தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் எழில் அமிர்தாவை வீட்டிற்கு கூட்டி கொண்டு கிளம்ப அதன் பின்னர் ஈஸ்வரி எதுவுமே எனக்கு சரியா இல்ல. இவை எதுக்கு அடிக்கடி அந்த பொண்ணு வீட்டுக்கு போகணும் வாரத்துக்கு 4 முறை அங்கு போறேன்னு சொல்றான். எழில் ஒரு விஷயத்தை முடிவு பண்ணிட்டா மாத்திக்க மாட்டேன். அந்தப் பொண்ணு நல்ல பொண்ணுதான் நான் இல்லைன்னு சொல்லலை ஆனா உங்க வீட்டுக்கு அந்த பொண்ணு செட் ஆகாது. எழில் வரட்டும் அவனை கண்டிக்க வேண்டும் என கூற பாக்கியா அதெல்லாம் அவர்கள் கொள்ள எதுவும் இருக்காது இதைப்பத்தி பேசி அவனை கஷ்டப் படுத்த வேண்டாம் என சொல்ல நீ கொஞ்சம் அமைதியா இருக்கியா என கூறுகிறார் ஈஸ்வரி.
இந்த பக்கம் அந்த பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது சேர்ந்து இருக்க ஆசையா இருக்கு என சொல்ல வண்டியை நிறுத்தி என்ன சொன்னீங்க எனக் கேட்க அமிர்தா ஒன்றும் இல்லை என சொல்ல இல்ல நீங்க சேர்ந்து இருக்க ஆசையா இருக்குனு தானே சொன்னீங்க என கேட்க ஆமாம் உங்க வீட்ல இருக்க எல்லோரையும் எனக்கு பிடிச்சிருக்கு அவங்க கூட சேர்ந்து இருக்க ஆசையா இருக்கு என கூறுகிறார். அவங்க கூட எல்லோருடனும் சேர்ந்து தான் இருக்கப் போறாங்க. அவங்க எல்லாரும் உங்களுக்கு சொந்தம் தான் என கூறுகிறார்.
பிறகு எழில் வந்ததும் அவனை அழைத்து உட்காரவைத்து உனக்கும் அமிர்தாவுக்கும் இடையே வெறும் 5 மட்டும்தானே இருக்கு என கேட்க ஆமாம் பாட்டி என எழில் தயக்கத்தோடு கூறுகிறார். அந்த பொண்ணு நல்ல பொண்ணுதான் சின்ன வயசிலேயே அந்த பொண்ணுக்கு பலியானது ரொம்ப கஷ்டமான ஒன்று தான் ஆனால் அது எதுக்கும் நாம காரணம் இல்ல நாம எதையும் சரி பண்ண முடியாது. என் தலைமேல அடிச்சு அந்த பொண்ணுக்கும் எனக்கும் பிரெண்ட்ஷிப் தவிர வேற எதுவும் இல்ல ன்னு சத்தியம் பண்ணு என ஈஸ்வரி கூறுகிறார். அத்தை இதெல்லாம் இப்போ தேவையா என பாக்கியா கேட்க நீ கொஞ்சம் அமைதியாய் இரு என கூறி விடுகிறார். எழில் கையை எடுத்து தலைமேல் வைத்து சத்தியம் செய்ய வைக்கிறார் ஈஸ்வரி. இனிமே அந்த பொண்ணோட வீட்டுக்கு போறதுக்கு குறைச்சிக்க என கூறுகிறார். அந்தப் பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்தா அவளை வரட்டும் அவளா போகட்டும் என சொல்கிறார்.
பிறகு எழில் தனியாக நின்று இது பற்றி யோசித்துக் கொண்டிருக்க அப்போது பாக்கியா கையில் எடுத்துக் கொண்டு சென்று எழிலிடம் கொடுத்துவிட்டு உங்க ரெண்டு பேருக்கும் இடையே எதுவும் இல்ல தானே என கேட்கிறார். அதெல்லாம் எதுவும் இல்லை என சொல்ல பிறகு பாக்கியா அம்மாகிட்ட எதையாவது மறைக்க என கேட்க என் கையை பிடித்துக்கொண்டு பாட்டி கிட்ட சொன்னது எல்லாம் பொய். அமிர்தாவை காதலிக்கிறேன். அவங்க கூட எப்பவும் சேர்ந்து இருக்கணும், அவர்கள் அந்த சந்தோஷத்தை திருப்பித் கொடுக்கணும்னு நினைக்கிறேன். அவங்க அப்பா அம்மாவுக்கு ஒரு பையனா இருக்கணும்னு ஆசைப்படறேன் என கூறுகிறார். இதைக் கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைகிறார்.
இதெல்லாம் நம்ம வீட்ல எப்படிடா சரிபட்டு வரும் என கேட்க நீ எனக்கு துணையாக இருந்தால் எல்லாமே சரியாக வரும். நான் என்னுடைய காதலை அமிர்தாவிடம் சொல்லிட்டேன் முதலில் அவங்க என்னை திட்டினார்கள் என்னிடம் பேசாமல் இருந்தாங்க இப்போ தான் அவங்க கொஞ்சம் கொஞ்சமா என்ன புரிஞ்சுகிட்டு என நம்ப தொடங்கி இருக்காங்க என கூறுகிறார். வாழ்க்கை முழுக்க அவங்களோட சந்தோஷமா இருக்கணும்னு ஆசைப்படறேன் என கூறுகிறார்.
அமிர்தா விதவை, அவங்களுக்கு ஒரு குழந்தை இருக்கு நீ யோசிக்கற என கேட்க எனக்கு அதெல்லாம் பிரச்சனை இல்லை ஆனா வீட்ல இருக்கேன் உங்கள சம்மதிக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம் என சொல்கிறார். நீ என்கூட இருந்தா நான் எல்லாத்தையும் தாங்கிப்பேன். எல்லோருக்கும் புரிய வைத்து அவங்களை கல்யாணம் பண்ணிப்பேன். நீ என் கூட இருப்பியா என கேட்க பாக்கியா அந்த பொண்ணை ஒரு நாளும் கண்கலங்க விடக்கூடாது. அந்த குழந்தையை உன்னுடைய குழந்தையா நினைக்கணும் இதெல்லாம் உன்னால முடியுமா எனக் கேட்க ஏன்மா என்னால முடியாதுனு நினைக்கிறாயா என கூறுகிறார் எழில்.
எனக்கு துணையா இருப்பியா என மீண்டும் கேட்க பிறகு நீ இதில் உறுதியாக இருந்தால் நான் உன் கூட இருப்பேன் என எழில் கையைப் பிடித்து கூறுகிறார் பாக்கியா. இதனால் எழில் மகிழ்ச்சி அடைகிறார். மேலும் இன்னும் நல்லா பேசுங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்குங்க கொஞ்ச நாள் போகட்டும் எதுவுமே உடனடியாக முடிவு பண்ண முடியாது என கூறுகிறார்.
நான் எப்பவும் அவங்களோட இருக்கணும் அவ்வளவுதான் வேற எதுக்கும் நான் இப்போதைக்கு ஆசைப்படல என எழில் கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.