Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கர்ப்பமாக இருக்கும் ஜெனி, கொண்டாடும் ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

BaakiyaLakshmi Serial Episode Update 10-08-24

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஜெனி குடும்பத்தாரிடம் மயக்கமாகவும் ,வாந்தி வருவது போல இருப்பதாக சொல்ல கன்ஃபார்மாக கர்ப்பமாக தான் இருப்பாய் என ஈஸ்வரி சொல்கிறார். பிறகு செழியன் வந்தவுடன் செக் பண்ணி பார்த்து கன்ஃபார்ம் பண்ணுகின்றன.

எல்லோரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க இனியா பையன் குழந்தை வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு பாக்யா எந்த குழந்தை இருந்தாலும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லுகிறார்.

பிறகு ராமமூர்த்தி செழியனை கண்டுபிடித்து சந்தோஷப்படுகிறார். ஈஸ்வரி ஜெனி அம்மாவிற்கு போன் பண்ணி விஷயத்தை சொல்ல அவரும் கிளம்பி வருவதாக சொல்கின்றன.

எழில் செழியனை தூக்கி சந்தோஷமாக கொண்டாட பிறகு சண்டை போட்டுக் கொண்டே இருந்தீங்க இந்த குழந்தை எங்க இருந்து வந்தது என்று கிண்டலாக பேச அனைவரும் சிரிக்கின்றன.

ஈஸ்வரி குழந்தைக்கு பேர் வைப்பது வரை யோசித்துக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ஜெனியின் அப்பா அம்மா வருகின்றனர். சந்தோஷமாக பேசி சிரித்துக்கொண்டிருக்கின்றன.

பாக்கியாவிடம் ஜெனிக்கு சத்தான சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து அமிர்தா கிச்சனுக்கு வருகிறார்.

ஈஸ்வரி அமிர்தாவிடம் கேட்ட கேள்வி என்ன? அதற்கு அமிர்தா சொல்லப் போகும் பதில் என்ன? என்று இன்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம் .

BaakiyaLakshmi Serial Episode Update 10-08-24
BaakiyaLakshmi Serial Episode Update 10-08-24