Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கதவை திறக்காத நிதிஷ், இனியா எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

BaakiyaLakshmi Serial Episode Update 12-06-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா வேலை முடித்து விட்டு வீட்டுக்கு வர காலிங் பெல் அடித்தும் நிதீஸ் வேண்டும் என்ற திறக்காமல் இருக்கிறார் பிறகு கதவை தட்ட கதவில் வந்து பார்த்தவுடன் இனியாவின் முகம் தெரிய வேண்டும் என்று உட்கார்ந்து கொள்கிறார். இனியா போன் பண்ணி பார்க்க போனை கட் பண்ணி விட வெயிட் பண்ணி பார்த்துவிட்டு வேறு வழி இல்லாமல் கேப் புக் பண்ணி இனியா சென்று விடுகிறார் கொஞ்ச நேரம் கழித்து சத்தத்தை காணம் என்று வெளியே வந்து பார்க்க இனிய ஆளில்லாததால் எங்கேயாவது போகட்டும் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விடுகிறார் சந்திரிகா வந்து ரொம்ப நேரமா காலிங் பெல் அடிச்சிட்டு இருந்தது யார் என்று கேட்க இப்ப வந்து கேளு என்று சொல்லுகிறார் உள்ள முக்கியமான விஷயமா பேசிக்கிட்டு இருந்தா அதனால தான் வர முடியல என்று சொல்ல ஏதோ புட் டெலிவரி என்று மாற்றி சொல்ல சந்திரிகா இனியும் வரலையா என்று கேட்கிறார்.

டாடி தான வேலைக்கு அனுப்புனாரு. அவர்கிட்டயே போய் கேளு என்று சொல்ல சந்திரிகா சென்று விடுகிறார் மறுபக்கம் இனியா பாக்யாவின் ரெஸ்டாரண்டுக்கு வந்து ரெஸ்டாரன்ட் எப்படிமா போகுது ஏதாவது டெவலப்மெண்ட் இருக்கா என்று கேட்க எந்த டெவலப்மென்ட்டும் இல்லை என்று செல்வி சொல்லுகிறார் இந்த ஏரியாவுல வயசானவங்க அதிகமா இருக்காங்க அதுவும் இல்லாம பாட்டு பாடுறவங்களும் இருக்காங்க மியூசிக் தீம்ல ஏதாவது யோசிச்சு ஐடியா கிடைக்கும் நானும் யோசிக்கிறேன் என்று சொல்ல பாக்யா இதுவும் நல்லா ஐடியா தான் என்று சொல்லுகிறார் சாப்பிடறியா இல்லையா என்று கேட்க இல்லம்மா இன்னைக்கு நம்ம எல்லாரும் வீட்ல ஒண்ணா உக்காந்து சாப்பிடலாம் அது மட்டும் இல்லாம நான் இன்னிக்கு ஒரு நாள் அங்கே தூங்கிக்கவா என்று கேட்கிறார்.

உடனே பிரச்சனை என்று நினைத்து விடாதே ரொம்ப நாளாச்சு அதனால தான் என்று சொல்ல பாக்யா சரி நீ போன் பண்ணி சொல்லிட்டு நான் செல்வி கிட்ட சொல்லிட்டு வரேன் என்று சொல்லுகிறார் மறுபக்கம் வீட்டில் ஈஸ்வரி இனியா செழியன் ஜெனி நாள் வரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க ஈஸ்வரி சீக்கிரமா குழந்தை பெத்துக்க இனியா எல்லா பேரும் பசங்களையும் பார்த்துட்டு நான் நிம்மதியா கண்ண மூடிடுவேன் என்று பேசிக்கொண்டு இருக்க இனியாவின் முகம் மாறுகிறது.

உடனே பாக்கி அனைவரையும் சாப்பிட கூப்பிட கோபி வந்து இனியாவிடம் நலம் விசாரித்து விட்டு நீங்க போய் சாப்பிடுங்க நான் சாப்பிடுவேன் என சொல்லிவிட்டு ஹாலில் உட்கார்ந்து விடுகிறார் ஆனால் ஈஸ்வரி கிச்சனிலிருந்து கோபியை பார்த்துவிட்டு அவன் சாப்பிடலாம் ஆனால் சாப்பிட மாட்டோம் நீ ஏதாவது சொல்லு ஒன்னு தான் அப்படி சொல்லி இருப்பான் என்று சொல்ல பாக்யா கோபியை சாப்பிட கூப்பிட சொல்லுகிறார். கோபியும் வந்து உக்காந்து சாப்பிட்டுவிட்டு பாக்கியாவுக்கு தேங்க்ஸ் சொல்ல,சூப்பரா இருக்குமா கிரேவி என்று இனியா சொல்லுகிறார்.

பிறகு ஈஸ்வரி கோபி இருவரும் பேசிக் கொண்டதற்கு நீங்க எப்ப வீட்டுக்கு வரப் போறீங்க என்று கேட்டுக் கொண்டிருக்கிற அந்த நேரம் பார்த்து சுதாகர் ஃபோன் போடுகிறார். சுதாகர் என்ன கேட்கிறார்? அதற்கு கோபி பதில் என்ன? ஈஸ்வரி என்ன சொல்ல போகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Episode Update 12-06-25
BaakiyaLakshmi Serial Episode Update 12-06-25