தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்கியா கோர்ட்டுக்கு வந்து எங்களோடு காத்துக் கொண்டிருக்க அப்பா வருவாரா என எழில் கேட்க கண்டிப்பா வருவார் என்று நான் நினைக்கிறேன் பார்க்கலாம் என பாக்கியா சொல்கிறார். ஒருவேளை வரலைன்னா என்ன செய்வ என கேள்வி கேட்க அத பத்தி எல்லாம் யோசிக்கிற மனநிலையில் இல்லை என சொல்கிறார்.
அதன் பிறகு கோபியும் கோர்ட்டுக்கு வந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பிறகு எதிரில் உட்காருகிறார். நீதிபதி வந்தது முதல் ஆளாக பாக்கியம் மற்றும் கோபிநாத்தை அழைக்கின்றனர். இருவரும் ஒரு மனதாக தான் விவாகரத்து கேட்கிறீர்களா என கேட்க இருவருமே அமைதியாக இருக்க வக்கீல் ஆமாம் என சொல்கிறார். நல்லா யோசிச்சு தான் முடிவு பண்ணிங்களா கவுன்சிலிங் போறீங்களா என நீதிபதி கேட்க அதெல்லாம் வேண்டாம். விவாகரத்து கொடுக்க தயாராக இருக்கிறேன் என பாக்கியா சொல்கிறார்.
நீங்க மனதோடு தான் இன்றைக்கு சம்மதிச்சீங்களா என நீதிபதி கேட்க அவர் கேட்டார் நான் கொடுக்க சம்மதித்தேன் என கூறுகிறார். பாக்கியா தனது வாழ்க்கையில் ஏற்பட்ட வலி குறித்து வேதனையோடு கூறுகிறார். வாழ்க்கையில் தன்னம்பிக்கையின் சுயமரியாதையும் முக்கியம் இங்க யாரையும் யாரும் அண்டி பொழைக்க தேவையில்லை யாரிடமும் யாரும் அடிமையாக இருக்க தேவையில்லை அவர் அவருக்கு பிடித்த வாழ்க்கையை வாழ அனைவருக்கும் உரிமையுள்ளது என கூறுகிறார்.
பாக்கியா இப்படி பஞ்ச் டயலாக் எல்லாம் பேசியதை கேட்டு கோபி அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். அதன் பிறகு இருவருக்கும் விவாகரத்து வழங்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது. பிறகு வெளியே வந்த கோபி உள்ள பஞ்ச் டயலாக் எல்லாம் பேசின. தனியா உன்னால வாழ்ந்திட முடியுமா? இப்ப எடுக்கும் பக்கத்துல இருக்க அந்த தைரியத்துல இப்படி பேசிட்ட, போக போக தான் நீ பண்ணது எவ்வளவு பெரிய தப்புன்னு உனக்கு புரியும். என்ன பழி வாங்கறது தான் நெனச்சு உன்னை நீயே பழி வாங்கிக்கிற. என்னம்மா உன்ன தியாகினு என் குடும்பம் தூக்கி வச்சு கொண்டாடுறாங்க. இந்த குடும்பத்துக்காக ரத்தம் சிந்தி உழைத்திருக்கேன். குடும்பத்துல எல்லாரும் சந்தோஷமா இருக்கீங்களா அதுக்கு என்னுடைய உழைப்பு தான் காரணம் என பேசுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.