Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ராதிகா கொடுத்த ஷாக், ஜெனி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial episode update 10-05-24

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி கிச்சனுக்கு வந்து சுடு தண்ணீர் கேட்க டல்லாக இருக்கும் அவரை பார்த்ததும் பாக்யா நைட்டு சரியா தூங்கலையா என்று கேட்க ஈஸ்வரி அதெல்லாம்‌ நல்லா தான் தூங்குனேன் என சொல்கிறார். செல்வி ஏம்மா சந்தோஷத்துல தூக்கமே வரலையா என்று கேட்கிறார்.

ஈஸ்வரி எனக்கு என்ன சந்தோஷம் என்று கேட்க ஆமா கொல்லு பாட்டி ஆகி இப்போ திரும்பவும் பாட்டியாக போறீங்க உங்க மருமக கர்ப்பமாய் இருக்காங்க சந்தோஷமா இருக்க தானே செய்யும் என்று சொல்ல செல்வி வாய மூடிட்டு இரு என கோபப்படுகிறார். நீ இருக்கிறது தெரியாம பாக்கியா கிட்ட இத பத்தி பேசினது தப்பா போச்சு என்று கோபப்படுகிறார். நீ ஒரு முழுக்க இதை டமாரம் அடிக்காத என்று இனிய குழந்தையா இருந்ததுல இருந்து இங்கே வேலை பண்றேன் எதையாவது ஒரு விஷயத்தை வெளியே சொல்லியிருக்கேனா நானும் இந்த வீட்டில ஒருத்தி மாதிரி தானே என்று சொல்கிறார்.

அதன் பிறகு ஈஸ்வரி பாக்யாவை கூப்பிட்டு உட்கார வைத்து உனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும் எனக்கு புரியுது ராதிகாவுக்கு இந்த குழந்தை எல்லாம் பிறக்காது அதுக்கு நான் விடமாட்டேன். நீ ஒன்னும் கவலைப்படாத என்று சொன்ன நான் எதுக்கு அத்தை கவலை படனும் நானா வலியை தாங்கிட்டு பெத்துக்க போறேன் என்று சொல்ல செல்வி சிரிக்கிறார். கோபி பாவம் என்று பேச்சை ஆரம்பிக்க பாக்கியா எனக்கு நிறைய வேலை இருக்கு அத்தை மன்னிச்சுடுங்க என்று எழுந்து சென்று விடுகிறார்.

அதன் பிறகு அமிர்தா எழில் குழந்தை பற்றி பேச எழில் இப்போதைக்கு படம் பண்ணி நல்ல இடத்திற்கு வரணும் அதுக்கப்புறம் நம்ம ரொம்ப சந்தோஷமா இருக்கணும் குழந்தையை பத்தி எல்லாம் அப்புறம் யோசிக்கலாம் என்று சொல்கிறார்.

இதை தொடர்ந்து கோபி வாக்கிங் சென்று விட்டு வீட்டுக்குள் நுழைவது என்பது ராதிகாவிடம் இன்னைக்கு எல்லார்கிட்டயும் விஷயத்த சொல்லுகிறேன் என்று சொன்னது ஞாபகத்துக்கு வந்து என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார். எல்லோரும் டைனிங் ஹாலில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க இதுதான் சரியான சந்தர்ப்பம் சொல்லிவிடலாம் என்று பார்க்க ஈஸ்வரி கண்ணை காட்டி கோபியை திட்டி துரத்தி விட கோபி எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க இந்த நேரத்துல இதை சொல்ல வேண்டாம் என்று மேலே செல்கிறார்.

ராதிகா எல்லார்கிட்டயும் சொல்லிட்டீங்களா என்று கேட்க கோபி இல்லை என்று சொல்கிறார். எல்லாரும் ஒண்ணா உக்காந்து சந்தோஷமா இருக்காங்க இந்த நேரத்துல இதை சொல்லி அவங்கள கஷ்டப்படுத்த வேண்டாம் என்று கோபி சொன்னதும் அப்போ உங்களுக்கு என் குடும்பத்தோட சந்தோஷம் தான் முக்கியம் நான் இரண்டாவது பட்சம் தான் என்று கோபப்படுகிறார். நீங்களும் உங்க அம்மாவும் இப்படி பண்றத பார்க்கும்போது எனக்கு இன் செக்யூரிட்டி அதிகமாகுது, எங்க நீங்க என்ன விட்டுட்டு போய்ட்டீங்களோனு பயமா இருக்கு. நீங்க சொல்லலைன்னா நானே எல்லார்கிட்டயும் உண்மைய சொல்லிட்டு பேக்கை தூக்கிட்டு கிளம்பிட்டே இருப்பேன். நீங்க வந்தாலும் சரி வரலைன்னாலும் சரி என சொல்லி அதிர்ச்சி கொடுக்க இன்னைக்கு நைட்டுக்குள்ள சொல்லிட்டு இருக்கேன் அதுவரைக்கும் எனக்கு டைம் கொடு என்று கோபி கெஞ்சுகிறார்.

அடுத்ததாக ஜெனி குழந்தையோடு உட்கார்ந்திருக்க ஈஸ்வரி ஜெனியிடம் சுடு தண்ணி கேட்க அமிர்தா நீங்க இருங்க என்று சொல்லிவிட்டு சுடு தண்ணீர் கொண்டு போய் கொடுக்கிறார். பிறகு ஜெனி அமிர்தாவிடம் என்கிட்ட தானே பாட்டி கேட்டாங்க, அப்போ நான் தானே செய்யணும். பாட்டி அப்புறம் நான் வேலையே செய்யவில்லைனு தப்பா நினைச்சுப்பாங்க. என் வேலையை நான் செஞ்சுகிறேன் என்னால முடியலன்னா உங்க கிட்ட உதவி கேட்கிறேன் என அதிர்ச்சி கொடுத்து அங்கிருந்து நகர்கிறார்.

அடுத்து ஈஸ்வரி ரூமுக்கு வந்து குழந்தையை வச்சுட்டு இருந்ததுனால அமிர்தா தண்ணி கொண்டு வந்து கொடுத்தாங்க சாரி என்று சொல்ல ஈஸ்வரி அதெல்லாம் ஒன்னும் இல்ல என்று குழந்தையை வாங்கி கொஞ்சுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

baakiyalakshmi serial episode update 10-05-24