Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபியை திட்டிய பாக்கியா.கடுப்பான ராதிகா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

Baakiyalakshmi Serial Episode Update 04.07.23

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி பாக்கியாவிடம் வந்து ஏய் பாக்கியலட்சுமி என கேட்க பதிலுக்கு பாக்கியா உங்க மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கீங்க என கேள்வி கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார். பொண்ணுக்கு எக்ஸாம் நடந்துட்டு இருக்கு இந்த நேரத்துல இப்படி ஊரை சுத்திட்டு இருக்க, அந்த பழனிச்சாமியோட பேசாதன்னு நான் உனக்கு பலமுறை சொல்லிட்டேன் ஆனா நீ அதை கேட்கவே இல்லை என கோபி சொல்ல நான் யார் கிட்ட பேசணும், பேச கூடாதுன்னு நீங்க முடிவு பண்ண கூடாது என்று ஷாக் கொடுக்கிறார். என்ன கண்ட்ரோல் பண்ண நீங்க யாரு என பாக்கியா கேள்வி கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார்.

உங்கள விட எனக்கும் அதிகமா கோபப்பட தெரியும், எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன் என எச்சரிக்க இதையெல்லாம் ராதிகா பார்த்துவிட்டு கோபி பின்னாடி போய் நிற்க திரும்பி பார்க்கும் கோபி ராதிகாவை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். செல்வி வந்திருக்கான்னு சொன்னதும் பாக்யாவும் வந்திருப்பா என்று அவளை பார்க்க ஆசை ஆசையா ஓடி வந்துடீங்களா இப்போ உங்களுக்கு சந்தோஷமா என்று கேட்க அவ அந்த லாம்ப் போஸ்ட்டோட வந்திருக்கா என்று சொல்ல அவங்க யாரோட வந்தா உங்களுக்கு என்ன என்று ராதிகாவும் கோபப்படுகிறார்.

இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருந்தீங்கன்னா எனக்கு வர கோபத்துக்கு கல்லை தூக்கி உங்க தலை மேல போட்டு விடுவேன் என சொல்லி ராதிகா அதிர்ச்சி கொடுத்து அங்கிருந்து நடந்து செல்கிறார். அதன் பிறகு இருவரும் ஃபங்ஷனுக்கு செல்ல அங்கு ராதிகாவின் உறவினர் பாக்கியாவை கூப்பிட்டு இவர்களுக்கு ஜூஸ் கொடுக்க சொல்ல ராதிகா பாக்யாவிடம் நக்கலாக பேசுகிறார்.

அதை பார்த்து பழனிச்சாமி பாக்யாவுக்காக உதவி செய்ய அங்கு வரும் சுதாகர் இதை எல்லாம் நீ செய்ய வேண்டியது தானே என்று கேட்க பிறகு பாக்கியா பழனிச்சாமிடம் இருந்து ஜூஸை வாங்கிச் சென்று கொடுக்கிறார். அதன் பிறகு கோபி ராதிகா முன்னிலையில் சாப்பாடு சூப்பர் என பாக்கியாவை சுதாகர் பாராட்ட இவர்கள் இருவரின் முகமும் மாறுகிறது.

மறுநாள் காலையில் எல்லோருக்கும் காபி கொடுத்துக் கொண்டிருக்க கோபி மற்றும் ராதிகாவுக்கும் காபி கொடுக்க காபி வாசனையை கோபி ரசிக்க ராதிகா கடுப்பாகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Serial Episode Update 04.07.23
Baakiyalakshmi Serial Episode Update 04.07.23