தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ராதிகா வீட்டில் மயூ பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக புது டிரெஸ் அணிந்து அழகாக தயாராகிவிட்டார். மயூராவின் ஃபிரண்ட்ஸ் பிறந்தநாளை கொண்டாட வீட்டிற்கு வந்துள்ளனர். ராதிகா கேக் வெட்டலாம் என சொல்லு கோபி அங்கிள் வந்தாதான் வெட்டுவேன் என அடம் பிடிக்கிறார்.
இந்தப் பக்கம் பாக்கியா செல்வி மற்றும் ஜெனி அமர்ந்து கொண்டு வேலை செய்து கொண்டிருக்க அந்த நேரத்தில் அங்கு வந்த இனியா ஸ்னாக்ஸ் வேண்டும் எனக் கேட்டுவிட்டு பாக்கியா இருப்பதை எடுத்துக் கொடுக்க அதெல்லாம் வேண்டாம் என கோபப்பட்டு செல்கிறார். அதன் பிறகு மீண்டும் அங்கு வந்து அந்த பிசியோதெரபி டாக்டர் எப்ப வருவார் என கேட்கிறார். அவரப் பத்தி எதுக்கு கேக்குற எனக் கேட்க இல்ல தாத்தாவுக்கு சீக்கிரம் குணமாகணும்ல அதனாலதான் கேட்டேன் என கூறுகிறார்.
பிசியோதெரபிஸ்ட் வருவாரே ஆனால் அவர் வருவாரா என தெரியாது என ஜெனி சொல்ல இனியா பதற்றம் அடைகிறார். ஏன் வர மாட்டாரு என கேட்க அப்பா கிட்ட கேட்டு தான் முடிவு பண்ணனும் என பாக்கியா சொல்கிறார். அதன் பிறகு சோபாவில் போய் அமர்ந்து கொண்டு பிசியோதெரபிஸ்டை எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறார். பாக்கியா தாத்தாவை குணப்படுத்தும் வேலைய நாங்க பாத்துக்குறோம் நீ போய் படிக்கிற வேலையைப் பாரு என சொல்கிறார்.
இந்த பக்கம் மயூரா கோபிக்கு போன் செய்து உங்களுக்காகத்தான் காத்துகொண்டு இருக்கேன். நீங்க ஏன் இன்னும் வரல இன்னைக்கு என்னோட பர்த்டே மறந்துட்டீங்களா என மயூரா கேட்க இல்ல டா அங்க தான் வந்துட்டு இருக்கேன். ஒரே ட்ராபிக் அதனாலதான் லேட் என சொல்லி சமாளித்து விடுகிறார் கோபி. அதன் பிறகே ராதிகா வீட்டிற்கு சென்று கேக் கட் செய்துவிட்டு அவர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார் கோபி.
இந்த நேரத்தில் ராதிகாவின் முன்னாள் கணவர் ராஜேஷ் கையில் பொம்மையுடன் வீட்டிற்குள் வருகிறார். ராஜேஷை பார்த்ததும் மயூரா பயந்துபோய் ராதிகா பக்கம் போய் நிற்கிறார். மயூ உங்க அப்பா உனக்கு கிப்ட் வாங்கிட்டு வந்திருக்கேன் என சொல்கிறார். ராதிகாவும் அவருடைய அம்மாவும் இங்க எதுக்கு வந்தீங்க என கேட்கின்றனர். அதான் உங்களுக்கும் எனக்கும் விவாகரத்து ஆகிவிட்டது இனி இங்கே எதுக்கு வரீங்க என கேட்க உனக்கும் எனக்கும் தான் விவாகரத்து ஆச்சு. அவ என் பொண்ணு தானே என சொல்கிறார்.
ஆமா பெரிய பொண்ணு என ராதிகா சொல்ல அப்பாவையும் பொண்ணு இல்லையா எனக்கு தானே பொறந்தா என ராஜேஷ் கேட்கிறார். திரும்பவும் ராஜேஷ் மயூராவிடம் கிப்ட் வாங்கிக்க என சொல்ல எனக்கு வேண்டாம் எனக்கு கோபி அங்கிள் வாங்கித் தருவார் என சொல்கிறார். பிறகு கோபி வீட்டை விட்டு வெளிய போங்க என சொல்ல அதை சொல்ல நீ யாரு என கேட்க அவள்தான் ராதிகாவை கல்யாணம் பண்ணிக்கப் போறாரு என ராதிகாவின் அம்மா சொல்கிறார்.
இவனுக்கு கல்யாணம் பண்ணிக்க தான் என்ன அவசர அவசரமாக விவாகரத்து பண்ணியா என ராஜேஷ் கேட்க ராதிகாவின் அம்மா அவரை திட்டுகிறார். கோபி இனியும் உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன்னு சொல்லி இருக்கீங்க போலீஸ்க்கு போன் பண்ணவா எனக் கேட்க வேண்டாம் நானே போய் விடுகிறேன் என அங்கிருந்து கிளம்பி விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.