தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்யாவின் மிரட்டலால் செழியன் ரூமுக்கு சென்றுவிட திரும்பவும் தூக்கம் வராமல் மாலினியை பார்க்க கிளம்ப பாக்கியா ஷோபாவில் படுத்துக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
இதனால் வேறு வழி இல்லாமல் திரும்பவும் ரூமுக்கு சென்று படுத்து விட தூக்கம் வராமல் தவிக்கிறார். மறுநாள் காலையில் கணேஷ் பாக்கியாவின் வீட்டிற்கு வர அமிர்தா வெளியே வந்து தண்ணீர் தெளித்து கோலம் போட கணேஷ் மறைந்திருந்து இது அனைத்தையும் பார்க்கிறார். அமிர்தா கழுத்தில் தாலி தொங்குவதை பார்த்து டென்ஷன் ஆகிறார்.
ஒரு கட்டத்தில் கோபத்துடன் உள்ளே நுழைய முயற்சி செய்ய பாக்யா வெளியே வருவதைப் பார்த்து ஓடி ஒளிந்து கொள்கிறார். பாக்கியா கேட்டின் பக்கத்தில் யாரோ நின்றது போல இருக்கிறது என்று சொல்லி வெளியே வந்து பார்க்க கணேஷ் அங்கிருந்து ஓடி விடுகிறார்.
அதைத்தொடர்ந்து வீட்டில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் போது செழியன் ஜெனியை ஓவர் பாசத்துடன் கவனித்துக் கொள்ள எல்லோரும் அவரை கலாய்த்து கொண்டிருக்கின்றனர். இந்த நேரம் பார்த்து காலிங் பெல் அடிக்க பாக்கியா கதவை திறக்க மாலினி வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கிறார். செழியன் இல்லையா என்று கேட்க பாக்யா செழியனை கூப்பிட மாலினியின் குரல் கேட்டு செழியன் அதிர்ச்சி அடைகிறார்.
அதனைத் தொடர்ந்து மாலினி நான் செழியனோட பிரண்ட், கூட வேலை செய்றவ என்று சொல்லி தன்னை அறிமுகம் செய்து கொண்டு சமையலறை வரை வந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் எல்லோரிடமும் அறிமுகம் செய்து கொள்கிறார். மாலினியின் வில்லத்தனமான பேச்சு செழியனின் திருட்டு முழி இதையெல்லாம் வைத்து பாக்யாவுக்கு சந்தேகம் வருகிறது.
பிறகு மாலினி பாக்யா மற்றும் ஜெனியின் போன் நம்பரை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு கிளம்புகிறார். போகும்போது சும்மா இது ஒரு சாம்பிள் தான் இனி அடிக்கடி வருவேன் வரும்போது உண்மைய சொல்லாம இருக்க மாட்டேன் என செழியனை மிரட்டி செல்கிறார் மாலினி. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
