Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்கியா சொன்ன வார்த்தை. அதிர்ச்சியில் குடும்பத்தினர். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial episode update 09-02-23

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா கல்யாணத்தை நிறுத்த வர்ஷினியின் அப்பா மொத்த குடும்பமும் கஷ்டப்படுவீங்க என சாபம் விட்டு வர்ஷினி அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

கோபி இந்த கல்யாணம் நடந்திருந்தால் அவன் கேரியர் நல்லா இருந்திருக்கும் இப்போ அதுலயும் மன்னவாரி போட்டுட்டேன் இப்ப என்ன பண்ண போற என கேட்க ஈஸ்வரி இந்த கல்யாணம் நடக்காது என சொல்லி அமிர்தாவை கண்டபடி பேசுகிறார். மேலும் அன்னைக்கே உங்ககிட்ட சொன்னேன்ல இந்த கல்யாணம் செட் ஆகாது, எவனா இளிச்சவாயன் கிடைச்சா அவன் தலையில உங்க பொண்ணு கட்டி வைக்கலாம்னு பார்த்தீங்களா என சத்தம் போடுகிறார்.

அடுத்து ராமமூர்த்தி ஏன் இப்படி பண்ணமா? எடுத்தேன் கவுத்தேனு இப்படியா பண்ணுவ? இந்த கல்யாணம் மட்டும் நடந்திருந்தால் எழில் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும் என சொல்ல, எனக்கு கல்யாணம் ஆகி 25 வருஷம் ஆகுது, பெரியவங்க எல்லாம் வாழ்க்கை நல்லா இருக்கும்னு நினைச்சு தான் உங்க பையனுக்கு பிடிக்காத இந்த கல்யாணத்தை பண்ணி வச்சீங்க ஆனா இந்த 25 வருஷமா நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேன் தெரியுமா? உங்களுக்குத் தெரியுமா அத்தை?

உங்க பையன் என்கிட்ட சொன்னதெல்லாம் உன்னை புடிக்கல புடிக்கல என்பது மட்டும்தான். இப்போ எனக்கு 44 வயசாகுது என் வாழ்க்கையில் திரும்பி பார்த்தா புடிக்கல என்ற வார்த்தை மட்டும்தான் நிறைஞ்சிருக்கு இதே வாழ்க்கையை என் பையன் வாழக்கூடாது. அவனுக்கு பிடிச்ச பொண்ணோட தான் கல்யாணம் நடக்கணும் என சொல்ல ஈஸ்வரி நான் உயிரோட இருக்கும் வரை அது நடக்காது என அதிர்ச்சி கொடுக்கிறார்.

பாக்கியா நான் இப்போ என் பையன் பக்கம் தான் நிக்கணும். இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கணும், பணத்துக்காக என்னுடைய பையனுடைய வாழ்க்கையை அடமானம் வைக்க முடியாது என சொல்கிறார். நான் உங்களை மரியாதை குறைவா பேசுற தானே நினைச்சாலும் பரவாயில்லை. இப்போ உங்களுக்கு மருமகளாய் இருக்கிறதை விட என் மகனுக்கு அம்மாவா இருக்கிறது தான் முக்கியம் என சொல்ல ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார்.

அடுத்து எழிலை மணமேடையில் உட்காரச் சொல்ல எழில் எப்படி மா என கேட்க ராமமூர்த்தி இதெல்லாம் சரியா வருமா எனக் கேட்க தயவுசெய்து இதுக்கு மேலயும் இத பத்தி எதுவும் பிரச்சனை செய்ய வேண்டாம் என பாக்யா சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 09-02-23
baakiyalakshmi serial episode update 09-02-23