Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்யா கேட்ட சத்தியம், சம்மதிப்பாரா இனியா? இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

BaakiyaLakshmi Serial Episode Update 11-03-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா எழில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.அவளுக்கு நம்ம இந்த வீட்ல என்ன குறை வச்சோம் அவளுக்கு என்ன பிரச்சனை நல்லா தானே பார்த்துக்கிட்டோம் அவ ரொம்ப டேலன்ட் ஆன பொண்ணு மூணு மாசத்திலேயே படிச்சு ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் மார்க் வந்தவ ஆனால் இப்படி பண்ணுவான்னு நினைக்கல நான் அவகிட்ட படிச்சு முன்னேறனும்னு சொல்லாத நாள் கிடையாது. உங்க அப்பாவும் பாட்டியும் சொல்லிக்கிட்டு இருக்க மாதிரி வேலைக்காரனோட பையன் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன்.

அது மட்டும் இல்லாம என்கிட்ட வந்து சொல்றா அவன் எல்லாம் இதெல்லாம் வேணாம்னு சொன்னா இவதான் பேசணும்னு சொன்னதா சொல்றா ஒருவேளை நான் இனியாவ தப்பா வளர்த்துட்டோம்னு தோணுது என்று வருத்தப்பட அப்படி எல்லாம் ஒன்னும் இல்லம்மா இனியாவுக்காக ரொம்ப சேக்ரிஃபைஸ் பண்ணி இருக்க நீ நல்லா தான் வளர்த்திருக்க அவகிட்ட நம்ம பேசலாம் என்று சொல்லுகிறார். அந்த ஆகாஷுக்கும் இது தேவையா? குடிகார புருஷன் கிட்ட செல்வி மாட்டிகிட்டு இவனால குடும்பம் முன்னேற போகுது என்று ரொம்ப கனவு கண்டுகிட்டு இருந்தா, மனசை அலைபாயவிட்டா எப்படி என்று கேட்கிறார். அவன் படிச்சு கலெக்டர் ஆனா அவங்க தம்பி தங்கச்சி லைஃப் மாறிடும் அவங்க குடும்பம் கரையேறும் இது மாதிரி பண்ணுவாங்கன்னு நான் நினைக்கல என்று பேசிக் கொண்டிருக்க செல்வி போன் பண்ணுகிறார் ஆனால் பாக்யா செல்வி போனை எடுக்காமல் இருக்க ஆகாஷிடம் செல்வி அழுது கொண்டு என் சோத்துல மண்ணள்ளி போட்டுட்ட என்று அழுது கொண்டே திட்டுகிறார்.

உன் மேல வச்சிருந்த நம்பிக்கை எல்லாத்தையும் இப்படி பொய்யாக்கிட்டயே என்று அழுகிறார். மறுநாள் காலையில் கோபி செழியன் ஈஸ்வரி எழில் நால்வரும் ஹாலில் காபி குடித்துக் கொண்டிருக்க இனியா கீழே இறங்கி வருகிறார். இனியாவின் முகத்தைப் பார்த்து அனைவரும் திரும்பிக் கொள்ள பாக்யாவை வந்து கிச்சனில் பார்க்கிறார் அவரும் எதுவும் கண்டு கொள்ளாததால் ஆளுக்குச் சென்று நிற்க எழில் அவரை உட்கார சொல்லுகிறார். காபி குடிக்கிறியா இனியா என்று கேட்க வேண்டாம் என்று சொல்லுகிறார் உடனே ஈஸ்வரி அவ பண்ண வேலைக்கு கொஞ்சிக்கிட்டு இரு என்று சொல்லுகிறார்.

என்கிட்ட ஏன் பேச மாட்டேங்கிறீங்க நான் செஞ்சது தப்பு தான் என்ன திட்டுங்க அடிங்க ஆனா பேசாம மட்டும் இருக்காதீங்க என்று சொல்ல, உடனே செழியன் நீ பண்ண வேலைக்கு, எவன பாத்தாலும் பல்ல காட்டுற அவன் பின்னாடியே போடுவியா என்று திட்ட கோபி செழியா என்று அதட்ட கிச்சனில் கவனித்த பாக்கியா வெளியில் வந்து என்ன வார்த்தை பேசுற இன்று செழியனை திட்டுகிறார். என்ன இருந்தாலும் நீ அவளோட அண்ணன் அவளை கண்டிப்பதற்கு அம்மா நான் இருக்கேன் அப்பா இருக்காரு அப்படியும் மீறி பேசணும்னா என்ன பேசணும்னு தெரிஞ்சு பேசு நம்ம வீட்ல இருக்குற பொண்ணு நீ அசிங்கப்படுத்தி பேசினால் வெளியே இருக்கிறவங்க எப்படி நினைப்பாங்க என்று கண்டிக்க ஈஸ்வரி அவனை எதுக்கு திட்டுற இவ பண்ணது தானே சொல்றான் என்று சொல்ல அதற்கு பாக்யா நீங்க செழியன் கிட்ட கண்டித்து இருந்தீங்கன்னா இப்போ நான் பேசியிருக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் உடனே இவளால தான் அவ அப்படி பேசுற என்று ஈஸ்வரி சொல்லுகிறார்

ரூமில் தனியாக இனியா அழுது கொண்டிருக்க பாக்யா வந்து போனை எடுத்துக் கொண்டு போக இனியா பாக்யாவை கூப்பிட்டு நீயாவது என்கிட்ட பேசுமா என்று சொல்ல பாக்யா செழியன் பேசுனது தப்புதான் ஆனா நீ அந்த அளவுக்கு இடம் கொடுத்து வச்சிருக்க உன் மேல தப்பு இருக்கிறதுனால தான் அப்படி பேசுறாங்க என்று சொல்லுகிறார். ஆனால் இனியா ஆகாஷ் நல்ல பையன் எனக்கு சப்போட்டா இருந்து இருக்கான் நான் என்ன சொன்னாலும் காது கொடுத்து கேட்பான் என்று சொல்லிக் கொண்டே இருக்க அப்போ வீட்ல இருக்கிறவங்க யாரும் உன்னை நல்லா பாத்துக்கலையா நீ சொன்ன விருப்பத்தை நிறைவேத்தலையா நான் உனக்கு எத்தனை நாள் சொல்லி இருக்கேன் படிச்சிட்டு வேலைக்கு போறது எவ்வளவு பெரிய விஷயம் என்று அவன் கலெக்டர் ஆவான் அவனுக்குன்னு ஒரு முயற்சி இருக்கு லட்சியம் இருக்கு உனக்கு என்ன இருக்கு என்று கேட்க இனியாவால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார்.

இதுக்கு மேல நீ படிச்சு எவ்வளவு பெரிய படிப்பு வேணும்னாலும் படி வேலைக்கு போ ஆனால் அதுக்குள்ள இது மாதிரி மனச அலைபாய விடாத அப்படின்னா எனக்கு சத்தியம் பண்ணு என்று சொல்ல இனியா யோசிக்கிறார்.

இனியா பாக்யாவிற்கு சத்தியம் செய்து கொடுக்கிறாரா? இல்லையா? ஈஸ்வரி பாக்யாவிடம் என்ன கேட்கிறார்? அதற்கு பாக்யாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Episode Update 11-03-25
BaakiyaLakshmi Serial Episode Update 11-03-25