்ந்து கோபியும் அப்பாவின் பிறந்த நாளை கொண்டாட திட்டமிடுகின்றனர். ஈஸ்வரி அவருடைய சொந்தக்காரர்கள் எல்லோரையும் அழைத்து வீட்டிலேயே பிறந்த நாளை கொண்டாடலாம் என கூறுகிறார். குன்றக்குடியில் இருக்க அவங்க அக்கா குடும்பத்தையும் கூப்பிடலாம் என்று சொல்கிறார். இது சூப்பர் ஐடியா அப்படியே பண்ணிடலாம் என பாக்கியா சொல்ல இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதன் பிறகு வெளியான இருக்கும்போது மறுநாள் இரவு கோபிக்கு அதேபோல் போன் வர அவரும் எடுத்து பேச பாக்கியா யாரது குடுங்க நான் பேசுறேன் என சொல்ல அப்படியே அதிர்ச்சி அடைகிறார்.

Baakiyalakshmi Serial Episode Update 04.05.22
Baakiyalakshmi Serial Episode Update 04.05.22