Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபிக்கு போன் போட்ட ராதிகா.. பாக்யாவிடம் சிக்குவாரா கோபி .. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

Baakiyalakshmi Serial Episode Update 05.05.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் தன்னுடைய கணவரின் பிறந்த நாளுக்கு யாரையெல்லாம் அழைக்கலாம் என பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு முதலில் வீட்டுக்கு சாப்பிட வர அவரிடம் பிறந்த நாள் குறித்து சொல்ல அவர் அவரும் அப்பாவோட பிறந்தநாள் ரொம்ப நல்லா இருக்கு கொண்டாடலாம் ஆனால் எல்லோரையும் கூப்பிட்டா ஒரே கச கசன்னு இருக்காதா? என சொல்ல செலவாகும்னு நினைக்கிறியா அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் அவருடைய பென்சன் பணம் இருக்கு என சொல்கிறார். அந்த நோக்கத்தில் சொல்லலாமா அவர் உடம்பு சரியில்லாமல் இருக்கார் அதனால் அவருக்கு அமைதி வேண்டும் இல்ல அதனால சொன்னேன் என கூறுகிறார். அதெல்லாம் அவங்களோட சொந்தக்கார பார்த்தா அது ரொம்ப சந்தோஷப்படுவாரு வேணாங்க மட்டும் சொல்லிடாத என சொல்ல ஜாம் ஜாம்னு பண்ணிவிடலாம் என கூறுகிறார்.

மேலும் ஈஸ்வரி எழுந்து உள்ளே சென்றதும் பாக்கியாவிடம் கோபி சொந்தக்காரங்க மட்டும் போதும் பக்கத்து வீடு, உன் பிரண்ட்ஸ் ராதிகா என்று யாரையும் கூப்பிட வேண்டாம் சொல்ல பாக்கியா சரி என்று சொல்கிறார். பின்னர் பாக்யா ஜெனியிடம் ராதிகா பேரையும் லிஸ்ட்ல சேர்த்துக்க அவங்க பேரு மறந்துட்டேன் என சொல்கிறார்.

அதன்பிறகு ஜெனி அழைத்து யாரை அழைக்க வேண்டும் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என கணக்கெடுக்கப்பட்டு நோட்டில் லிஸ்ட் எழுதுகின்றனர். அந்த சமயத்தில் கோபியின் அப்பா எழுந்து வெளியே வர உடனே எல்லோரும் இந்த விஷயத்தை அப்படியே மறைத்து விடுகின்றனர். அவர் என்ன எது எனக் கேட்க ஒன்றும் இல்லை என கூறி விடுகின்றனர். இனியா நீங்க நினைக்கிற மாதிரி சர்ப்ரைஸ் எல்லாம் எதுவும் இல்லை என உளறி விட்டு சென்று விடுகிறார். ஆனால் ஒருவழியாக சமாளித்து விடுகின்றனர்.

அதன் பின்னர் மாலை நேரத்தில் கோபி பணத்தை எடுத்து வந்து பாக்கியாவிடம் கொடுத்து என்னென்ன செலவு பண்ணனுமோ பண்ணிக்க கிராண்டா இருக்கணும் என சொல்கிறார். பிறகு ஜெனி செழியனிடம் என்ன கிஃப்ட் கொடுக்கிறது என கேட்க அதெல்லாம் கொடுக்கனுமா என சொல்ல ஜெனி திட்டி விடுகிறார்.

பிறகு இரவு நேரத்தில் கோபி ராதிகாவிற்கு போன் செய்ய பாக்கியா எங்க போறீங்க எனக் கேட்க அதிர்ச்சி அடைந்து அப்படியே நிற்கிறார். பிறகு எதையோ சொல்லி சமாளித்து போனை கட் செய்துவிட்டு படுத்து விடுகிறார்‌. விடாமல் ராதிகா போன் அடிக்க கொடுங்க நான் பேசுறேன் என சொல்ல ஆடி போகிறார் கோபி. பிறகு போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு என் பிரண்டு தான் அவனுக்கு ஏதோ பிரச்சனை அதனால் எனக்கு போன் பண்ணி புலம்புவான் என சொல்லி சமாளிக்கிறார். கோபி போன் ஸ்விட்ச் ஆப் செய்ததால் ராதிகா இவர் கொஞ்ச நாளாகவே சரியில்லை என கூறுகிறார்.

அதன் பின்னர் மறுநாள் காலையில் பாக்கியா இந்த விஷயம் பற்றி யோசித்துக் கொண்டிருக்க செல்வி என்ன என்று கேட்க பாக்கியா இதை சொல்ல அவர் தப்பாதான் எடுத்துக்கணும் சார் சரி இல்லை என சொல்ல பாக்கியா திட்டி விடுகிறார். பிறகு எழிலும் ஈஸ்வரியும் வந்ததும் இன்னைக்கு ஸ்வீட் செய்து விடலாமா என கேட்க பாக்கியாவும் சரி என்ன சொல்கிறார். பிறகு எழிலிடம் அமிர்தாவை வீட்டுக்கு கூட்டிட்டு வா அவன் ஒரு ஸ்வீட் சென்ற அதை மாமா ரொம்ப ரசிச்சி சாப்பிட்டார் என சொல்ல எழில் கையோடு கூட்டிட்டு வரேன் என கிளம்புகிறார்.

பிறகு ஈஸ்வரி அந்த பொண்ணு எதுக்கு கூட்டிட்டு வர சொல்ற? அந்த பொண்ணோட பேசறது எனக்கு சுத்தமா பிடிக்கல, அவங்க அப்பா அம்மா வேற இல்லை என் புள்ள மாதிரி என சொல்றது எனக்கு கொஞ்சம் கூட சரியா தெரியல என சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Serial Episode Update 05.05.22
Baakiyalakshmi Serial Episode Update 05.05.22