Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்கியாவை பாராட்டும் கோபி,ராதிகா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

BaakiyaLakshmi Serial Episode Update 10-01-25

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா ஹாலில் உட்கார்ந்து கொண்டு மேக்கப் பொருட்களை பரப்பி வைத்துவிட்டு ஒன்றொன்றாக எடுத்த மேக்கப் போட்டு பார்த்துக் கொண்டிருக்கிறார். கிச்சனில் இருக்கும் செல்வி I இனியா பாப்பா என்ன அக்கா பண்ணிக்கிட்டு இருக்கு என்று கேட்க டான்ஸ்காக என்ன மேக்கப் போடலாம்னு ப்ராக்டிஸ் பண்ணிக்கிட்டு இருக்கா என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கின்றனர்.

கொஞ்ச நேரத்திலேயே இனியாவிற்கு ஃபோன் வர போன் பேச வெளியே சென்று விடுகிறார். அவ்வளவுதான் வெளியே போயிட்டா இதோட அரை மணி நேரம் ஒரு மணி நேரம் கழிச்சு தான் வருவா என்று சொல்லிவிட்டு சரி வா நம்ம போய் பரண் மேல் இருக்கிற சாமான் எடுக்கலாம் என்று சொல்லி கிளம்புகின்றனர். அந்த நேரம் பார்த்து மயூ வந்து சேரில் உக்கார மேக்கப் பொருட்களை பார்த்து ஆசைப்பட்டு எடுத்து மேக்கப் போட்டுக் கொள்கிறார். உடனே இனியா வர எதுக்கு மயூ என்னோட பொருள் எல்லாம் யூஸ் பண்ற என்று கேட்கிறார். இல்லகா ஆசையா இருந்தது அதனால தான் பண்ண என்று சொல்ல ஒருத்தர் யூஸ் பண்ணது இன்னொருத்தர் எப்படி யூஸ் பண்றது என்று கேட்கிறார். அது மட்டும் இல்லாம நான் ட்ரை பண்ணுது பண்ணாதது என இரண்டு வகையா பிரிச்சு வச்சிருந்தேன் என்று சொல்ல இதையெல்லாம் பார்த்து ஈஸ்வரி உடனே வந்து மயூவை திட்ட ஆரம்பிக்கிறார்.

உனக்கெல்லாம் அறிவே இல்லையா மத்தவங்க பொருளை இப்படித்தான் கேட்காமல் எடுத்து யூஸ் பண்ணுவியா என்று திட்ட குடும்பத்தில் இருக்கும் அனைவரும் வந்து விடுகின்றனர் உடனே பாக்யா என்னாச்சு என்ன விஷயம் என்று கேட்க ஈஸ்வரி உடனே மேக்கப் பொருட்களை எடுத்து மேக்கப் போட்டுட்டு கீழே போட்டு உடைத்து சோபால தடவிட்டால் என்று இல்லாததை எல்லாம் சொல்லி பழி போடுகிறார். இனியா ஈஸ்வரி சொல்வதை கேட்டு அதிர்ச்சியடைகிறார். மயு நான் அதெல்லாம் பண்ணல மேக்கப் போட்டுட்டு அதை எழுத்துல வச்சுட்டேன் என்று சொல்லுகிறார். கோபி சின்ன குழந்தை விடுங்கம்மா என்று சொல்ல யாராவது வயசாவது குழந்தையா என்று திட்டுகிறார்.

உடனே பாக்கியா இனியாவிடம் என்ன நடந்துச்சு என்ன விஷயம் என்று கேட்க நாம் மேக்கப் போடுற ஐட்டம் தனித்தனியாக வைத்திருந்த எல்லா ஒன்னு ஆயிடுச்சுன்னு சொல்ல மயூ நான் எல்லாத்தையும் எந்த இடத்தில் எடுத்தாலும் அந்த இடத்துல வச்சுட்டேன் என்று சொல்லுகிறார். நீ ஏதாவது திட்டினியா என்று இனியாவிடம் கேட்க இல்லமா ஒருத்தர் யூஸ் பண்ணதை எப்படி இன்னொருத்தர் யூஸ் பண்ணுவது என்று தான் கேட்டேன் என்று சொல்லுகிறார். அப்போ நீ ஜெனி ஓட மேக்கப் ஐட்டம் யூஸ் பண்றது இல்லையா என்று கேட்க பண்ணுவேன் என்று சொல்லுகிறார். அப்ப எப்படி என்று கேட்டு நீ பேசுனது தப்புன்னு தோணுச்சுன்னா .மயூகிட்ட மன்னிப்பு கேளு என்று சொல்லுகிறார். உடனே இனியா சாரி மயூ என்று சொல்ல, ராதிகாவும் மயூவிடம் மத்தவங்க பொருளைக் கேட்காமல் எடுக்கிறது தப்பு உனக்கு மேக்கப் ஐட்டம் வேணும்னா என்கிட்ட கேட்டு இருக்க வேண்டியதுதானே என்று திட்டுகிறார். குழந்தை எதுக்கு சொல்றீங்க ஒரு சில பெரியவங்களே வந்து புரிஞ்சுக்க தெரியாம பேசறாங்க என்று சொல்ல ஈஸ்வரி என்னைதான சொல்றேன் என்று கோபப்படுகிறார். நான் அப்படியெல்லாம் சொல்லல அத்த நீங்க யாரோ ஒருத்தர் போன் பண்ணனும்னு சொன்னீங்களே என்று சொல்லி பேச்சை மாற்றி ஈஸ்வரியை அனுப்பி வைக்கிறார். உடனே கோபி பாக்கியாவை நிறுத்தி எவ்வளவு அழகா இந்த பிரச்சனையை சால்வ் பண்ணிட்ட பாக்யா இரண்டு பேருக்குமே மனசு கஷ்டப்படாத மாதிரி தீர்ப்பு சொல்லிட்டா என்று பாராட்டுகிறார்.

மறுபக்கம் பாக்யாவும் செல்வியும் வெளியில் வேலை பார்த்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்க ராதிகா டிவி ஆன் பண்ணி பாட்டு வைக்கிறார். பாட்டு சத்தம் கேட்டு இனியா வெச்சிருப்பா என்று நினைத்துக் கொண்டு ஈஸ்வரி வெளியில் வந்து பார்க்க ராதிகாவை பார்த்து அதிர்ச்சியாகி எதுக்கு இவ்ளோ சத்தமா பாட்டு வச்சிருக்கேன் என்று கேட்கிறார் உங்களுக்கு பாட்டு சத்தமா இருக்கணும் மட்டும் சொல்லுங்க எதுக்கு இப்படி பேசிக்கிட்டு இருக்கீங்க என்று சொல்ல ராதிகா சத்தம் குறைக்கிறார். மீண்டும் ஈஸ்வரி ரூமுக்குள் சென்று என் வீட்டிலேயே உட்கார்ந்துகிட்டு இவ்வளவு அதிகாரம் பண்ணுவாளா என்று மீண்டும் பிரச்சனை பண்ண வருகிறார். ராதிகாவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து கோப்பி வருகிறார். உடனே ராதிகா இப்போ சேனல்ல சவுண்ட் கம்மி ஆயிடுச்சு பாருங்க ரிமோட் பிரச்சனை என்பது போல் நாடகமாடுகிறார்.

உடனே கோபி கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன் என்று சொல்ல ஈஸ்வரி சேனலுக்கு போன் பண்றேன் என்று சொல்லுகிறார் அதற்குள் ராதிகா கோபியை அழைத்து சென்றுவிட பிறகு என்ன நடக்கப் போகிறது? ஈஸ்வரி என்ன சொல்லப் போகிறார்?கோபியின் பதில் என்ன ?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Episode Update 10-01-25
BaakiyaLakshmi Serial Episode Update 10-01-25