Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்கியா வீட்டில் என்ட்ரி கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் … மெகா சங்கமம் இன்றைய எபிசோட்

Baakiyalakshmi Serial Episode Update 09.05.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கிய லட்சுமி. இரண்டு சீரியல்களும் மெகா சங்கமம் என்ற பெயரில் இன்று முதல் சில தினங்களுக்கு இணைந்து ஒளிபரப்பாக உள்ளன.

அதன்படி இன்றைய எபிசோடில் ரோஸ் குடும்பம் மொத்தமாக கிளம்பி பாக்கியா வீட்டுக்கு வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் வந்து குடும்பத்தோடு அமர்ந்து பேசிக் கொண்டிருக்க பிறகு கோபி உள்ளே நுழைய வீட்டின் வெளியே நிறைய செப்பல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பிறகு கண்ணன் ஓடிச்சென்று மாமா என கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கிறார். மூர்த்தி கதிர் ஜீவா என அனைவரும் கோபியை கட்டிப்பிடித்து வரவேற்கின்றனர். பிறகு அனைவரையும் வார்த்தைக்கு வாங்க என அழைத்து விட்டு பாக்கியாவை மேலே அழைத்து கொண்டு ரூமிற்கு செல்கிறார். மேலே சென்றதும் இவங்களை எல்லாம் யார் வரச்சொன்னது எதுக்காக இப்ப வந்து இருக்காங்க எனக்கு அத்தை மாமா பிறந்தநாளுக்கு வந்திருக்காங்க என கூறுகிறார். அது நாளைக்கு மறுநாள் தானே இப்பவே எதுக்கு வந்தாங்க என கேட்க அத்தைதான் ரெண்டு நாளைக்கு முன்னாடி வர சொன்னாங்க என கூறுகிறார்.

நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது இன்னும் ரெண்டு மணி நேரத்துல எல்லாரும் இங்கிருந்து கிளம்பனும் என சொல்ல எங்க போவாங்க எனக் கேட்க எங்கேயாவது போக மட்டும் இல்லனா குன்னக்குடி கிளம்பி போகட்டும் என திட்டி கொண்டே இருக்கிறார். இந்த நேரத்தில் கண்ணன் பாண்டியனை தூக்கிக்கொண்டு ரூமிற்குள் வந்து விடுகிறார். எதுவும் சொல்லிடாத கொஞ்சம் அமைதியா இருங்க என சொல்ல பிறகு கண்ணன் பேகில் இருந்து வேட்டியை தேடி பிடித்து எடுத்துக் கொண்டு செல்கிறார். பாண்டியனை பெட்டில் படுக்க வைக்க அவன் உச்சா போய் விட கோபி கண்ணன் வெளியே போனதும் கோபி சத்தம் போடுகிறார்.

கீழே பெண்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். கோபி அண்ணா என்ன வைப்ரேஷன் மோடில் இருக்கிறார் என நீ நான் கேட்க செல்வி அவர் அப்படித்தான் யாரிடமும் எதுவும் பேச மாட்டார் என கூறுகிறார். இந்த பக்கம் மூர்த்தி, ஜீவா எழிலின் தாத்தாவோடு அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். இனியா தான் எடுத்த மார்க் பற்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தாரிடம் சொல்லி மகிழ்ச்சி அடைகிறார்.

பாக்கியாவிடம் ஈஸ்வரி மூர்த்தியும் கண்ணனும் கோபியோட ரூமில் படுத்துக்கட்டும் என சொல்கிறார். ஜீவாவும் கதிரும் செழியனுடன் படுத்துக்கட்டும். உடனே இனிய என்கூட மீனாக்கா ஐஸ்வர்யா அக்கா ஜெனி அக்கா படுத்துக்கொள்ளட்டும் என சொல்கிறார்.

இதைக் கேட்ட பாக்கியா அவர் டென்ஷன் ஆவாரே என யோசிக்கிறார். நாளையே எபிசோடு காண புரோமோ வீடியோவில் மூர்த்தி ஒரு பக்கம் தூக்கத்தில் புலம்ப கண்ணன் ஐஸ்வர்யாவை நினைத்து கோபிக்கு முத்தம் கொடுக்கிறார். இப்படி ஒரே அலப்பறையாக இன்றைய எபிசோட் முடிவடைந்துள்ளது. ‌‌

Baakiyalakshmi Serial Episode Update 09.05.22
Baakiyalakshmi Serial Episode Update 09.05.22