தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. கோர்ட்டுக்குப் போன கோபியும் பாக்கியமும் உள்ளே தங்களை அழைப்பார்கள் என காத்துக் கொண்டிருக்கின்றனர். விவாகரத்து கேட்டு வந்திருக்கும் ஜோடிகளை நீதிபதி விசாரிப்பதை பார்க்க கோபி நம்மிடம் என்னென்ன கேள்விகள் கேட்கப் போறாங்க பாக்யாவுக்கு விஷயம் தெரிந்தால் என்ன ஆகும் என பதறுகிறார்.
மேலும் கோபி தங்கள் இருவரையும் அழைத்து விசாரிக்கும் போது இத்தனை வருஷம் கழிச்சு எதுக்கு விவாகரத்து கேட்கிறீர்கள் என நீதிபதி கேட்க விவாகரத்தா? என்னங்க சொல்றிங்க என்னங்க விவாகரத்து பண்ண போறீங்களா நான் என்ன தப்பு பண்ணேன்? எதுக்கு இப்படி முடிவு எடுக்க சொல்லுங்க எதுக்கு எனக்கு துரோகம் பண்ணுங்க என் சட்டையைப் பிடித்து கேட்டு மயங்கி விழுவது போல நினைத்து பார்க்கிறார். இதனால் கோபி தன்னை மறந்து அதையே உளறிக் கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில் பாக்கியா மற்றும் கோபியின் பெயர் கூப்பிட இருவரும் முன்னே நின்று நிற்கின்றனர். ரெண்டு பேருக்கும் இதுல சம்மதமா என நீதிபதி கேட்கிறார். கோபி சம்மதம் என கூறுகிறார் பாக்கியா அவர் சொன்னாருங்க சம்மதம் என சொல்கிறார். பிறகு கல்யாணம் ஆகி எவ்வளவு வருஷம் ஆச்சு? எத்தனை பசங்க? இத்தனை வருஷத்துக்கு பிறகு ஏன் இந்த முடிவு எடுத்தீர்கள் என பாக்கியாவிடம் கேட்கிறார் நீதிபதி. பாக்கியா பிரச்சனையா என்ன பிரச்சனைங்க என கோபியிடம் கேட்க கோபி பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். பாக்கியமும் என்ன சொல்வது என தெரியாமல் அமைதியாக நிற்க நீதிபதி திரும்பவும் உங்ககிட்ட தான் கேட்கிறேன் சொல்லுங்கள் பாக்கியா என கூறுகிறார். உடனே பக்கத்திலிருந்த வழக்கறிஞர் எல்லாமே பெட்டிஷன்ல எழுதி இருக்கு என கூறுகிறார். இருவரையும் கவுன்சிலிங்குக்கு அழைத்துச் செல்லுமாறு சொல்லிவிடுகிறார்.
அதன்பிறகு கோபி வழக்கறிஞரிடம் அவ்வளவுதானா முடிஞ்சதா என கேட்க முடிந்தது வாங்க போகலாம் என சொல்கிறார். இதனால் கோபி நிம்மதியோடு விவாகரத்து கிடைத்து விடும் என நினைத்துக் கொண்டு வெளியே செல்கிறார். கவுன்சிலிங்குக்கு போக சொல்லி இருக்காங்க என வழக்கறிஞர் சொல்ல அதெல்லாம் எதுக்கு ஸ்கிப் பண்ண முடியாதா என கேட்கிறார். அதெல்லாம் பண்ண முடியாது என வழக்கறிஞர் கூறுகிறார். இந்த ஆபீஸ்ல ஒரு மீட்டிங் இருக்கு கண்டிப்பா போகணும் என கோபி சொல்ல தன்னுடைய அசிஸ்டன்ட் அனுப்பி ஸ்கிப் பண்ண முடியுமா என கேட்க சொல்கிறார். ஆனால் அவர்கள் முடியாது என சொல்லி விடுகின்றனர்.
முடியாது நீங்க கவுன்சிலிங் அட்டென்ட் பண்ணி தான் ஆகணும் என வழக்கறிஞர் சொல்லி விடுகிறார். நீங்க அடுத்த முறை வந்தாலும் உங்களுக்கு கவுன்சிலிங் தான் போடுவாங்க என கூறுகிறார். பிறகு இருவரும் கவுன்சிலிங் நடக்கும் இடத்திற்கு செல்கின்றனர். நான் மட்டும் உள்ளே வர அவங்க எதற்கு என கோபி சொல்கிறார். நான் கேட்டுட்டு வரேன் என அசிஸ்டன்ட் உள்ளே சென்ற பிறகு வெளியே வந்து உள்ளே கூப்பிடுகிறார்.
கோபி மட்டும் உள்ளே செல்ல ரெண்டு பேரும்தான் கூப்பிட்டாங்க என கூறுகிறார். அவங்க வேணா வாங்க சமாளிச்சுக்கலாம் என உள்ளே செல்கிறார். உள்ளே போன கோபியிடம் கவுன்சிலிங் கொடுப்பவர்கள் இத்தனை வருஷம் கழிச்சு எதுக்கு விவாகரத்து பண்றீங்க என கேட்கின்றனர். ரெண்டு பேருக்கும் இடையே செட் ஆகல என கோபி சொல்ல உங்க மனைவி எங்கே என கேட்கின்றனர். இதனால் கோபி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Serial Episode Update 05.03.22