Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இனியா சொன்ன வார்த்தை, சந்தோஷப்பட்ட பாக்கியா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

baakiyalakshmi serial episode update 10-06-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் பாக்கியாவும் கோபியும் வீட்டுக்கு வர பாக்கியா கோபி இடம் என்னை எதுக்கு அமைதியா இருக்க சொன்னீங்க இனியாவுக்கு நிதிஷ் கூட கல்யாணம் பேசி முடிஞ்சதிலிருந்து ஆகாஷ் கிட்ட பேசுறது கிடையாது எப்பயாவது நேரில் பார்த்தா மட்டும்தான் எப்படி இருக்கீங்க என்னன்னு கேப்பா அவ்வளவு தான் என்று சொல்ல எனக்கும் புரியுது பாக்யா அவசரப்பட்டு எதுவும் பேச வேண்டாம் என்று தான் நான் அமைதியா இருந்தேன் நான் பார்த்துக்கிறேன் என்று கோபமாக பேச ஈஸ்வரி எதுக்கு அவன் கிட்ட கத்துக்கிட்டு இருக்க என்று வந்து கேட்கிறார். உடனே ஈஸ்வரியிடம் பாக்கிய விஷயத்தை சொல்ல போக கோபி கண்ணை காண்பித்து வேண்டாம் என சொல்லி விடுகிறார்.

உடனே ஒன்னும் இல்ல நாங்க சும்மா ரெஸ்டாரண்ட் விஷயம் பேசிகிட்டு இருந்தோம் என்று சொல்ல ஈஸ்வரி எதுவும் பேசாமல் சென்று விடுகிறார். பிறகு கோபி பாக்யாவை சமாதானப்படுத்தி நாங்க ரெண்டு பேரும் இனியா விஷயத்துல தப்பு பண்ணிட்டோம் பெரிய இடம் அவங்களே வந்து கேக்குறாங்கன்னு நம்பி கொடுத்துட்டோம் நான் இது எப்படியாவது சரி பண்றேன் பாக்கியா என்று கூறினார் சொல்லுகிறார். மறுபக்கம் சுதாகர் சந்திரிகா நித்திஷ் மூவரும் உக்காந்து கொண்டு இருக்க இப்ப எதுக்கு நீங்க இனியா ஒரு வர சொல்றீங்க என்று கேட்க நான் கொஞ்சம் பேசணும் அதனால தான் என்று சொல்ல இனியா வந்தவுடன் நீங்க நடக்கிற விஷயம் எல்லாத்தையும் எதுக்கு உங்க வீட்ல சொல்ற உங்க அம்மாவும் உங்க அப்பாவும் வந்து பேசினாங்க நீ வேலைக்கு போகணும்னு ஆசைப்பட்ட இல்ல நீ போய் நாளைக்கே ஜாயின் பண்ணிக்கோ என்று சொல்ல இனியா சந்தோஷப்பட்டு சென்று விடுகிறார். உடனே பாக்யாவிற்கு ஃபோன் போட்டு விஷயத்தை சொல்லுகிறார்.

பாக்யாவும் சந்தோஷப்பட்டு இதுக்கு அப்புறம் எந்த விஷயம் நடந்தாலும் என்கிட்ட சொல்லணும் நான் கஷ்டப்படுவேன் எல்லாம் நீ நினைக்க கூடாது என்று சொல்லிவிட சரிமா நான் டாடிக்கு விஷயத்த சொல்லிட்டு நான் ஆபீஸ்ல மெயில் போடறேன் என போனை வைக்க பாக்கியா ஒரு பெரியவர் சொன்ன ஸ்வீட்டை செய்து கொண்டிருக்க கவுன்சிலர் வந்து சாப்பிட உட்காருகிறார் அவருக்கு செல்வி முதலில் பரிமாற கொஞ்ச நேரத்தில் அன்னைக்கு சாப்பிட்டு விட்டு போன மூவரும் ஸ்வீட் சாப்பிட வருகின்றனர்.செல்வி சாப்பாடு பரிமாற கவுன்சிலர் பாக்யாவை கூட்டிட்டு பரிமாறச் சொல்லுகிறார் ஏதோ சாம்பார் ரசம் வச்ச மாதிரி இல்லாம ஏதோ ஸ்வீட் பண்றது சொல்லி ஆளுங்கள வர வச்சிருக்கீங்க இதெல்லாம் உங்களுக்கு தேவையா நாங்க ஹோட்டல்ல இழுத்து மூடறதுக்கு முன்னாடி நீங்களே மூடிட்டு போயிடுவீங்க போல என்று சொல்ல பாக்கிய அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அந்த பெரியவருக்கு ஸ்வீட் கொடுக்க அவர் சாப்பிட்டு விட்டு சந்தோஷத்தில் கண்கலங்கி பாக்யாவிற்கு நன்றி சொல்கிறார். எங்க அம்மா செஞ்சது மாதிரியே இருக்கு என்று சொல்லி உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார். பிறகு அவர்கள் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்க பாக்கியா வாங்க மறுக்கிறார். கொஞ்ச நேரத்தில் கவுன்சிலரும் சாப்பிட்டுவிட்டு கிளம்ப சாப்பாட்டுக்கு காசு கொடுக்க பாக்யா வியந்து பார்த்து காசு வாங்கிக்கொண்டு மீதி கொடுக்கிறார்.

மறுநாள் காலையில் இனியா வேலைக்கு கிளம்ப சுதாகர் சந்திரிகா என்ன பேசுகின்றனர்?அவர்களின் திட்டம் என்ன. என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyalakshmi serial episode update 10-06-25
baakiyalakshmi serial episode update 10-06-25