தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் ராதிகா மயூவை ஸ்கூலுக்கு கொண்டு போய் விட போக கோபி நான் கூட்டிப் போறேன் என்று சொல்ல ராதிகா வேண்டாம் என்று சொல்லி விடுகிறார். பிறகு கோபி மற்றும் ராதிகா இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. என் குடும்பம் பிரிஞ்சதுக்கு நீ தான் காரணம் என்று ராதிகா மீது பழி போட ராதிகா பிடிக்கலன்னா டைவர்ஸ் கொடுத்துட்டு போங்க என்று கோபப்படுகிறார். பிறகு வெளியே வந்து கார் தொடைத்துக் கொண்டே தனியாக பேசி புலம்புகிறார் கோபி.
மறுபக்கம் பாக்யாவில் குடும்பத்தில் எல்லோரும் சந்தோஷமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்த கோபி பாக்யா சந்தோஷமாக இருப்பதை பார்த்து எத்தனை நாளைக்கு இப்படி இருக்கேன்னு பாக்குறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
மறுபக்கம் ரெஸ்டாரன்ட் இல் அனைவரையும் சந்தித்து கோபி லாபம் வரவில்லை இப்படியே போனால் சீட்டு கேட்டு விடுவேன் என்று எல்லாரிடமும் கோபமாக பேசிக் கொண்டு இருக்க அந்த நேரம் பார்த்து அவரது நண்பர் வருகிறார்.
நண்பரிடம் கோபமாக எல்லாத்துக்கும் காரணம் பாக்கிய தானே என்று பேசுகிறார். பிறகு பாக்யாவை ரெஸ்டாரண்டில் பழனிச்சாமி சந்திக்கிறார்.
பழனிச்சாமி பாக்கியாவிடம் என்ன சொன்னார்? கோபி எடுக்க போக முடிவு என்ன? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.