Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குழப்பமான சூழ்நிலையில் விவாகரத்து நோட்டீஸ் உடன் கோபி.. பரபரப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்

Baakiyalakshmi Serial Episode Update 10.02.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. கோபியை அழைத்து பாக்யாவின் தாலிக்கு குங்குமம் வைக்க சொல்கிறார் ஈஸ்வரி. பாக்கியா பக்கத்தில் வந்து நின்ற கோபி தாலியையும் கையிலிருக்கும் விவாகரத்து நோட்டீஸ் செய்யும் பார்த்துக் கொண்டிருக்கிறார். என்ன கோபி யோசிச்சிட்டு இருக்க குங்குமம் பையன மீண்டும் ஈஸ்வரி சொல்ல கோபி குங்குமம் வைத்து விடுகிறார். இதனால் உனக்கு இந்த மகிழ்ச்சியான பாக்கியா அதன் பின்னர் அத்தை மாமா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளலாம் என கூறுகிறார். பிறகு இருவரும் அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டனர்.

பின்னர் கோபி அங்கிருந்து மேலே செல்கிறார். வீட்டிற்கு வந்தவர்கள் ஆகியவை நல்லா இருக்கோணும் என வாழ்த்துவது கேட்டு கோபி தவிக்கிறார். கையில் விவாகரத்து நோட்டீஸ் வைத்துக்கொண்டு என்ன செய்வது என சிந்தனையில் இருக்கிறார். ரூமுக்குள் போன கோபி விவாகரத்து நோட்டீசை பிரித்து வைத்துக் கொண்டு ராதிகா சொன்ன வார்த்தையை நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் பாக்கியா கதவைத் திறந்து உள்ளே வர விவாகரத்து நோட்டீஸ் மறைத்து வைக்கிறார் கோபி. பிறகு தண்ணீர் வைத்து விட்டு அவர் வெளியே செல்ல பாக்கியா அப்பா சாப்பிட்டுட்டு விட்டாரா அம்மா தூங்கிட்டாங்களா எனக் கேட்க இருவரும் தூங்கி விட்டார்கள் என கூறுகிறார். அப்பாக்கு ஏதாவதுன்னா அம்மா பார்த்துபாங்களா என கேட்க நானும் ஹாலில் தான் தூங்குவேன். எழிலும் இருக்கான் நாங்க பார்த்துப்போம் என சொல்கிறார்.

அதன்பிறகு கோபி சிந்தனையில் இருப்பதை பார்த்த பாக்கியா ஏன் டல்லா இருக்கீங்க மாமா சீக்கிரம் குணமாகிவிடுவாரு. நீங்க கவலைப் படாதீங்க. நிம்மதியா படுத்து தூங்குங்க நீங்க நல்லா இருந்தாதான் நாங்க நல்லா இருக்க முடியும். அத்தை நானும் என எல்லோரும் உங்களை நம்பித்தான் இருக்கும் என பாக்கியா சொல்கிறார். பிறகு பாக்கியா ரூமில் இருந்து வெளியே செல்கிறார்.

பாக்கியா சொன்ன வார்த்தை ராதிகா சொன்ன வார்த்தை என இரண்டையும் யோசித்துப் பார்த்து கடும் குழப்பத்தில் இருக்கிறார் கோபி. இந்த பக்கம் காலையில் செழியன் எழுந்ததும் ஜெனியை தேடுகிறார். ஜெனி ஜெனி என கூப்பிட நீண்ட நேரம் கழித்து அவர் கையில் காபியோடு ரூமுக்கு வருகிறார். காலைல எங்க போயிட்டு நான் எழுந்ததும் உன் முகத்தை பார்க்கணும்னு நினைச்சேன் என கூறுகிறார். நீ என்ன மேடம் வீட்ல இருக்கு உங்க கூட தான் அதிகமா டைம் ஸ்பென்ட் பண்ற என செழியன் சொல்கிறார். இது ஜாயின்ட் ஃபேமிலி அப்படித்தான் இருக்கமுடியும் எப்பயும் ரூம் கொள்ளவே இருக்க முடியாது என கூறுகிறார் ஜெனி.

இதுக்குத்தான் தனியா போயிடலாம்னு சொன்னேன் இங்கே ஒரு ஸ்பேஸ் இல்ல. தாத்தாக்கு உடம்பு சரியில்ல சண்டை இது அது என ஒரே பிரச்சனையா இருக்கு. நாம தனியா போய்ட்டா இதெல்லாம் இல்லாம நிம்மதியா இருக்கலாம் என கூறுகிறார். இதுக்கு மேல நான் இங்கே இருந்த கடுப்பாயிடுவேன் என ஜெனி எழுந்து சென்று விடுகிறார். அம்மாவுக்கு எவ்வளவு எந்த வித்தியாசமும் இல்லை என புலம்புகிறார் செழியன்.

அதன்பிறகு தாத்தாவின் ரூமுக்கு வந்த எழில் அவரை எழுப்பி குளிக்க வைத்து அலங்காரம் செய்து ஹாலுக்கு கூட்டி வருகிறார். அனைவரும் சூழ்ந்து நின்றுகொண்டு கோபியின் அப்பாவை கவனிக்கின்றனர். எல்லோரும் காட்டும் பாசத்தை பார்த்து கண்ணீர் வடிக்கிறார் கோபியின் அப்பா. கடவுளே இந்த குடும்பத்தை நான்தான் பாத்துக்கணும் சீக்கிரம் இல்ல குணப்படுத்து என வேண்டிக் கொள்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Serial Episode Update 10.02.22
Baakiyalakshmi Serial Episode Update 10.02.22