தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இன்றைய எபிசோட் ஈஸ்வரி திரும்பி வந்த நிலையில் கோபி இனியாவுக்கு போன் செய்து உடனே நான் கிளம்பி வரேன் கவலைப்படாத அம்மாவை கண்டுபிடித்து விடலாம் என்று சொல்ல இனியா அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை பாட்டி திருப்பி வந்துட்டாங்க என்று சொல்ல கோபி முதல்ல உங்க அம்மாகிட்ட போன குடு என்று கூறுகிறார்.
இதனால் இனியாவும் பாக்யாவிடம் போனை கொடுக்க கோபி நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது இன்னைக்கு நைட்டுக்குள்ள ஏன் அம்மா உன் பொண்ணு இங்க இருக்கணும் என்று எச்சரிக்கை விடுக்க பாக்கியா போனை வைத்து விடுகிறார். திரும்பவும் கோபி போன் செய்ய ஈஸ்வரி சும்மா சும்மா போன் பண்ணிட்டு இருக்காத புது இடத்துக்கு வந்தா அப்படித்தான் இருக்கும் என்று சொல்லி போனை வைத்து விடுகிறார்.
இங்கே கேண்டினுக்கு வந்த கோபி அமிர்தா, அப்பா, ராதிகாவிடம் ஈஸ்வரி காணாமல் போன விஷயத்தை சொல்லி கோபப்படுகிறார். ராமமூர்த்தி இடம் அம்மாவும் இனியாவும் இங்கு வரவில்லை என்றால் நானே போய் கூட்டிட்டு வருவேன் என்று சத்தம் போடுகிறார்.
கோபியை தனியாக அழைத்துச் சென்ற ராதிகா நீங்க போய் கூட்டிட்டு வருவீங்களா சரி போங்க ஆனா திரும்பி இங்க வரக்கூடாது என்று ஷாக் கொடுத்து இங்கிருந்து கிளம்ப கோபி பல்பு வாங்கிக் கொண்டு வெளியேறுகிறார்.
அடுத்ததாக பாக்கியா மற்றும் இனியா இருவரும் ஸ்டேஷனரி பொருட்களை வாங்க கடையை தேடி வர அப்போது அமிர்தா போன் செய்ததால் பாக்கியா போன் பேச இனியா ஹோட்டல் ஒன்றில் ஸ்டேஷனரி கடை எங்கே இருக்கும் என்று விசாரித்துவிட்டு வெளியே வரும் போது ரவுடிகள் சுற்றி வளைக்கின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.