Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்கியவால் கோபி போட்ட நாடகம் அதிர்ச்சி கொடுத்த ராதிகா பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

Baakiyalakshmi Serial Episode Update 10-06-22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்கியா கோபியை பார்த்து ஆதாரத்தோடு கேள்வி மேல் கேள்வி கேட்க ஒரு கட்டத்தில் மிரண்டுபோன கோபி ஆகியவை எப்படியாவது சமாளிக்கவேண்டும் உஷாராக இருக்க வேண்டும் என திட்டம் போட்டு அவர்களிடம் எதையெதையோ சொல்லி படுத்து தூங்குடா, உங்களையும் இந்த குடும்பத்தை விட்டுவிட்டு எங்கே போயிடப் போறேன் என கூறுகிறார்.

பிறகு கோபி இனி உஷாராக இருக்கும் என மனதுக்குள் நினைத்துக் கொள்ள பாக்கியா இவர் சொல்வது எதுவும் நம்பும்படியாக இல்லை என நினைக்கிறார். மறுநாள் காலையில் எழுந்து குடும்பத்தார் அனைவரிடமும் அன்பாக பேசுவது போல டிராமா போடுகிறார் கோபி. கோபி இவ்வாறு நடந்து கொள்வதை பார்த்து செல்வி இது ஏதோ பாசத்துல நடந்துக்கிற மாதிரி தெரியல, நீ கேட்ட கேள்வியால் தான் நடிக்கிற மாதிரி இருக்கு என கூறுகிறார்.

பிறகு கோபி ராதிகா வீட்டிற்குச் சென்று பெல் அடிக்க ராதிகாவின் அம்மா கதவைத் திறந்து அவரை உள்ளே அழைக்கிறார். இந்த நேரத்தில் ரூமில் இருந்து வந்த ராதிகா கோபி வெளியே செல்லுமாறு சத்தம் போட அவருடைய அம்மா நீ உள்ள போ நான் அவரிடம் பேசி அனுப்பி வைக்கிறேன் என கூறி கோபியிடம் பேசுகிறார்.

ராதிகா உங்க மேல ரொம்ப கோவமா இருக்கா, நீங்க எதுக்கு இப்படி உண்மையை மறைத்தீங்க என கேட்க கோபி உண்மையாகவே எனக்கு பாக்கியாவை பிடிக்காது, இவங்க ரெண்டு பேரும் இப்படி நெருங்கிய தோழிகளாக பழகுவாங்கனு நான் எதிர்பார்க்கல. உண்மைய சொன்னா ராதிகா என்னை விட்டு போய் விடுவார் என்பதால் தான் நான் மறுத்துவிட்டேன் அதைத் தவிர என் மனதில் வேறு எந்த தப்பும் இல்லை. ஆனா ராதிகா என்ன புரிஞ்சிக்காம பேசுறா, பாக்கியா விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவுடன் சேர்ந்து வாழப் போவது எல்லாம் உண்மைதான் என கூறுகிறார்.

இதையெல்லாம் கேட்ட ராதிகா மீண்டும் வெளியே வந்து நீங்க சொல்ற கதை எல்லாம் நம்ப தயாராக இல்லை வெளியே போங்க என திட்டி அனுப்பி வைத்திருக்கிறார். பிறகு ராதிகாவின் அம்மா கோபி மனதில் எனக்குத் தெரிந்து எந்த தப்பும் இல்லை, உங்களோடு வாழத்தான் ஆசைப்படுகிறார் எல்லாத்தையும் மறந்து விட்டு அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழச் சொல்கிறார். நீ வேண்டாம் என்ன சொன்னாலும் அவர் அவருடைய மனைவியை விவாகரத்து செய்ய தானே போகிறார் என கூறுகிறார். இதனால் ராதிகா யோசிக்க தொடங்குகிறார். மேலும் முழு எபிசோடு பார்க்க விஜய் டிவி அல்லது ஹாட்ஸ்டாரில் பாருங்கள் .

Baakiyalakshmi Serial Episode Update 10-06-22
Baakiyalakshmi Serial Episode Update 10-06-22