Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ராதிகாவுக்கு ஆறுதல் கூறிய அம்மா. கோபியிடம் கோபப்பட்ட ராதிகா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial episode update 09-05-23

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி.

இந்த சீரியலின் இன்றைய எபிசோடு ராதிகா தன்னுடைய அம்மாவிடம் ஈஸ்வரி பேசிய விஷயங்கள் பற்றி சொல்ல அவர் சரி விடு எல்லாம் சீக்கிரம் சரியாகிவிடும் அந்த ஈஸ்வரி அம்மாவே நீதான் என்னுடைய மறுபக்கம் கண்டிப்பாக சொல்லுவாங்க அதற்கான நாள் நிச்சயம் வரும் என ஆறுதல் கூறுகிறார். மேலும் அதான் உனக்கு சப்போர்ட்டா கோபி இருக்காரு இல்ல என சொல்ல அவர பத்தி பேசாத அவரும் வந்து நீ ஏன் இப்படி பண்ணனு என்கிட்ட கேட்டாரு என்ன சொல்ல அவர் மட்டும் என்ன பண்ணுவாரு அப்பா அம்மா நீ அவருடைய பிள்ளைங்க முன்னாள் மனைவி என எல்லாரும் அந்த வீட்ல இருக்காங்க, அவரும் எல்லாரையும் சமாளித்து நடக்கணும்ல என சொல்லி ராதிகாவை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்.

இங்கே வீட்டில் உள்ள எல்லோரும் நிலா பாப்பாவுடன் சந்தோஷமாக உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருக்க அப்போது கோபி கீழே இறங்கி வர அவரும் எல்லோரும் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்து சந்தோஷப்பட்டு வந்து உட்கார்ந்து நிலா பாப்பா உடன் விளையாடுகிறார். இந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வரும் ராதிகா இதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

ஆனால் கோபி ராதிகா வந்து இருப்பதை கூட கவனிக்காமல் நிலா பாப்பாவுடன் விளையாடிக் கொண்டிருக்க கடுப்பான ராதிகா மேலே ரூமுக்கு சென்று விடுகிறார். பிறகு ரூமுக்கு வந்த கோபி நீ எப்ப வந்த ராதிகா எனக்கு கேட்க நீங்கதான் உங்க குடும்பத்தோட சந்தோஷமா இருந்தீங்களே என பேச நான் இங்கே சந்தோஷமா இருந்தேன் என கோபி கேட்க ராதிகா நடிக்காதீங்க என கோபப்படுகிறார். அதன் பிறகு காலையில் நடந்த விஷயங்களுக்காக கோபி மன்னிப்பு கேட்கிறார். இருந்தாலும் ராதிகா கோபம் குறையாமல் இருக்கிறார். மேலும் உங்களுக்காக நான் எல்லாத்தையும் விட்டுட்டு வந்து இருக்கேன் ஆனா நீங்க என்ன புரிஞ்சுக்கல. இது கல்யாணம் வேண்டாம்னு நான் எவ்வளவு சொல்லியும் நீங்க கேட்கல இப்போ நான் நிம்மதி இல்லாம இருக்கேன் என சொல்லி புலம்ப இதை மாடியில் இருந்து கீழே இறங்கும் பாக்யா கேட்டு விடுகிறார்.

அதன் பிறகு ராதிகா கிச்சனில் இருக்கும்போது அங்கு வரும் பாக்கியா ஜெனிக்கு செய்த உதவிக்காக நன்றி கூறுகிறார். முன்னெல்லாம் உங்கள பார்க்கும் போது அவ்வளவு பாசிட்டிவா இருக்கும், ராதிகா மாதிரி தான் நீ வரணும்னு நான் நிறைய முறை இனியா கிட்ட சொல்லி இருக்கேன். ஆனா இன்னைக்கு இப்படி உங்கள பாக்கவே முடியல. நீங்க எல்லாத்தையும் இழந்துட்டு இருக்க மாதிரி இருக்கு என சொல்லி ராதிகாவுக்கு காபி போட காபி தூள் மற்றும் சர்க்கரையை எடுத்துக் கொடுத்து கொடுக்கிறார். மேலும் அத்தை அப்படி பேசி இருக்க கூடாது அவங்க சில நேரம் என்னையும் அப்படித்தான் பேசுவாங்க. அது எல்லாம் நீங்க பெருசா எடுத்துக்காதீங்க என சொல்லிவிட்டு வர கொஞ்ச நேரத்தில் அங்கு வரும் ஈஸ்வரி நீ எதுக்கு கிச்சனுக்கு வந்த என சத்தம் போட ராதிகா எதுவும் பேசாமல் காபி எடுத்துக்கொண்டு மேலே சொல்கிறார்.

பிறகு பாக்யா எதுக்கு அத்தை சும்மா சும்மா உங்கள திட்டிகிட்டு இருக்கீங்க என கேட்க நான் என்ன பேசணும்னு எனக்கு தெரியும் நீ எதுவும் பேசாத என பாக்கியாவிடம் கோபப்பட்டு விட்டு ரூமுக்கு செல்கிறார் ஈஸ்வரி. ‌‌

அதற்கு அடுத்ததாக எழில் மற்றும் அமிர்தா இருவரும் கிச்சனில் ஆசையாக பேசிக்கொண்டு ஒருவருக்கொருவர் தோசையை ஊற்றிக் கொண்டிருக்க இந்த நேரம் கீழே வரும் கோபி இதை பார்த்து சந்தோஷப்படுகிறார். பிறகு ராதிகா கிச்சனுக்கு செல்ல கீழே இறங்கி வர கோபி அவரை தடுத்து இப்படிக்கு போக வேண்டாம் என சொல்ல இங்கே எல்லோரும் சந்தோஷமாத்தான் இருக்கீங்க நான் தான் சந்தோஷம் இல்லாம இருக்கேன் என் ராதிகா கோபப்பட்டு விட்டு மேலே செல்ல கோபி இப்ப நான் என்ன சொல்லிட்டேன் இப்படி பேசுறா என புலம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 09-05-23
baakiyalakshmi serial episode update 09-05-23