தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட் காணவில்லை என எல்லா இடத்திலும் தேட பிறகு இனியா உன்னோட பர்ஸ் ஹோட்டலில் டேபிள் மேல இருந்தா மாதிரி இருந்தது என்று சொல்கிறார். சார் நான் போய் அத எடுத்துட்டு வரேன் என்று பாக்கியா கிளம்ப ஈஸ்வரி அதெல்லாம் வேண்டாம் அது போகணும்னு இருந்திருக்கு போகட்டும் விடு உனக்கு நான் வேற பர்ஸ் வாங்கி தரேன் என்று சொல்கிறார்.
பிறகு இவர்கள் எல்லோரும் சேர்ந்து காட்டுக்குள் வாழும் மக்களை சந்திக்க செல்கின்றனர். மறுபக்கம் கணேஷ் ரூமில் இருந்து வெளியே வர நல்லா தூங்கினீங்க அப்பா என்று கேட்க ஒரே அமிர்தா ஞாபகமாகவே பிறந்தது தூக்கம் வரல என்ன சொல்கிறார். ஃபேன் கூட போடாம ஏன் உக்காந்துட்டு இருக்கீங்க என்று கணேஷ் கேட்க கரண்ட் இல்லை என்று சொல்ல இபிக்கு போன் பண்ண போனை எடுக்கும்போது அது நிலா பாப்பாவுடன் இருவரும் இருக்கும் போட்டோவை பார்த்து யார் இந்த பாப்பா என்று கேள்வி கேட்கிறார்.
தெரிஞ்சவங்க குழந்தை என்று சொல்லி அவருடைய அப்பா சமாளிக்க காபி எடுத்துட்டு வர போன அவருடைய அம்மா வெளியே வர கணேஷ் திரும்பவும் அதை பற்றி கேட்க உன்னுடைய குழந்தை என உளறி விடுகிறார். இதனால் கணேஷ் எதுக்கு என்கிட்ட இருந்து உண்மையை மறைச்சீங்க என்று கோபப்படுகிறார். நான் போய் அமிர்தாவையும் நிலா பாப்பாவையும் தேடி கண்டுபிடித்து கூட்டிட்டு வரேன் என்று சொல்லி கிளம்ப சென்னையில் தெரிஞ்சவங்க இருக்காங்க அவங்க மூலமாக தேடி கண்டுபிடிக்கலாம் என்று சமாதானம் செய்கின்றனர்.
அடுத்ததாக காட்டுக்குள் வந்த இவர்கள் அங்கு வாழும் மக்களை சந்தித்து இனிய அவர்களுடன் பேசி தனக்கு தேவையான விஷயங்களை கேட்டு அறிந்து கொள்கிறார். அது நேரம் பார்த்து கோபி ஈஸ்வரிக்கு போன் செய்து எங்க இருக்கீங்க என்ன எது என்று விசாரிக்க ஈஸ்வரி பாக்யா பற்றி பெருமையாக பேசுகிறார்.
இதனால் கடுப்பாகும் கோபி போனில் நெட்வொர்க் இல்லாதது போல பேசி நடித்து போனை வைத்து விடுகிறார். பிறகு இவர்கள் ஹோட்டலுக்கு வர ஈஸ்வரி சப்பாத்தியும் செல்வி ஃபிரைட் ரைஸ் கேட்க பாக்கிய எங்க போனாலும் இதுதான் சாப்பிட்டீங்களா வித்தியாசமா ஏதாவது சாப்பிடலாம் நான் ஆர்டர் பண்றேன் என விதவிதமாக ஆர்டர் செய்ய அதை ஈஸ்வரி ஆச்சரியமாக பார்க்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.