Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ராமமூர்த்தி இடம் சண்டை போட்ட கோபி. கோபியை கடுப்பேற்றிய பாக்யா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial episode update 13-01-23

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி வாக்கிங் சென்றிருக்கும்போது எதிரே பாக்கியா மற்றும் செல்வி வர இருவரையும் நக்கலாக பேசிவிட்டு செல்கிறார்.

பிறகு கோபி ஒரு இடத்தில் நின்று எக்சர்சைஸ் செய்து கொண்டிருக்கும் போது அங்கே வரும் பாக்கியா முடியை அவிழ்த்துவிட்டு ஸ்டைலாக நடந்து கோபியை வெறுப்பேத்துகிறார். அடுத்த கோபி தன்னுடைய நண்பனை சந்தித்து பாக்கியா ரொம்ப சந்தோஷமா இருக்கா, என் கூட இருக்கும்போது ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தா மாதிரியும் இப்ப என்னமோ ரொம்ப சந்தோஷமா இருக்க மாதிரியும் காட்டுறா என புலம்புகிறார்.

பிறகு எழில் வீட்டின் வாசலில் இருந்து கழட்டி போட்ட கோபியின் பெயருக்கு பதிலாக பாக்கியலட்சுமி என்ற பெயர் பலகையை மாட்ட அதைப் பார்த்து தாத்தா ராமமூர்த்தியும் சந்தோஷப்படுகிறார். பிறகு கோபி இது போர்டை பார்த்துவிட்டு கடுப்பாகி வீட்டுக்குச் சென்று அப்பாவிடம் சண்டை விடுகிறார்.

அதன் பிறகு மீண்டும் வீட்டுக்கு வந்து வீட்டில் உள்ளவர்களிடம் சண்டை போடுகிறார் இந்த வீடு என் பேர்ல இருக்கு லோன் கட்டி நான் வாங்கி வச்சிருக்கேன். பிளான் பண்ணி என்ன வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்டேன் நான் உனக்காக ஒன்றும் இந்த வீட்டை விட்டு வெளியே போகல என் அம்மாவுக்காகவும் குழந்தைகளுக்காகவும் தான் போனேன். அப்படியே இந்த வீட்டை உன் பெயருக்கு ஆட்டைய போட்டு விடலாம் என்று பாக்குறியா என கோபமாக சண்டை போடுகிறார்.

என் வீட்ல உன்னோட நேம் போட மாட்டேன் வெட்கமா இல்லையா என கேட்க பாக்யா எதுவும் தெரியாமல் முழிக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 13-01-23
baakiyalakshmi serial episode update 13-01-23