Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்கியாவிடம் கெஞ்சிய இனியா, கோபி எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

BaakiyaLakshmi Serial Episode Update 10-03-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செல்வி ஆகாஷை அடித்து இனியவை பார்க்க தான் ரெஸ்டாரண்டுக்கு வந்தியா, எப்ப பாத்தாலும் போன் பேசிக்கிட்டு இருந்ததே அவகிட்டதானா நான் இதுவரைக்கும் எங்கேயும் இவ்வளவு அசிங்கப்பட்டதில்ல நான் பாக்கிய அக்கா முகத்துல எப்படி டா முழிப்ப? நான் இது இதுவரைக்கும் எங்கேயும் அசிங்கப்பட்டது இல்ல ஆனா எவ்வளவு அசிங்கப்படுத்தி அனுப்பினார்கள் தெரியுமா. உன் மேல நம்பிக்கை வச்சது என் தப்பா இந்த குடும்பத்தை முன்னேறி கொண்டுட்டு வந்துருவேன்னு நம்பினேனே என்று அடித்து அழுகிறார்.

ஒரு கட்டத்திற்கு மேல் உட்கார்ந்த செல்வி எனக்கு புருஷனும் சரியில்லை என்று பார்த்தால் பெத்ததும் சரியில்ல பேசாம நான் செத்து போயிடவா. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்றேன்னு சொல்றாங்க என்ற தலையில் அடித்துக் கொண்டு படிப்பெல்லாம் உனக்கு ஒரு கேடா என்று பேகை தூக்கி வீசிறி அடிக்கிறார். ஒருவேளை தேவையில்லாமல் நான்தான் உன்னை ரொம்ப நம்பிட்டேன்னு தகுதி தகுதின்னு சொல்றாங்க அப்போ இதுதான் நம்மளோட தகுதியா இந்தத் தகுதியை விட்டு மேல போகணும்னு நீ நினைக்கவே இல்லையா என்று சொல்லி அழுகிறார்.

மறுபக்கம் பாக்கியா வீட்டில் அனைவரும் சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க ஈஸ்வரி ராமமூர்த்தியின் போட்டோவை பார்த்து இதுக்கு தான் என்ன தனியா தவிக்க விட்டுட்டு போயிட்டீங்களா பேசாம நீங்க இருந்து நான் போய் சேர்ந்திருக்கலாம் என்று சொல்ல, கோபி மற்றும் செழியன் இருவரும் எதுக்கு இப்படியெல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார். ஈஸ்வரி இனியாவிடம் உனக்கு இந்த வீட்ல என்ன குறை வச்சாங்க அப்பா அம்மா இரண்டு அண்ணா எல்லாரும் உன் மேல பாசத்தை கொட்டுனாங்க நீ நினைச்சதை எல்லாம் வாங்கி கொடுத்தாங்க நீ ஆசைப்பட்டதெல்லாம் படிக்க வச்சாங்க அப்படி இருந்தோம் நீ இது மாதிரி ஒன்னு பண்ணிட்டு வந்து நிக்கிற என்று கோபப்பட்டு திட்ட எழில் விடுங்க பாட்டி ரொம்பவே திட்டியது என்று சொன்னால் செழியன் எனக்கு அவ்வளவு கோவம் வருது என்று சொல்லுகிறார். சரி விடுடா அதுக்குள்ள திட்டிக்கிட்டே இருப்பீங்களா என்று கேட்க இனியாவை எழிலுள்ளே போக சொல்ல, இனியா போகாமல் நிற்க கண்ணைக் காட்டி போக சொல்லுகிறார். உடனே இனியா போனை எடுக்கப் போக கோபி என்ன பண்ண போற என்று கேட்கிறார் போன் வேணும் என்று சொல்ல அதற்கு ஏன் இங்கே என்ன நடக்குது நாங்க சொல்லணும் இல்ல அங்க என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கணுமா என்று கேட்டுவிட்டு இதுக்கு மேல உனக்கு எந்த பிரீடமும் கிடையாது என்று சொல்ல அசைன்மென்ட் ப்ராஜெக்ட் வரும் என்று சொல்ல இதுக்கு மேல உன் நம்பர் தேவையில்ல எதுவா இருந்தாலும் என் நம்பர் கொடு என்று சொல்லுகிறார்.

இது மட்டுமில்லாமல் இதுக்கு மேல நீ தனியா காலேஜ் போக தேவையில்லை பிக்கப் ட்ராப் நான் தான் பண்ணுவேன் என்று சொல்லிவிட்டு போனை எடுத்துக் கொண்டு சென்று விடுகிறார். உடனே இனியா அழ இதுக்கு மேல எங்களை நடிச்சு ஏமாத்தாத என்று ஈஸ்வரி சொல்லுகிறார். உடனே எழில் இனியாவிற்கு ஆறுதல் சொல்ல இந்த காலத்துல லவ் வரதெல்லாம் சாதாரணம்தான். ஆனா படிச்சு வேலைக்கு போகணும் என்று யோசிச்சு இதெல்லாம் நமக்கு தேவையான யோசிக்கணும் நீ செல்வி ஆன்ட்டி ஓட பையன லவ் பண்ணது கூட பிரச்சனை இல்லை என்று சொல்ல உடனே செழியன் மற்றும் ஈஸ்வரி இருவரும் கோபப்படுகின்றன. அவ லவ் பண்றது தப்பு அதுவும் அந்த ஆகாஷ் லவ் பண்ணது பெரிய தப்பு பேச தெரிஞ்சா பேசுற இல்லன்னா வாய மூடிட்டு நின்னுட்டு செழியன் திட்டி விட்டு இனியாவிடம் அப்பா சொன்னதுதான் இனிமேல் அவ கிட்ட பேசுற வேலை வெச்சுக்கிட்டேனா அவ்வளவுதான் என்று மிரட்டி விட்டு செல்ல எழில் இனியாவை அழைத்து செல்கிறார்.

மறுபக்கம் பாக்யா வாசலில் எதுவும் பேசாமல் அமைதியாக கண்கலங்கி உட்கார்ந்து கொண்டிருக்கிறார். இனியா வந்து பேச பாக்கியா எதுவும் பேசாமல் இருக்கிறாய் ஏதாவது பேசுமா திட்டவாச்சும் செய் நான் பண்ணது தப்புதான் என்னால ஏதாவது ஒரு பிரச்சனை வந்துகிட்டே இருக்கு ஆகாஷ் எனக்கு புடிச்சிருக்குமா நாங்க பிரண்டா தான் பேசணும் ஆனா அவன் எனக்கு ரொம்ப கன்ஃபெர்டபிள் கொடுத்தா நான் தான் அவனை புடிச்சிருக்கணும் முதல்ல சொன்னேன் என்று சொல்ல பாக்யா அதிர்ச்சி அடைகிறார். ஆனா ஆகாஷ் உங்க அம்மா என்ன படிக்க வைக்கிறாங்க அவங்களுக்கு என்னால துரோகம் பண்ண முடியாது என்று சொன்னான் ஆனால் அவனை நான் தான் கன்வின்ஸ் பண்ண என்று சொல்லி அழுகிறார். ஏதாவது பேசுமா என்று கெஞ்ச என்ன பேச சொல்ற என்று கோபப்படுகிறார். பாக்கியா என்ன கேட்கிறார்?அதற்கு இனியா என்ன சொல்லப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Episode Update 10-03-25
BaakiyaLakshmi Serial Episode Update 10-03-25BaakiyaLakshmi Serial Episode Update 10-03-25