விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் வீட்டில் இனியா ஜெனி மற்றும் பாட்டி என மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது உள்ளே இருந்து எழுந்து வரும் ராமமூர்த்தி வேக வேகமாக வெளியே கிளம்ப தடுத்து நிறுத்தும் ஈஸ்வரி தூங்கிட்டு தானே இருந்தீங்க எதுக்கு எழுந்து வந்தீங்க என கேட்கிறார்.
தூங்கிட்டு இருந்தா அப்படியே விட்டுவிடுவியா எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு நான் பொய் ஆகணும் என கிளம்ப காபி குடிச்சிட்டு போக சொல்லி ஈஸ்வரி காபி எடுத்து வந்து கொடுக்க அந்த காபி கப்பை தட்டி விடுகிறார். என்னதான் ஆச்சு எதுக்கு இப்படி இருக்கீங்க என கேட்க கோபிக்கு கல்யாணம் என சொன்னதும் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அந்த கல்யாணத்துக்கு சமைக்கிறது பாக்கியா தான் என சொன்னதும் இன்னும் அதிர்ச்சி அடைகின்றனர்.
பிறகு மூவரும் ஆட்டோவில் கல்யாணத்தை நிறுத்த கிளம்பி வருகின்றனர் இந்த பக்கம் பாக்கியம் சமையல் வேலைகளை முடித்துவிட்டு எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சு என நிம்மதி அடைய வடை போடணும் என ஞாபகம் வந்து மாவை எடுக்கச் சொல்ல அவளை தடுத்து நிறுத்துகிறார் செல்வி.
உனக்கு வருத்தமாக இல்லையா அக்கா என செல்வி கேட்க பாக்யா சமையல் பற்றி பேச கடைசியில் இன்னும் கொஞ்ச நேரத்துல உன் புருஷன் உனக்கு இல்லைன்னு ஆயிடும். நீ ஒரு வார்த்தை சொல்லு நான் கலாட்டா பண்ணி கல்யாணத்தை நிறுத்துவேன் என சொல்ல நீ எதுக்கு இவ்வளவு வருத்தப்படுற என பாக்கியா கேட்க உன்னை இப்படி பார்க்க முடியல என அழுகிறார். செல்வியை பாக்கியா சமாதானம் செய்ய பிறகு உனக்கு கொஞ்சம் கூட வருத்தம் இல்லையா என செல்வி கேட்க போய் வேலையை பாரு என வடை போட சென்று விடுகிறார்.
பாக்யா ஒரு பக்கம் சமையல் வேலை பார்க்க மணமேடையில் இருவருக்கும் ஜோராக கல்யாண வேலைகள் நடக்கிறது.
கோபிதியின் ராதிகாவையும் உட்கார வைத்து ஐயர் மந்திரம் ஓத ராமமூர்த்தீ, ஈஸ்வரி, இனியா என மூவரும் ஆட்டோவில் வேக வேகமாக வந்து கொண்டு இருக்கின்றனர். கெட்டி மேளம் சொன்னதும் மூவரும் மண்டபத்திற்குள் வந்து இறங்க இத்துடன் பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
