தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவுக்கு தாலி கட்டி முடிக்க ஆட்டோவில் வந்து இறங்கி உள்ளே ஓடி வர ஈஸ்வரி, இனியா இதைப் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.
கோபி அம்மாவை பார்த்ததும் மணமேடையில் இருந்து எழுந்து நிற்க நான் என்ன கருமத்தை பார்த்துகிட்டு இருக்க கோபி. நீ இப்படி எல்லாம் பண்ணுவேன்னு நான் கனவுல கூட நினைக்கல என பேசிக்கொண்டு இருக்க இனியா நீங்க என்ன ஏமாத்திட்டீங்க டாடி என்ன சொல்ல இல்லடா என மணமேடையிலிருந்து கீழே இறங்க முயற்சி செய்ய ராதிகா மற்றும் மயூ கோபியின் கையை பிடித்து தடுத்து நிறுத்துகின்றனர். இதனால் கோபி எதுவும் செய்ய முடியாமல் அப்படியே நிற்க கோபி என் அப்பா நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட இந்த வயசுல உனக்கு கல்யாணம் கேக்குதா என அங்கிருந்த தட்டை தூக்கி அடிக்க நீங்க என்னதான் சாபம் விட்டாலும் நாங்க நல்லா இருப்போம் என கோபி கூறுகிறார்.
எப்படி நல்லா இருப்பீங்க ஒரு அம்மா எப்பயும் புள்ளைக்கு சாபம் கொடுக்க மாட்டாங்க இப்ப நான் சொல்றேன் நீ நல்லாவே இருக்க மாட்ட நாசமாத்தான் போகப் போற, ஒரு நாள் யாரும் இல்லாத நடுரோட்டில் நிற்ப என கூறுகிறார். நீ வீட்டை விட்டு வெளியே வந்தப்போ நான் பாக்கியாவை அவ்வளவு திட்டுன கோபி உங்க வீட்டுக்கு திரும்ப வரணும்னு சொன்ன. ஆனா பாக்கியா தான் உன்னை நல்லா புரிஞ்சு வச்சிருக்கா நீ எவ்வளவு பெரிய அயோக்கியனு அவளுக்கு நல்லா தெரிஞ்சு இருக்கு என கூறுகிறார்.
இதையெல்லாம் கேட்டு கோபி அம்மா என தொடங்க என்னை அப்படி கூப்பிடாத இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நீ எனக்கு மகனே இல்ல உன்னை இன்னையோட தலைமுழுகிறேன் என சொல்ல கோபியும் ராதிகாவும் அதிர்ச்சி அடைகின்றனர். எனக்கு விவாகரத்து ஆயிடுச்சு மனசுக்கு பிடிச்சவளை கல்யாணம் பண்ணுனது தப்பா என கோபி பேச கல்யாண வயசுல பொண்ணு புள்ளைங்களை வச்சுக்கிட்டு உனக்கு இதெல்லாம் தேவையா என அசிங்கப்படுத்துகிறார்.
ராதிகாவின் குடும்பத்தார் ஈஸ்வரியை எதிர்த்து பேச அனைவரையும் அடக்குகிறார். இந்த நேரத்தில் பாக்கியா வந்து அத்தை நீங்க எதுக்கு இங்க வந்தீங்க என தடுக்க நீ சும்மா இரு பாக்கியா நீ பண்ணது தான் சரி என பேசுகிறார். இனிமே நாங்க செத்தா கூட நீ வரக்கூடாது. எங்க பேர பிள்ளைகளுக்கும் மருமகளுக்கும் நாங்கள் இருக்கோம் எப்பவும் இருப்போம் என கூறுகிறார். இதை எல்லாம் கேட்டு ராதிகா மாலையை தூக்கி எறிந்து விட்டு ரூமுக்குள் சென்று விடுகிறார்.
பிறகு பாக்யாவை கூட்டிக்கொண்டு ஈஸ்வரி வெளியே கிளம்ப பாக்யா இன்னும் வேலை முடியல அத்தை நீங்க வீட்டுக்கு போங்க நான் வரேன் என அவர்களை அனுப்பி வைக்கிறார். இந்தப் பக்கம் கோபி ரூமுக்குள் சென்று ராதிகாவிடம் மன்னிப்பு கேட்க வீட்டுக்கு போகலாம் என கூறுகிறார். பிறகு எல்லோரும் வீட்டுக்கு கிளம்பிச் செல்ல மேலே பாக்யாவை பார்த்து ராதிகா கோபியின் கையை இறுக்கமாக பிடித்து வெறுப்பேத்த முயற்சி செய்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
