Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கும் கோபி, வருத்தப்படும் ராதிகா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

BaakiyaLakshmi Serial Episode Update 09-01-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் செழியன் கோபி இருவரும் செஸ் விளையாடிக்கொண்டிருக்க கோபி பக்கம் ஈஸ்வரியும் செழியன் பக்கம் இனியாவும் இருந்து ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர். பாக்யா இதை கிச்சனிலிருந்து பார்த்து சந்தோஷப்படுகிறார்.

செல்வி சிரித்துக் கொண்டிருக்க எதுக்கு சிரிக்கிற என்று பாக்யா கேட்கிறார் உன் மாமியாருக்கு நீ தங்கத்திலயோ வைரத்திலையோ நகை வாங்கி கொடுத்தா கூட இவ்வளவு சந்தோஷம் இருக்காது ஆனா அவங்க புள்ள பக்கத்துல இருந்தா எவ்வளவு சந்தோஷப்பட்டு சிரிக்கிறாங்க பாரு என்று சொல்ல சிரிக்கட்டும் செல்வி மாமா போனதில் இருந்து உங்கள் முகத்தில் சிரிப்பே இல்ல இப்ப அதனால உனக்கு என்ன பிரச்சனை என்று சொல்ல ஒன்னும் இல்லக்கா சும்மாதான் சொன்னேன் என்று சொல்லுகிறார். உடனே ராதிகா அவங்க மட்டும் சிரிச்சா போதும்னு நினைக்கிறாங்க அவங்க பையன் ஒன்னு குழந்தை கிடையாது பக்கத்திலேயே வெச்சுக்கறதுக்கு பொண்டாட்டி கிட்ட போயிடக்கூடாதுன்னு சொல்லி எல்லா காரணத்தையும் சொல்லிக்கிட்டே வச்சுக்கிறாங்க என்று சொல்ல அதற்கு பாக்யா அவங்க அந்த காலத்து ஆளு அவங்க பேசுறதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க என்று சொல்லுகிறார்.

பெருசா எடுத்துக்கிற அளவுக்கு தான் அவங்க பேசுறாங்க இது எதையுமே நீங்க சரி பண்ற மாதிரி தெரியல நானே தான் சரி பண்ணிக்கணும்னு நினைக்கிறேன் என்று ராதிகா சொல்லுகிறார்.

பிறகு மயு ஐஸ்கிரீம் சாப்பிட பாக்யா மற்றும் ஜெனி உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஐஸ்கிரீம் சூப்பரா இருக்கு கடையில தான வாங்குனீங்க என்று கேட்க இல்ல மயூ நானே செஞ்சேன் என்று சொல்லுகிறார் உங்களுக்கு ஐஸ்கிரீம் எல்லாம் செய்ய தெரியுமா எனக்கும் செய்ய சொல்லி கொடுங்க என்று சொல்ல அதுக்கு என்ன கண்டிப்பா செஞ்சு தரேன் என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து எழிலும் அமிர்தாவும் வருகின்றனர். பாக்யா அவர்களை வரவேற்று உட்கார வைத்த நலம் விசாரிக்கிறார் பிறகு எழில் என்னமா சாப்பாடு என்று கேட்க இனியா பூரி கேட்டா மீதி பேருக்கு சப்பாத்தி என்று சொல்ல கண்டிப்பா நீங்க சாப்பிட்டு தான் போகணும் என்று சொல்லுகிறார்.

படவேலை எப்படி போயிட்டு இருக்கு என்று கேட்க அதுக்காக லொகேஷன் பார்க்கலாமா வந்தோம் வீட்டுக்கு போலாம்னு சொன்னா அதனால கூட்டிட்டு வந்தேன் என்று சொல்ல உடனே ராதிகாவும் கோபியும் வெளியில் இருந்து உள்ளே வருகின்றனர். கோபி எழில் மற்றும் அமிர்தாவிடம் நலம் விசாரித்துவிட்டு படவேளை குறித்து பேச நன்றாக போவதாக சொல்லுகிறார். ராதிகாவும் எழிலை விசாரித்துவிட்டு மயூ உள்ளே போகலாம் என்று கூப்பிடுகிறார் பாக்கியா இங்கே இருக்கட்டும் என்று சொன்ன பரவால்ல நீங்க பேசிகிட்டு இருங்க என்று சொல்லிவிட்டு மயூவை அழைத்து சென்று விடுகிறார் ராதிகா கிச்சனில் பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டே இவர்கள் குடும்பமாக சந்தோஷமாக சிரித்து பேசிக் கொண்டிருப்பதை பார்க்கிறார்.

பிறகு பாக்கியா போனில் பேசிக்கொண்டிருக்க மயூ தூங்காமல் இருக்கிறார். சாரி மயூ உன்ன வேற தூங்காம டிஸ்டர்ப் பண்ணிட்டேன் என்று சொன்ன அதெல்லாம் ஒன்னும் இல்லையான்னு எனக்கு தூக்கம் வரல என்று சொல்லுகிறார் என்னாச்சு என்று கேட்க முன்னால எங்க மம்மி ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க ஆனா இப்ப அது மாதிரி இல்லை என்று சொல்ல எல்லாருக்குமே ஒருநாள் இது மாதிரியான ஒரு கஷ்டம் வரும் அதிலிருந்து வெளியே வந்த எல்லாம் மாறிடும் என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க கதவை தட்டும் சத்தம் கேட்டு பாக்யா ஓபன் பண்ணி பார்க்கிறார். பார்த்தால் ராதிகா நா வேணா எனக்கு மயூ என்கூட படுக்க வைத்துக்கொள்கிறேன் என்று சொல்ல வேண்டாம் இங்கே இருக்கட்டும் உடனே மயூவும் நான் இங்கேய படுத்துகிறோம் என்று சொல்லுகிறார். சரி என சொல்லிவிட்டு மயூ ராதிகாவை நிற்க வைத்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து குட் நைட் மா என்று சொல்லுகிறார். ரூமுக்கு வந்த ராதிகா தண்ணி இல்லாததை பார்த்து கிச்சனுக்கு தண்ணி எடுக்க வர கோபி இனியா செழியன் ஈஸ்வரி என நால்வரும் பாப்கான் சாப்பிட்டுக்கொண்டு படம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கிச்சன் லைட் போட்டவுடன் கோபி ராதிகாவை பார்த்து இன்னும் தூங்கலையா தூங்கிட்டு நான் லேட்டா கூட வருவேன் என்று சொல்லிவிட்டு வந்துவிடுகிறார் உடனே ஈஸ்வரி ராதிகாவை பார்த்து ரொம்ப நாளாச்சு இது மாதிரி சந்தோஷமா இருந்து என்று சொல்ல கண்டிப்பா அம்மா ரொம்ப நாள் ஆகுது நான் இவ்ளோ சந்தோஷப்பட்டு என்று சொன்ன ராதிகா அமைதியாக மேலே சென்று விடுகிறார்.

மறுநாள் காலையில் ஈஸ்வரி உட்கார்ந்து கொண்டிருக்க பாக்யா வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து ராதிகா வர ஈஸ்வரி என்ன பேசுகிறார்? அதற்கு ராதிகா என்ன சொல்கிறார்? பாக்யாவின் பதில் என்ன? என்பதை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Episode Update 09-01-25